Tuesday, February 28, 2012

ஆரோக்கிய முத்திரைகள் !

வாதநீக்கி முத்திரை : இரு கைகளின் சுட்டுவிரல் மற்றும் நடுவிரலை மடக்கி அந்தந்த கையின் பெருவிரலின் அடிப்பகுதியில் இணைத்து கொஞ்சம் அழுத்தமாக வைப்பது ' வாத நீக்கி முத்திரை '. இந்த முத்திரையை வேளைக்கு 15 நிமிடங்கள் என தினமும் 3 வேளை செய்யலாம் . இது வாதப்பிரச்னைகள், தலைவலி, காதுவலி, பல்வலி, தொண்டை வலி ஆகிய பிரச்னைகளை நீக்குவதோடு, ஞாபகசக்தியையும் அதிகரிக்கும் .
மூட்டு முத்திரை : வலதுகை பெருவிரல் முனையோடு மோதிர விரல் முனையைச் சேர்த்து மற்ற விரல்களைத் தளர்வாக நீட்டவும் ; இடதுகை பெருவிரல் முனையோடு நடுவிரல் முனையைச் சேர்த்து மற்ற விரல்களைத் தளர்வாக நீட்டவும் . இந்த ' மூட்டு முத்திரை'யை வேளைக்கு 15 நிமிடங்கள் என தினமும் 4 வேளை செய்யலாம் . இது மூட்டுவலி, கை -- கால் வலியை நீக்குவதோடு எலும்பு தேய்மானத்தையும் தவிர்க்கும் .
--- தினமலர் இணைப்பு . ஏப்ரல் 10 . 2011 .

No comments: