Monday, February 6, 2012

டிப்ஸ்...டிப்ஸ்...

* சப்பாத்தி, போளி...இதற்கெல்லாம் மாவு பிசையும்போது, தண்ணீர் மற்றும் பால் சேர்க்காமல கண்டென்ஸ்டு மில்க் ( மில்க் மெய்டு போன்ற ) விட்டுப் பிசைந்து தயாரித்தால்... சுவை அருமையாக இருக்கும் . இதேமுறையில் கோதுமை மாவைப் பயன்படுத்தி சிப்ஸ்கூட தயாரிக்கலாம் .
* உளுந்து இல்லாமல்கூட தோசை வார்க்கலாம் . அரிசியை நன்றாகக் கழுவி, அதில் ஒன்றரை மடங்கு புளிப்பான மோர் ஊற்றி, 2 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து, முந்தைய நாள் இரவே ஊற வைக்கவும் . மறுநாள், அந்த மோருடன் சேர்த்தே நைஸாக அரைத்து, தோசையாக வார்த்து, சூடாகப் பரிமாறுங்கள் . கல்லில் ஒட்டாமல் அருமையாகவும் தோசை வரும்
* வாயில் போட்டதும் கரையக்கூடிய முறுக்கு வேண்டுமா ... ஒரு ஐடியா ! மாவில் தண்ணீர் விட்டுப் பிசைவதற்கு முன், இரண்டு டீஸ்பூன் உலர்ந்த மாவை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து அரை நிமிடம் கிளறி இறக்கவும் . ஆறியதும் மீதி மாவில் அதைக் கொட்டி பிசையவும் . பிறகு, அச்சில் பிழிந்தால்... நொடியில் கரையக்கூடிய கரகர முறுக்கு தயார் !
* பொரித்த ஒரு அப்பளத்தை நொறுக்கி, இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, புளி, ஒன்றிரண்டு பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள் . அசத்தலான அப்பளத் துவையல் ரெடி !
* இஞ்சி முற்றிப் போனால், துருவது கஷ்டமாக இருக்கும் . இஞ்சியைக் கழுவி, தோல் சீவி, துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள் . இந்த துண்டுகளை சின்ன மிக்ஸியில் போட்டுச் சுற்றுங்கள் . இஞ்சித் துருவல் எளிதில் தயார் .
* எண்ணெய் பாத்திரத்தைத் தேய்க்க பொடுகிறீர்களா ? ஒரு துணியால் எண்ணெயை ஒட்ட துடைத்து எடுத்துவிட்டால், கழுவுவதற்கு எளிதாக இருக்கும் . அந்தத் துணியை அப்படியே தூக்கி வீசாமல்... தாழ்ப்பாள், கிரில், கிணற்று ராட்டினம் என எண்ணெய் தேவைப்படும் கருவிகளில் தேய்க்கலாம் . எண்ணெய் கீழே சிந்தாமல் சுத்தமாகத் துடைத்தது போலவும் இருக்கும்...'க்ரீச் க்ரீச்' சத்தத்தையும் இல்லாமல் செய்யலாம் !
--- அவள் விகடன் . 11 . 3 . 2011 .
--- இதழ் உதவி : N. கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு . ( கொல்லுமாங்குடி ) .

No comments: