Monday, December 19, 2011

அப்படியா சங்கதி .

பப்பாளி
வீட்டில் ஒரு பப்பாளி மரமிருந்தால் நல்ல வைத்தியர் ஒருவர் வீட்டில் இருக்கிறார் என்று அர்த்தம் .
வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள பழம் பப்பாளி . தினமும் பப்பாளி பழம் உண்டால் கண் பார்வை தெளிவடையும் . மலச்சிக்கல் தீரும் . இப்பழத்தின் பெப்லின் என்ற திரவப் பொருள் உள்ளது . இதற்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மை உள்ளது .
மூல நோய்
முடக்கத்தான் வேரை ஒரு கைப்பிடி எடுத்து, நன்றாகக் கழுவி, சிறிது சிறிதாக நறுக்கி ஒரு மண் சட்டியில் இட்டு சிறிது நீர்விட்டு சுண்டக் காய்ச்சி சுத்தமான துணியில் வடிகட்டி, காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும் .
புழுவெட்டு நீங்க
சிலருக்கு தலையில் புழுவெட்டு காரணமாக தலைமுடி உதிர்ந்து போகும் . இவர்கள் செம்பருத்திப் பூவின் மொட்டை எடுத்து நன்கு மைபோல் அரைத்து புழுவெட்டு உள்ள பகுதிகளில் தொடர்ந்து பூசி வந்தால், புழுவெட்டு மறையும் . முடி உதிர்தல் நீங்கி, தலைமுடி அடர்த்தியாக வளரும் .
தூக்கம்
தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து சாறெடுத்து சிறிது தேன் கலந்து தூங்கப்போவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தினமும் கொடுத்து வந்தால் தூக்கம் நன்றாக வரும் .
பேன் தொல்லை
படுக்கும் போது தலையணையில் கருந்துளசி பரப்பி படுத்தால் பேன்கள் உதிர்ந்துவிடும் . கருந்துளசி இலையை காயவைத்து புகையிட்டு தலையைக் காட்டினாலும் பேன்கள் உதிர்ந்து விடும் .
--- ஹெல்த் சாய்ஸ் , மருத்துவ மாத இதழ் . ஏப்ரல் 2011 .
--- இதழ் உதவி : K.S .மாதவன் , நெற்குன்றம் . சென்னை 107

No comments: