Wednesday, February 8, 2012

' சன் ஸ்க்ரீன் லோஷன் '

சன் ஸ்கிரீன் லோஷன்களில் ஆயிலி ( எண்ணெய்ப் பசை ) மற்றும் மேட் ஃபினிஷ் என இரண்டு வகை உண்டு . வரண்ட சருமம் உள்ளவர்கள் ஆயிலி லோஷனைப் பயன்படுத்தலாம் . எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் ஆயிலி லோஷனைப் பயன்படுத்தினால், லோஷன் தடவிய உடனேயே வியர்க்க துவங்கிவிடும் . அவ்வகை சருமம் உள்ளவர்கள், மேட் ஃபினிஷ் சன் ஸ்கிரீன் லோஷனை உபயோகிக்கலாம் .
அனைத்து வகை சன் ஸ்கிரீன் லோஷன்களிலும் SPF ( sun protection factor ) என்ற ஓர் அளவு குறிக்கப்பட்டு இருக்கும் . ஒவ்வோர் அளவீட்டுடனும் ஐந்தைப் பெருக்கினால் வரும் நேரம் வரைதான் அந்த சன் ஸ்கிரீன் லோஷன் வேலை செய்யும் . SPF அளவுகள பத்தில் இருந்து கடைகளில் கிடைக்கிறது . குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் சன் ஸ்கிரீன் லோஷன்கள் அதன் செயல்பாட்டை நிறுத்திவிடும் . அதனால், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு லோஷன் தடவிய இடங்ககளைத் தண்ணீரால் கழுவிவிடுங்கள் !
--- வசுந்தரா , அழகுக் கலை நிபுணர் . ஆனந்த விகடன் , 9 . 3 .2011 .

No comments: