Thursday, March 8, 2012

' கிரீன்விச் '

இரு நாடுகளுக்கிடையிலான நேர வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது ?
பூமியின் இடங்களைத் துல்லியமாக அடையாளப்படுத்த, உலக உருண்டையின் மத்தியில் பூமத்திய ரேகை, கிடைமட்டமாக அட்சரேகைகள், செங்குத்தாக தீர்க்கரேகைகள் என கற்பனைக் கோடுகளை வரைந்துள்ளனர் . ஒவ்வொரு ரேகையும் ஒரு ' டிகிரி ' என்று கணக்கு .
தீர்க்கரேகை அடிப்படையில்தான் சர்வதேச நேரம் கணக்கிடப்படுகிறது . தீர்க்கரேகைகளின் ' 0 ' டிகிரி ரேகை, கிரீன்விச் சர்வதேச நேரக் கணக்கின் மையப்புள்ளியாக அமைத்துள்ளனர் !
சர்வதேச நேரக்கணக்கில், ஒவ்வொரு தீர்க்கரேகையும் 4 நிமிடங்களைக் குறிக்கும் . அதாவது, கிரீன்விச்சில் மதியம் 12 மணி என்றால் அதற்கு அடுத்த ஒன்றாவது டிகிரி ரேகையில் உள்ள இடங்களின் நேரம் 12 மணி 4 நிமிடம் .
கிரீன்விச்சிற்கும் பிற இடங்களுக்கும் உள்ள ரேகை டிகிரி வித்தியாச அடிப்படையில் நேர வித்தியாசம் தீர்மானிக்கப்படுகிறது .
உதாரணமாக, கிரீன்விச் நேரத்திற்கும் நமது இந்திய நேரத்திற்கும் ஐந்தரை மணிநேரம் வித்தியாசம் . ஏனென்றால், நமது நாட்டுக்குரிய நேரக்கணக்கு தீர்க்கரேகையின் குறியீடு 82.5 டிகிரி . ஒரு டிகிரியின் மதிப்பு 4 நிமிடங்கள் ; எனவே 82.5 டிகிரியின் மதிப்பு ( 82.5 பெருக்கல் 4 ) 330 நிமிடங்கள் ; அதாவது 5 மணி 30 நிமிடங்கள் .
--- தினமலர் இணைப்பு . ஜனவரி 21 , 2011 .

No comments: