Monday, April 30, 2012

தெரியுமா ? தெரியுமே !


* தலைக்கு உள்ளே இருக்கின்ற காதுகளினாலும், உடலாலும் மீன்கள் தண்ணீருக்குள்ளே, தங்களைச் சுற்றி எழும்
சப்தங்களை உள்வாங்கிக் கொள்கின்றன என்கிறது நேஷனல் வைல்ட்டு லைப் பெடரேஷன் ஆய்வு !
* இயற்கையாக மனிதர்களுக்கு வயது ஏறஏற முளையின் அளவு சிறியதாகிப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9
சதவீதம் மூளை தன்னுடைய கன அளவை இழக்கிறதாம் .இதனால் நினைவாற்றல் குறைகிறது . அதனால்தான்
ஞாபகமறதி ஏற்படுகிறது .
* ' ப்ரளீயந்தே அஸ்மின் தோஹா ' என்பது ப்ரதோஷம் என்ற சொல்லின் வடமொழி இலக்கணம் . அதாவது அனைத்து
தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள் .
* வள்ளலார் 30 . 1 . 1874 ஸ்ரீமுக வருஷம் தை மாதம் வெள்ளிக்கிழமையுடனான தைப்பூச நன்நாளில் நள்ளிரவு 12 மணிக்கு
சித்தியடைந்தார் .

அறிந்து கொள்வோம் !


* போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் -- ஜோன்ஸ் சால்க் .
* நெயில் பாலிஷில் உள்ள ரசாயனம் -- அசிடோன் .
* மத்திய காபி ஆராய்ச்சி நிலையம் -- பலேஹன்னூர், கர்நாடகாவில் உள்ளது .
* பெயின்ட் தொழிலில் வெளிப்படும் மாசு -- அலுமினிய மாசு .
* டெசிமல் முறைக்கு இந்தியா -- 1957 ம் ஆண்டு மாறியது .
* சீக்கியர்களின் 10வது குரு கோவிந்த்சிங்கின் மனைவி பெயர் -- மாதா சுந்தரி .
* ராயல் பெங்கால் புலிக்கு முன், இந்தியாவின் தேசிய விலங்கு -- சிங்கம் .
* ஆசியாட்டிக் சொசைட்டியை நிறுவியவர் -- வில்லியம் ஜோன்ஸ் .
* எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டபோது நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் -- பக்ருதீன் அலி அகமது .
* பீடியில் சுற்றப்பட்டிருக்கும் இலையின் பெயர் -- டெண்டு இலை .
* கடந்த 1962 ம் ஆண்டு இந்தியா -- சீனா போர் நடந்தபோது, இந்தியாவின் ராணுவ அமைச்சராக இருந்தவர் --
கிருஷ்ண மேனன் .
* அதிக பிரிகுவன்சி கொண்டது -- மைக்ரோவேவ் .
---- தினமலர் .23 . 1 . 2012 .

Sunday, April 29, 2012

வலை பாயுதே !


** சமையல் நிகழ்ச்சிகளில் சொல்வதைப் போல் எதையும் நைசாக அரைக்க முடிவது இல்லை. மிக்ஸியில்
அரைக்கும்போது, யாருக்கேனும் தெரிந்துவிடும் !
** 'இறைவன் கதவை மூடினால் ஜன்னலைத் திறப்பார் ' என்பது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, 10 மணிக்கு
மேல் டாஸ்மாக்குக்குப் பொருந்தும் !
** ' நீங்க ஏன் அரசியலுக்கு வரவில்லை? -- ' எனக்கு அவ்வளவு நடிப்பு வராது ' -- கமல்! # ரசித்த பதில் !
** அவசரத்துக்கு அடகு வைக்கத்தான் வாங்கறேன்னு சொல்லி வாங்கும் நகைகளை ஆற அமரத் தெரிவு செய்வதன் மர்மம்
பெண்களுக்கு மட்டுமே தெரியும் !
** நல்ல லாயர் -- புத்திசாலி லாயர் என்ன வித்தியாசம் ? நல்ல லாயருக்கு லா தெரியும் . ஆனா, புத்திசாலி
லாயருக்கு ஜட்ஜையே தெரியும் ! # படிச்சது .
** சென்னைக்கு மிக அருகில் திண்டிவனமும் மிகமிக அருகில் அரக்கோணமும் இருப்பது ரியல் எஸ்டேட் ஆட்கள்
சொல்லித்தான் தெரிகிறது .
** கோபமா இருக்கோம்னு காட்ட நல்ல வழி... உப்புமா செஞ்சு வைக்கிறதுதான் . சீக்கிரமா சண்டை முடிவுக்கு
வந்துடுது !
--- சைபர் ஸ்பைடர் , ஆனந்த விகடன் . 25 .1 . 12 / 1 . 2 . 12 .

Saturday, April 28, 2012

குப்புறப் படுத்தால்...


தூக்கம் அனைத்து ஜீவராசிகளுக்கும் அவசியமானது . மனிதன் ஒரு குறிப்பிட்ட நேரம் தூங்கியாக வேண்டும் . அப்போதுதான் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும் .
தூங்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி தூங்குவார்கள் . மல்லாந்து படுப்பார்கள் சிலர் . ஒரு பக்கம் திரும்பிப் படுப்பார்கள் இன்னும் சிலர் . சிலருக்கு குப்புறப் படுத்தால்தான் தூக்கம் வரும் . குப்புறப் படுத்துத் தூங்குவதால் ஆபத்தாம் .
குப்புறப்படுத்து பல மணி நேரம் தூங்குவதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது . சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரகக் கற்கள் உருவாவதாக கண்டறியப்பட்டுள்ளது .
குடலைக் குறைக்கலாமா ...?
உடல் பருமன், கொழுப்புக்கு காரணம் அதிகம் சாப்பிடுவது. அதற்கு காரணம் அடங்காத பசி . அப்படிப்பட்ட ' நோயாளி'க்கு பசியைக் குறைக்க ஆலோசனை சொல்வது உண்டு . அதுபற்றி குடல் நோய் சிகிச்சை நிபுண்ர் கூறியதாவது :-
அதிக குண்டாக இருப்பவர்கள் பசியை குறைக்க பெருங்குடலின் நீளத்தை குறைப்பது உண்டு . அதன் மூலம் அடிக்கடி பசி எடுப்பதும், சாப்பிடுவதும் குறையும் . ஆனால், பெருங்குடலின் நீளத்தைக் குறைத்துக் கொள்வது நல்லதல்ல . அப்படிச் செய்தால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படாமலேயே போய்விடும் . அதனால் உடல் பலவீனம், சோர்வு, தளர்ச்சி ஏற்படலாம் . மேலும் அது விலை உயர்ந்த சிகிச்சை . அதனால் சுயமாக வாயை கட்டுவதும், உடற்பயிற்சியும் போதும் .
--- டாக்டர் S. A . சையத்சத்தார் . யுனானி மருத்துவம் , ஜனவரி 2012 .
--- இதழ் உதவி : M. செல்லத்துரை , திருநள்ளாறு .

Friday, April 27, 2012

அறிந்து கொள்வோம் !


** ஆங்கில கவிஞர் ஷேக்ஸ்பியர் கண்டுபிடித்த வார்த்தைகளில் ஒன்று -- Assassination -- படுகொலை .
** ஒரு பசு தன் வாழ்நாளில் கொடுக்கும் பாலின் உத்தேச அளவு -- 2 லட்சம் டம்ளர் .
** பச்சோந்தியின் நாக்கு நீளம் -- உடல் அளவில் 2 மடங்கு .
** குதிக்க முடியாத ஒரே விலங்கு -- யானை .
** எகிப்தின் தேசிய மலர் -- தாமரை ( நிம்பாபியா லோட்டஸ் ) .
** உலகிலேயே அதிக தபால் அலுவலகங்கள் கொண்ட நாடு -- இந்தியா .
** பட்டர்பிளையின் ( வண்னத்துப்பூச்சி ) உண்மை பெயர் -- பட்டர்பை .
** எதிரியுடனும் உணவருந்தக்கூடிய ஒரே உயிரினம் -- மனிதன் .
** மனித உடலின் வலுவான தசை நாண் -- நாக்கு .
** கத்திரியை கண்டுபிடித்தவர் -- லியர்னாடோ டாவின்சி .
** லைட் இயர் என்பது தூரத்துடன் தொடர்புடையது .
** இந்திய நாடு அதிக அளவில் மைக்கா தயாரிக்கிறது .
** லால் பகதூர் சாஸ்திரியை 'மேன் ஆப் பீஸ் ' என்று அழைப்பர் .
** சூரியனை பூமி சுற்றி வருகிறது என்பதை கண்டரிந்தவர் எய்ன்ஸ்டீன் .
--- தினமலர் , 30 .1 . 2012 .

Wednesday, April 25, 2012

ஆண்கள் மேதைகள் ஏன் ?


மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் இருக்கும் இன்ஃபீரியர்பரைடல்லாபுலே என்ற இடம், பெண் மூளையைவிட ஆணுக்கு சற்று அகன்று இருக்கும் . இதனாலேயே, அறிவியல் மேதை, கணித மேதை என்று பல ஆண்கள் புகழ்பெற முடிந்தது என்கின்றனர் அறிவியலார்கள் .
இமை மூடி...
ரத்த அழுத்தம் திடீரென கூடுகிறதா ? சும்மா இருந்தால் சுகம் கிடைக்கும் . என்ன ? புரியவில்லையா ? சற்றுநேரம் கண்களை மூடி எந்த சிந்தனையும் இல்லாமல் அமைதியாக இருந்தாலே இந்த திடீர் ரத்த அழுத்தம் குறைந்துவிடுமாம் . இங்கிலாந்து நாட்டு மருத்துவ நிபுணர்கள் " சும்மா இருப்பதே சுகம் " என்று கூறிய நமது சித்தர்களின் கூற்றுக்கான காரணத்தை இப்போது கண்டுபிடித்துள்ளனர் .
--- டாக்டர் S. A . சையத்சத்தார் . யுனானி மருத்துவம் , ஜனவரி 2012 .
--- இதழ் உதவி : M. செல்லத்துரை , திருநள்ளாறு .

Tuesday, April 24, 2012

கணபதி ஹோமம் .


வீட்டில் ஹோமங்களை அடிக்கடி செய்து கொண்டேயிருங்கள் . பிறறையும் செய்யச்சொல்லுங்கள் . ஹோமப்புகையும் மந்திரங்களும் உங்கள் வீட்டை மட்டுமல்ல; உங்கள் ஊரையே காப்பாற்றும் . இப்படி எல்லா ஊர்களிலும் எல்லோரும் செய்யத் துவங்கிவிட்டால், காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படுகிறது . உரிய காலத்தில் மழை பெய்யும் . இயற்கை சீற்றங்கள் ஏற்படாது . ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும் . எத்தனை அணுமின் நிலையங்கள் துவங்கினாலும் கவலைப்படவேண்டாம் . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழந்த போபால் விஷவாயு விபத்தில் தினமும் ஹோமம் செய்து கொண்டிருந்த ஒருவர் வீட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
--- ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் , மயிலாடுதுறை .
--- தினமலர் இணைப்பு , 26 . 1 . 2012 .

Monday, April 23, 2012

இன்சுலின் !


ஊசி மூலம் இன்சுலின் இனி வேண்டவே வேண்டாம் ... !
உடலிலே ஊசியால் குத்தி இன்சுலின் ஏற்றிக் கொள்ளும் சித்ரவதையிலிருந்து சர்க்கரை நோயாளிகளுக்கு இப்போது விடுதலை கிடைத்துள்ளது . ஸ்மார்ட் இன்சுலின் பம்ப் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது . அதன்மூலம் உடலில் இன்சுலினை தேவையான அளவுக்கு ஏற்றிக்கொள்ளலாம் . " பேஜர் " போல் வடிவமைக்கப்பட்டுள்ளது . சட்டைப் பைக்குள்ளோ அல்லது பெல்ட்டிலோ இதை இணைத்துக் கொள்ளலாம் . மெல்லிய பிளாஸ்டிக் குழாய் மூலம் இன்சுலின் உடலுக்குள் செலுத்தப்படுகிறது . செயற்கை கணையம் போல் செயல்படாமல் இந்தக் கருவியானது இயற்கையான கணையம் போல் செயல்பட்டு, தேவையான அளவு இன்சுலினை உடலுக்குள் செலுத்தும் . ஊசி மூலம் உடலுக்குள் இன்சுலினை செலுத்துவதைவிடவும் இந்தப் புதிய முறை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளது .இந்தக் கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்குப் பயிற்சி தேவை . டாக்டர்களே பயன்படுத்தும் முறையைக் கற்றுத் தருவார்கள் . ஆரோக்கியமான கணையம் இன்சுலினை எப்படி இடைவிடாமல் உடலின் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்யுமோ, அதைப் போலவே இந்த " ஸ்மார்ட் பம்ப்" பும் தேவையான இன்சுலினை தொடர்ந்து சப்ளை செய்யும் .
--- டாக்டர் S. A . சையத்சத்தார் . யுனானி மருத்துவம் , ஜனவரி 2012 .
--- இதழ் உதவி : M. செல்லத்துரை , திருநள்ளாறு .

Sunday, April 22, 2012

தாலியின் 9 நூலிழை .


தாலியின் 9 நூலிழை தத்துவம் .
மாங்கல்யச் சரடு 9 இழைகளைக் கொண்டுள்ளது . ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது . தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல், இத்தனை குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்ய சரடு அணியப்படுகிறது.
--- தினமலர் , 26 . 1 . 2012 .

Saturday, April 21, 2012

லேட்டஸ்ட் எஸ் எம் எஸ் .


** பிறந்த குழந்தை : அறை ஏன் இருட்டாக இருக்கிறது ?
நர்ஸ் : பவர்கட் ...
பிறந்த குழந்தை: அடக்கடவுளே... திரும்பவும் தமிழகத்தில்தான் பிறந்து இருக்கேனா ?

** எனக்கு ஞாபகசக்தி அதிகம்னு மார்தட்ற ஆளா நீங்க ? சின்ன டெஸ்ட் ! கடந்த 8 மாத, அதிமுக ஆட்சியில நீக்கப்பட்ட அமைச்சர்கள் பெயர்களை சொல்லுங்க ? எந்தெந்ததுறைகள், எத்தனை தடவை மாறியிருக்குன்னு கணக்கு சொல்லுங்க, பார்ப்போம் ? என்ன தலை சுத்துதா ?
--- தினமலர் , 26 . 1 . 2012 .

Friday, April 20, 2012

அம்மி மிதித்தல் .


மணமக்கள் அக்னியை வலமாக வருகிறபோது வலப்பக்கத்திலே ஒரு கல் இருக்கும் . மணமகளின் பாதத்தை அந்தக் கல்லின் மீது வைக்குமாறு மணமகன் செய்வான் .
அதன் பொருள் , ' இந்தக் கல்லைப்போல் உறுதியாக இரு ' என்பதாகும் . தன்மேல் வைக்கும் பாரம் அதிகமானால் இரும்பு வளையும் . ஆனால், கல்லோ வளையாது . மாறாக பிளந்துபோகும் .
மணமகளே, கற்பில் நீ கல்லைப்போல் உறுதியாக இரு . அந்தக் கற்பில் கொஞ்சம் உறுதி தளர்ந்ததால் அகலிகையைக் கல்லாயிருக்கச் சொன்னார் கவுதமர் . அதனாலேதான், நீ கல்லைப் போல் உறுதியாக இரு என்று கணவன் கூறும் பாங்கில் மனைவியின் காலைப்பற்றி அந்த அம்மியின் மீது வைப்பான் .
அம்மி மிதித்தபின் அருந்ததியை வணங்குவார்கள் . ' அருந்ததி ' என்ற சொல்லுக்கு கணவனின் சொல்லுக்குக் குறுக்கே நில்லாதவள் என்று பொருள் .
--- தினமலர் , 25 . 1 . 2012 .

Thursday, April 19, 2012

காற்றழுத்த தாழ்வுநிலை .

காற்றழுத்த தாழ்வுநிலை .
காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்படுவதை கண்டறிவது எப்படி ?
புயல் உருவாவதை, கம்ப்யூட்டர், செயற்கைகோள், ரேடார் கருவி கொண்டு கண்டறிகிறோம் . பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்படும் தகவல்களை கொண்டுதான் இறுதி முடிவெடுக்கப்படுகிறது .
கடல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருந்தால் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் . காற்றின் வேகம் 36 கி.மீ.க்கு மேல் இருந்தால் புயல் எச்சரிக்கை விடப்படுகிறது . ஒவ்வொரு ஊரும் கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதை அறிந்திருத்தல் அவசியம் . அத்தகைய வகையில் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள பலகையில் எம்.எஸ்.எல். எழுத்துக்களோடு அந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கும் .
---எஸ்.ஆர். ரமணன் , இயக்குனர் .வானிலை ஆராய்ச்சி நிலையம் , சென்னை .
--- தினமலர் , 25 . 1 . 2012 .

Wednesday, April 18, 2012

தொலைநோக்கி !


உலகின் மிகப்பெரிய சூரிய ஆய்வு தொலைநோக்கியை இந்தியா, அமைக்கிறது . காஷ்மீர் லடாக் பகுதியில், இமயமலை அடிவாரமான மோராக்கில் உள்ள பேன்கோங் ஏரி அருகில் இது அமைக்கப்படுகிறது .
2 மீட்டர் பிரிவு சூரிய ஆய்வு தொலைநோக்கி :
சூரிய ஒளியை உள்வாங்கும் லென்ஸ் பரப்பு அதிகமாக இருந்தா;ல், ஒவ்வொரு நொடியிலும் சேகரிக்கப்படும் கதிர்களின் அளவும் அதிகமாக இருக்கும் .இதில் 2 மீட்டர் குறுக்களவு கொண்ட லென்ஸ் இருப்பதால், துல்லியமான தகவல்களைத் திரட்ட முடியும் . இப்போது அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய சூரிய ஆய்வு தொலைநோக்கிகளின் லென்ஸ் குறுக்களவு 1.6 மீட்டர்தான் !
ரூ. 150 கோடி :
இந்த தொலநோக்கியை அமைக்கும் திட்டத்தின் மதிப்பீடு தொகை ரூ. 150 கோடி .
பேன்கோங்கில் ஏன் ?
* வருடாந்திர வெயில் அளவு அதிகமாக இருக்கும் பகுதிகளிலும், உயரமான பகுதிகளிலும் சூரிய ஆய்வுகளை
நடத்தினால்தான், துல்லியமான தகவல்களைத் திரட்ட முடியும் .
* பேன்கோங் ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரத்து 270 அடி உயரத்தில் உள்ளது ; இங்கு, வருடாந்திர வெயில் அளவும் அதிகம் .
* இது, வாகனப் போக்குவரத்தோ குடியிருப்புகளோ இல்லாத பகுதி . எனவே, நச்சு வாயுக்களால் சுற்றுப்புற வெப்பம்
அதிகரிக்காது . எனவே, சூரிய ஆய்வில் வெளி காரணிகளின் தலையீடு ஏற்பட வாய்ப்பில்லை .
சிறப்புகள் :
* ஜப்பானுக்கும் ஐரோப்பாவுக்கும் மத்தியில் சூரிய ஆய்வு தொலைநோக்கி எதுவும் இல்லை . அந்த குறைபாட்டை
இந்த தொலைநோக்கி போக்குகிறது
.* இந்த தொலைநோக்கி மூலம் பகலில் மட்டுமல்லாது இரவிலும் ஆய்வுகள் நடத்தலாம் . இப்படி இரட்டை பயன்பாடு கொண்ட தொலைநோக்கிகள், உலக அளவில் மிகவும் குறைவாகவே உள்ளன .
* சூரியனைச் சுற்றியுள்ள மிங்காந்தப் புலங்களின் தன்மை பற்றிய தகவல்களை இந்த தொலைநோக்கி மூலம் விரிவாக
அறியலாம் .
* அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் கிட் பீக் தேசிய ஆய்வுமையத்தில் மெக்மேத் பியர்ஸ் சூரிய ஆய்வு தொலைநோக்கி
உள்ளது . இதன் லென்ஸின் குறுக்களவு 1. 6 மீட்டர் .
* அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் பிக் பியர் ஏரி அருகில் உள்ள சூரிய ஆய்வு மையத்தில் உள்ள சூரிய ஆய்வு
தொலைநோக்கி உள்ளது . இதன் லென்ஸின் குறுக்களவும் 1.6 மீட்டர்தான் .
--- தினமலர் .22 . 1 . 2012 .

Tuesday, April 17, 2012

குறும்,புக் கேள்விகள் ! -- பதில்கள் !


* முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எத்தனை அடியாக உயர்த்தக் கோருகிறது தமிழகம் ? -- 142 .
* திருவள்ளுவர் தினம் என்று கொண்டாடப்படுகிறது ? -- தை மாதம் பிறந்த இரண்டாவது தினம் . அதாவது, பொங்கலுக்கு மறு நாள் .
* தமிழில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை ? -- 12 -- 18 -- 216 .
* மது வகைகளில் ஒரு ஃபுல் என்பது எத்தனை மில்லி அளவு கொண்டது ? -- 750 மில்லி .
* இந்திய தேசியக் கொடியில் இடம் பெற்றிருக்கும் சக்கரத்தில் உள்ள ஆரங்கள் எத்தனை ? -- 24 .
* " எங்கள் மாநில மேம்பாட்டிற்கு சேட்டிலைட் ஒன்றைக் கொடுங்கள் ! " என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் வைத்த முதல்வர் யார் ? -- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி .
--- ஆனந்தவிகடன் , 18 / 25 1 . 2012 .

Monday, April 16, 2012

அட்... இப்படியா சங்கதி ? !


' ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே '
பெண்களை மதிச்சு வாழறதுதான் நம்ம நாட்டோட பாரம்பரியம் . அப்படியிருக்கிறப்ப ... நல்லது, கெட்டது நடக்குறதுக்கு பெண்கள்தான் காரணம்னு தப்பான அர்த்தத்துல நிச்சயம் சொல்லியிருக்க மாட்டாங்க . நாமதான் அப்படி புரிஞ்சுகிட்டோம் . உண்மை என்னன்னா... ஒரு குடும்பத்துக்கு நல்லது ஏற்படுத்துறதும் பெண்கள் தான், அதேசமயம் குடும்பத்துக்கு ஏதாவது தீங்கு வரப்போகுதுன்னா முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு அதை அழிச்சு, குடும்பத்தைக் காப்பாத்தறதும் பெண்கள்தான் .
மக்கா... இனியாச்சும் பழமொழிகள கொலை மொழியா மாத்தாம... நிசத்தைப் புரிஞ்சு பேசிப் பழகுங்கோ !
---- மெய்யழகன் , அவள் விகடன் 15 . 1 . 2010 .

Sunday, April 15, 2012

கரும்புக் கவிதைகள் !


உந்தன் மண்ணைத்
தொட
மாட்டேன்
எந்தன் மண்ணை
விட
மாட்டேன் !

தும்பிக்கும் வேண்டும்
விடுதலை
தமிழ்த்
தம்பிக்குத்
தெரியும்
அதன்
விலை !

ழகரம்
தமிழின்
சிறப்பாகும்
அதை
உரசிடப்
பிறக்கும்
நெருப்பாகும் !

தமிழை ஏன்
படிக்க
வேண்டும்
அதைத்
தாய்ப்பால்
போலே
குடிக்க
வேண்டும் !

தமிழைக் கல்வியில்
நிலைநாட்டு
பிற
மொழிகளும்
கற்றுத்
திறங்காட்டு !
--- கவிஞர் அறிவுமதி !
--- ஆனந்தவிகடன் , 18 . 1 . 2012 .

Saturday, April 14, 2012

கரும்புக் கவிதைகள் !


ஆளூமைப் பண்பை
வளர்த்துக்
கொள்
நீ
அடிநிலை
மனிதரை
அணைத்துக்
கொள் !

எத்தனை மொழியும்
கற்றுக்
கொள்
நம்
இனத்
தமிழ்
முதலாய்ப்
பெற்றுக்
கொள் !

அன்னை மானம்
இழக்காதே
உன்
அண்ணை வீரம்
மறக்காதே !

முற்றும் முடிந்ததாய்
நினையாதே
முத்து
மூட்டிய
நெருப்பு
அணையாதே !

தமிழைத் தாழ்வாய்ப்
பழிக்காதே
உலகத்
தாய்க்
கரு
தன்னை
அழிக்காதே !
--- கவிஞர் அறிவுமதி !
--- ஆனந்தவிகடன் , 18 . 1 . 2012

Friday, April 13, 2012

கரும்புக் கவிதைகள் !


ஆண்பால் பெண்பால்
பார்க்காதே
நீ
ஆளுமைப் பண்பைத் தூர்க்காதே !

எதிர்க்கத் துணிந்தால்
தமிழ்
மீளும்
எதற்கும் துணிந்தால்
தமிழ்
ஆளும் !

தமிழைத் தேடி
நட்பாக்கு
அவர்
தாழ்வினைப்
போக்கித்
தெம்பாக்கு !

மதங்களைத் தாண்டி
தமிழரில்
இணைவோம்
மகிழ்வுடன் நெருங்கிக்
குறளினில்
நனைவோம் !

இசையும் ஆடலும்
இனத்தின்
மாட்சி
அவற்றை
இழந்ததால்தானே
இத்தனை
வீழ்ச்சி !

எல்லா மொழியும்
வாழட்டும்
எம்
தமிழே
எம்மை
ஆளட்டும் !
--- கவிஞர் அறிவுமதி !
--- ஆனந்தவிகடன் , 18 . 1 . 2012 .

Thursday, April 12, 2012

கரும்புக் கவிதைகள் !


பழங்குடி அறிவைத்
தேடிப் போ
அவர்
வளங்களைத்
திருடுதால்
சாடிப் போ !

ஆதித் தமிழை
மறுக்காதே
நீ
ஆணி
வேரை
அறுக்காதே !

பொங்கல் விடுமுறை
நீட்டச்
சொல்
பிள்ளையைப்
பிறந்த
மண்ணுக்குக்
கூட்டிச்
செல் !

குழந்தையைக்
கொஞ்ச
நேரம்
எடு
நீ
குழந்தைமை
கொண்டு
வாழ்வு
நடு !
--- கவிஞர் அறிவுமதி !
--- ஆனந்தவிகடன் , 18 . 1 . 2012 .

Wednesday, April 11, 2012

திசை .


ஆயுளை விரும்புகிறவன் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டும், கீர்த்தியை விரும்புகிறவன் தெற்கு முகமாக உட்கார்ந்து கொண்டும், சம்பத்தை விரும்புகின்றவன் மேற்கு முகமாக உட்கார்ந்து கொண்டும், சத்தியத்தை விரும்புகின்றவன் வடக்கு முகமாக உட்கார்ந்து கொண்டும் சாப்பிட வேண்டும் . சாப்பிடும் போது அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும்
நீலமேகச் சியாமளன் .
" தண்ணீருக்கு நிறம் கிடையாது . காற்றுக்கும் நிறம் கிடையாது . ஆனால், நீர் கடலாகவும், காற்று வானமாகவும் பரந்து விரிந்து கிடக்கும் போது பார்ப்பவர் கண்களுக்கு நீல நிறமாகத் தெரிகிறது . எல்லா இடத்திலும் பரந்து அகன்று நிற்கும் இந்த பொருள்கள் நீல நிறமாக இருப்பதைப் போலவே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளான மகாவிஷ்ணுவும் நீல நிறமாகக் காட்சி தருகிறார் . அதனால்தான் அவரை நீலமேக சியாமளன் என்று அழைக்கின்றனர் .
--- இந்து தர்ம சாஸ்திரம் ."
--- தினமலர் , இணைப்பு . 19 . 1 . 2012 .

Tuesday, April 10, 2012

' தானே ' புயல் .


" பொதுவாக ஒரு புயலைக் கணிக்க காற்று வீசும் திசை; காற்றின் அழுத்தம் ; ' ரேடார் ' , கம்ப்யூட்டர் பதிவுகள் என நான்கு அம்சங்கள் முக்கியம் . காற்றின் திரட்டு மொத்தமாக மேலே எழும்பும் . அப்போது அதன் குமிழ்ப் பகுதி சிதைந்துவிட்டால் காற்று நாலா பக்கமும் வீசும் . மாறாக, சிதையாமல் இருந்தால், ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டும் அதன் வேகம் உக்கிரமாக இருக்கும் . இதில் பத்து சதவிகிதம் முன்கூட்டி தெரிந்தாலே போதும், புயல் பாதிப்பு குறித்த எச்சரிக்கை விடப்படும் .
எழுபதுகளில்தான் புயலுக்கு பெயர் வைக்க ஆரம்பித்தார்கள் . முதலில் உலக நாடுகள் முழுமைக்கும் என்றிருந்த விதி, பின்னர் ஆசிய நாடுகள் என்கிற அளவில் சுருங்கிப் போனது . இதனை ' என்விரான்மெண்டல் கவுன்ஸில் ஃபார் ஆசியா -- பசிபிக் ' என்கிற அமைப்புதான் கட்டுப்படுத்துகிறது .
இந்தியா, மியான்மர், தாய்லாந்து, வங்காள தேசம், மாலத்தீவு, பாகிஸ்தான், இலங்கை, ஓமன் உள்ளிட்ட எட்டு உறுப்பு நாடுகள் இதில் அடக்கம் . முதலில் புயலுக்குப் பெண் பெயர்தான் வைக்கப்பட்டது . அமெரிக்காவில் அதற்கு பலத்த எதிர்ப்பு . அதனால் பொதுவான பெயர் தேர்வு செய்யப்பட்டது .
புயலுக்கு கடந்த முறை மியான்மர் நாடு பெயர் வைத்தது . இந்த முறை வாய்ப்பு நமக்கு . இப்போது அடித்த ' தானே ' புயலுக்கு ' தேன் ' என்பதுதான் ஒரிஜினல் பெயர் . பெயர் பொருத்தம் சரியாக இருக்காது என்பதால் ' தானே ' என்று வைத்தோம் . "
--- ரமணன் , இயக்குனர் , சென்னை வானிலை ஆய்வு மையம் .
--- குமுதம் , 25 . 1 . 2012 .

Monday, April 9, 2012

மிக மெல்லிய லேப்டாப் .


மிக மெல்லிய லேப்டாப் ஏசர் நிறுவனம் அறிமுகம் .
தைவானை தலைமையகமாகக் கொண்ட ஏசர் நிறுவனம், கம்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது . இந்நிலையில் உலகிலேயே மிக மெல்லிய லேப்டாப் கம்யூட்டரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது . எஸ் 5 எனப்படும் இந்த லேப்டாப், 34 செ.மீ ( 13.3 இஞ்ச் ) அளவு திரையும், 15 மி.மீ, தடிமனும், 1.35 கிலோ எடையும் கொண்டது .
இதுபோன்ற மிக மெல்லிய லேப்டாப்புகளை ' அல்ட்ராபுக் ' என்றழைக்கின்றனர் . இந்த பிரிவில் பல நிறுவனங்கள், லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றன . மைக்ரோ சாப்ட் நிறுவனம் அதன் புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர், விண்டோஸ் 8ல் இயங்கும் அல்ட்ரா புக்கை அறிமுகப்படுத்த ஏசர் நிறுவனம் திட்டமிடுள்ளதாக அதன் தலைமை செயலதிகாரி வாங் தெரிவித்தார் .
---- தினமலர் , 14 . 1 . 2012 .

Sunday, April 8, 2012

ஏடிஎம் -ல் மாற்றம்


பணத்தை உள்ளே இழுக்காது . ஏடிஎம் இயந்திரத்தில் மாற்றம் .
ஏடிஎம் இயந்திரங்களில் கார்டை நுழைத்து, தேவையான பணத்தை குறிப்பிட்டவுடன், சில நொடிகளில் வாடிக்கையாளர் கேட்ட பணம் வெளியே வரும் . இயந்திரத்தில் வரும் பணத்தை, வாடிக்கையாளர்கள் உடனே எடுத்துக்கொள்ள வேண்டும் . குறிப்பிட்ட சில நொடிகள் வரை பணத்தை எடுக்காமல் இருந்தால், வெளியே தள்ளிய பணத்தை இயந்திரமே மீண்டும் உள்ளே இழுத்துக் கொள்ளும் . இத்தகைய இயந்திரத்தில் பணம் எடுக்க தாமதிக்கும் வாடிக்கையாளர்கள், பணம் எடுப்பதற்குள், இயந்திரத்துக்குள் போய் விட்டதாக புகார் கூறுகின்றனர் . மேலும், பணம் பெறவில்லை என்பதற்கான ரசீதை கேட்கின்றனர் . இதனால் இந்த ரிட்டிராக் ஷன் முறையை நீக்க வேண்டும் என்று பணம் செலுத்துவதற்கான இந்திய தேசிய கழகம், ஆர்பிஐயிடம் கோரிக்கை வைத்தது . இதை பரிசீலித்த ஆர்பிஐ விரைவில் இந்த முறையை நீக்க உள்ளது .
இது குறித்து, ஆர்பிஐ செயல் இயக்குனர் பத்மனாபன் கூறுகையில், " அனைத்து வாடிக்கையளர்களுக்கும் இதுபற்றிய முறையான அறிவிப்பு வெளியிடப்படும் . இனி, உங்கள் பணத்தை எடுக்க மறந்து, ஏடிஎம் மையத்தை விட்டு வெளியேறிவிட்டீர்கள் என்றால், அடுத்ததாக இயந்திரத்தை பயன்படுத்த வருபவர்களுக்கு அந்த பணம் கிடைத்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ." என்றார் .
--- தினமலர் , 14 . 1 . 2012 .

Saturday, April 7, 2012

வலை பாயுதே !


* குழந்தைகளின் குறும்புகள் எப்போதும் போலத்தான . அதை ரசிக்கவும் எரிச்சல் அடையவும் வைப்பது நம் மனநிலை மட்டுமே !
* ' கோ கிரீன் ' அப்பிடினு பெருசா பிளாஸ்டிக்ல பேனர் வெச்சிருக்கிறவங்களை என்ன செய்யலாம் ?
* நம் முட்டாள்தனத்தை, அதிகம் வெளிப்படுத்தாமல் இருப்பதில்தான் ... நம் ' புத்திசாலித்தனம் ' இருக்கிறது !
* ஆயிரம் டெக்னாலஜி வந்தாலும் ... இந்த கிழிக்கிற காலண்டருக்கு அடிச்சிக்கிற பழக்கம் வீட்ல போக மாட்டுது !
* பிறக்கையில் பெருமையுடன் பிறக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பது இல்லை ஆனால், இறக்கையில் பெருமையுடன் இறக்கும் வாய்ப்பு அனைவருக்கும் உண்டு !
* ' ஆனந்தத் தொல்லை'யுடன் மோதும் ' நண்பன் ' குழுவினருக்குத் தைரியம் அதிகம் . ' கான முயலெய்த அம்பினில்... ' குறள்தான் நினைவுக்கு வருது :) .
* இரவு நேரப் பேருந்துகளில், பின்னிருக்கும் நபரின் மீது ஒரு சந்தேகத்தோடே தூங்குகிறாள் முன் இருக்கையில் இருக்கும் பெண் !
* பிரதமரை வழையனுப்ப வந்த ஓ.பி.எஸ் --ஸிடம் , பிரதமர் ரகசியமாகச் கூறிய விஷயம்... ' சேம் பின்ச் ' !
* ஒருவன் தான் எவ்வளவு கெட்டவன் என்பதை மனைவியிடம் மட்டும் மறைக்காமல் காட்டிவிடுகிறான !
--- சைபர் ஸ்பைடர் , ஆனந்தவிகடன் . 11 . 1 . 2012 .

Friday, April 6, 2012

உழைப்பில் உள்ளது சந்தோஷம் .


ஒரு ஜப்பானிய ஜென்குரு முதுமையடைந்த பின்னரும் தோட்டத்தில் வேலை செய்ய வந்து விடுவார் . எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லையே என்று வருந்திய சீடர்கள் மண்வெட்டி, கடப்பாரை ஆகியவற்றை ஒளித்து வைத்து விட்டார்கள் . காலை தோட்ட வேலைக்கு வந்த குரு ஏமாற்றம் அடைந்தார் . மடாலயம் வந்த அவர் அன்று முழுவதும் உண்ணவே இல்லை . சீடர்கள் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டார் . உழைக்காதவனுக்கு உண்ண உரிமை இல்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் . வேறு வழியின்றி மறுநாள் மண்வெட்டியும் கடப்பாரையும் அவர் வசம் தரப்பட்டது !.
---' எப்போதும் சந்தோஷம் ' என்ற நூலில் , சுகி . சிவம் .
--- நூல் உதவி : R. கந்தசாமிசத்யா , அம்பகரத்தூர் .

Thursday, April 5, 2012

"வாசிப்பு வாழ்க்கைக்கு உதவுமா ? "


" நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொள்வதில் தவறு இல்லை . அறிஞர் அண்ணா அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் . அறுவைச் சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டபோது, ' இன்னும் ஒரு நாள் அதைத் தள்ளிப்போட முடியாதா ? ' என்று கேட்டார் அண்ணா . ' நீங்கள்தான் பகுத்தறிவுவாதி ஆயிற்றே , நீங்களூமா நல்ல நாள் எல்லாம் பார்க்கிறீர்கள் ? ' என்று சிரித்தபடியே கேட்டார் அமெரிக்க மருத்துவர் . ' ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருக்கிறேன் . இன்னும் ஒரு நாளில் முடித்துவிடுவேன் . அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது . அதனால்தான் அதற்குள் புத்தகத்தைப் படித்துவிட விரும்புகிறேன் ' என்றார் .
பகத்சிங்கைத் தூக்குத் தண்டனைக்காக அழைத்தபோதுகூட, ' இந்த புத்தகத்தின் இன்னும் சில பக்கங்களைப் படித்துவிட்டு வந்துவிடுகிறேன் ' என்றார் . அண்ணாவுக்கு மறுநாள் குறித்து நிச்சயம் கிடையாது . பக்த்சிங்குக்கோ மரணமே நிச்சயமாக இருந்தது . மரணம் குறித்தே கவலைப்படாமல் வாசித்தவர்கள் அவர்கள். வாசிக்கும்போது வாழ்க்கையைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் ? "
--- நானே கேள்வி... நானே பதில் !
--- ஆனந்தவிகடன் . 7 . 12 . 2011 .

Wednesday, April 4, 2012

அட...இப்படியா சங்கதி ?!


' மெத்த படிச்ச மூஞ்சூறு , கழனி பானையிலே விழும் '
' மூஞ்சூறு எல்லாம் எப்ப படிக்க போச்சு ? ' னு உங்களுக்குச் சந்தேகம் வரும் . இதுகூட நம்ம ஆட்களோட கைங்கர்யம்தான் . சாதம் வடிக்கிறப்ப நல்லா வெந்த பதம் வந்திருச்சுன்னா, அந்தச் சோறெல்லாம் ... பானயோட மேல் பகுதிக்கு வந்துரும். அதை வடிக்கிறப்ப தட்டு மேல வந்து நிக்கும் . வடிசட்டியில பானையைக் கவுத்தினா... வடிதட்டை மீறின சோறுங்க... வடிசட்டியில விழும் . அதைத்தான், ' மெத்த வடிச்ச முன்சோறு, கழுநீர் பானையில விழும்' னு சொல்லியிருகாங்க .
--- மெய்யழகன் , அவள் விகடன் , 15 . 1 . 2010 .

Tuesday, April 3, 2012

ஜோக்ஸ் .


* " நாளைக்கு எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்ணா, நீதாண்டா பார்த்துக்கணும் !"
" போ பாட்டி... நாளைக்கு எனக்கு ஸ்கூல் இருக்கு ! "

* " பொதுக்கூட்டத்துக்குத் தலைவர் ஹெலிகாப்டரில வருவாரா ... கார்ல வருவாரா ? "
" ஜாமீனில வர்றாராம் ! "

* " நீங்க இனிமே காரத்தைக் குறைக்கணும், ஷுகரைக் குறைக்கணும், குறிப்பா உடம்பைக் குறைக்கணும் ! "
" நீங்க ஃபீசைக் குறைக்கணும் டாக்டர் ! "

Monday, April 2, 2012

குறிப்புகள் !


* உலகின் முதல் மெட்ரோ ரயில் லண்டனில் 1863ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி தொடங்கப்பட்டது .
* இந்தியாவில் முதல் மெட்ரோ போக்குவரத்து கோல்கத்தாவில் ( 1984 ) தொடங்கியது .
* டில்லியில் ( 2003 ) , அதைத்தொடர்ந்து பெங்களூரில் ( 2011 ) ல் தொடங்கப்பட்டது .
* டில்லி மெட்ரோ ரயிலுக்கு சுரங்கப்பாதை அமைக்க பூமியை தோண்டிய போது பல அரிய பொருட்கள்
கிடைத்தன . அவற்றை தொல்பொருள் ஆய்வுத்துறையினர் உதவியுடன் மெட்ரோ அருங்காட்சியகமாக உருவாக்கியுள்ளனர் .
--- தினமலர் இணைப்பு 6 . 1. 2012 .

Sunday, April 1, 2012

குறும்புக் கேள்வி -- பதில் !


* மரண தண்டனைக்கு எதிரான உங்கள் கருத்தைப் பதிவுசெய்ய எந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவேண்டும் ? -- 92822 21212 .
* ' மன்மோகன் சிங் ரோபோபோல நடக்கிறார் ! ' என்று கமென்ட் அடித்த அரசியல்வாதி யார் ? -- தமிழக எதிர்க்
கட்சித் தலைவர் விஜயகாந்த் .
* தமிழ் இலக்கணத்தில் இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் என்ன வித்தியாசம் ? -- பிரித்தால் பொருள் தராதது
இரட்டைக்கிளவி ( உதாரணம் : சலசல, தடதட ) .
பிரித்தால் பொருள் தருவது அடுக்குத்தொடர் ( உதாரணம் : மேலும் மேலும், கூட்டம் கூட்டமாக ) !
* ஜனவரியை வருடத் தொடக்கமாகக் கொண்டிருக்கும் கிரிகேரியன் காலண்டரை உருவாக்கியவர் யார் ? --
பதிமூன்றாம் போப் கிரிகோரி .
* லோக்பால் அமைப்பு எத்தனை பேர்கொண்ட குழுவால் நிர்வகிக்கப்பட இருக்கிறது ? -- தலைவர் ஒருவர் உட்பட
ஒன்பது பேர் கொண்ட குழு .
* 2011 சாகித்ய அகாடமி விருதை எந்தத் தமிழ் எழுத்தாளர், எந்த நாவலுக்காக வென்றார் ? -- சு. வெங்கடேச ன் .
காவல் கோட்டம் .
* செல்போனுக்கு வரும் விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ் -- களுக்குத் தடை போட எந்த எண்ணுக்கு
' START DND ' என்று மெசேஜ் அனுப்ப வேண்டும் ? -- 1909 .
* உயர் ரக மதுபானங்களை விற்க தமிழக அரசு விரைவில் திறக்கவிருக்கும் கடைகளுக்கு என்ன பெயர்
சூட்டியிருக்கிறார்கள் ? -- எலைட் .
* முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ஆங்கிலப் படம் எது ? -- ' டேம் 999 .
* சமீபத்தில் இந்தியாவில் நூற்றாண்டு கொண்டாடிய பாடல் எது ? -- ஜன கண மன -- இந்தியாவின் தேசிய கீதம் !
--- ஆனந்தவிகடன் இதழ்களிலிருந்து .