Thursday, February 2, 2012

மூளைக்கு கரன்ட் போனால்....

மூளைக்கு கரன்ட் போனால் கற்பனைத்திறன் பெருகும் !
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிட்னி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆலன்சிண்டர் தலைமையிலான குழு உருவாக்கியிருக்கும் thinking cap என்ற சிறு கருவியைக் கண்டு விஞ்ஞான உலகமே வியக்கிறது .
மூளைக்குள் ' கொஞ்சூண்டு ' மின்சாரத்தைச் செலுத்துவதன் மூலம் கற்பனைத் திறனையும் படைப்பாற்றலையும் உருவாக்க முடியும் என உறுதி செய்வதற்கான தொடக்கமே இக்கருவி . இதைப் பொருத்திக்கொண்டு, குறிப்பிட்ட ஒரு தேர்வில் பங்கேற்ற 60 பேர் பிரமாதமான ரிசல்ட் பெற்றிருக்கிறார்கள்.
சரி....இதனால் என்ன பயன் ? விபத்து போன்ற காரணங்களால் இடதுபக்க மூளை பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆராய்ச்சி ஓர் வரப்பிரசாதம் . கலை, பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற விஷயங்களிலும் இது பயனுள்ளதாக அமையும் .
இன்றைய வெற்றி, மூளை உலகின் முதல் படிதான் . ஆராய்ச்சி அடுத்த கட்டங்களில் பயணம் செய்யும்போது நிகழவிருக்கும் அற்புதங்களுக்கு அளவே இல்லை . எதிர்காலதில் நம் மூளையை எப்படி வேண்டுமோ அப்படி தூண்டிக்கொள்ளலாம் . அதற்கு பத்து ரூபாய் பேட்டரி போதும் என்றால், நம்புவீர்களா ?
--- தினகரன் , 27 . 2 . 2011 இதழில் வள்ளி .
--- இதழ் உதவி : செல்லூர் கண்னன் .

No comments: