Saturday, December 31, 2011

அரசுப் பள்ளி பாழல்ல....

அரசுப் பள்ளி பாழல்ல....அன்னைத் தமிழும் பாழல்ல !
மாட்டுக் கொட்டகை ஒரு வருடம்
கோயில் திண்ணை மறு வருடம்
கோணிப் பையே குடையாக
செருப்பே இல்லா நடைப் பயணம்
என்றே வளர்ந்தது என் கல்வி
முழுதாய்க் கற்றது கோவையில் தான
எல்லாம் அரசுப் பள்ளியில்தான்
இருந்தும் நிலவில் நீர் கண்டேன்
அகிலம் பார்த்து மெச்சியது
எப்படி என்று பலர் கேட்டார்
தாய்மொழிக் கல்வியின் பலனென்று
வாய்மொழி கொண்டு நானுரைத்தேன்
நானிலமெல்லாம் அதைச் சொன்னேன்
அந்தோ இன்று எனதூரில்
அங்கோர் தாயும் மடிந்தாளே
அவளது மகனைப் பள்ளியிலே
ஆங்கிலக் கல்வியில் கற்பிக்க
அவளது ஏழ்மை துரத்தியதால்
தீயில் கருகி செத்தாளாம்
சேதியைக் கேட்டு நான் நொந்தேன் .
ஏழ்மை என்பது பணத்தாலா ?
அறியா மனதின் நிலையாலா ?
அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்
இதை
அனைவரும் உணரும் வகையாக
விகடன் வழியாக
வீடுகள் தோறும் சேர்த்திடுவோம்
இனியொரு தாய் வேகும் முன்னே
அறியா நிலையைத் தீயிட்டழிப்போம் !
--- கவிதை : மயில்சாமி அண்ணாதுரை ,
--- ஆனந்த விகடன் , 8 . 6 . 2011 .

Friday, December 30, 2011

மருந்து கம்பெனிகள் !

ஒரு புதிய மருந்து சந்தையை வந்தடைய சராசரியாக ரூ .3,600 கோடி வரை செலவாகிறது . இந்த ஆராய்ச்சியில் மிக முக்கியமான கட்டம், மனிதர்கள் மீதான பரிசோதனை . புதிதாக உருவாக்கப்படும் மருந்து மனிதர்கள் மீது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று சோதிக்கவேண்டும் .
வளர்ந்த நாடுகளில், இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்குக் கடுமையான சட்ட திட்டங்கள் உண்டு . தவிர, நோயாளிகளின் பாதுபாப்புக்கான செலவும் அதிகம் . மூன்றாம் உலக நாடுகளில் இந்தச் சோதனைகளை நடத்தும்போது, செலவில் 60 சதவிகிதம் வரை குறையும் . மேலும், ஏழை மக்களின் அறியாமை, எளிதில் வளையக்கூடிய சட்ட விதிகள், அரசின் கண்காணிப்பு இன்மை ஆகியவற்றின் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்தப் பரிசோதனையை நடத்த ஆரம்பித்தன மருந்து கம்பெனிகள் .
இந்தப் பரிசோதனைகள் பெரும்பாலும் நோயாளிகளின் ஏழ்மையையும் அறியாமையையும் பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றியே மேற்கொள்ளப்படுகின்றன . இந்தப் பரிசோதனைகள் தொடர்பான விதிகள் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம், நோயாளிகளுக்கு நோயாளி மாறுபடுகின்றன . இதனால், மருந்து நிறுவனங்களால் சட்டத்தில் இருந்து எளிதாகத் தப்ப முடிகிறது . ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில் கருப்பை வாய் புற்று நோய் எதிர்ப்பு மருந்துப் பரிசோதனையின் ஒரு கட்டமாக மேற்கொள்ளப்பட்ட மருந்து ஆராய்ச்சியில், 14 ஆயிரம் சிறுமிகள் ஈடுபடுத்தப்பட்டனர் . அந்தச் சிறுமிகளில் பெரும்பான்மையினர் பழ்ங்குடியினர் . அவர்களுக்கோ, அவர்களுடைய பெற்றோருக்கோ இப்படி ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதே தெரியாது . இந்தக் குழந்தைகளில் 6 குழந்தைகள் உயிர் இழந்ததைத் தொடர்ந்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது .
நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ நிறுவனமாகக் கருதப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் ( எய்ம்ஸ் ) இப்படி நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் 49 குழந்தைகள் உயிர் இழந்தது கடந்த ஆண்டு தெரியவந்தது . சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 4,142 குழந்தைகளில் 2,728 குழந்தைகள் ஒரு வயதுக்கும் உட்பட்டவர்கள் .
புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனைகள் நடத்த அனுமதி அளித்துள்ளது அமெரிக்க அரசு . இனி, இந்தியாவில் உள்ள குழந்தைகள் மீதான மருந்துப் பரிசோதனைகளில் முழு அளவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் களம் இறங்கப்போகின்றன என்பதே இதன் நேரடியான பொருள் !
எத்தகைய அற உனர்வு நம்முடைய ஆராய்ச்சியாளர்களையும், ஆட்சியாளர்களையும் வழி நடத்துகிறது !
--- சமஸ் , ஆனந்த விகடன் . 29 . 6 . 2011 .

Thursday, December 29, 2011

ஈஸி பெருக்கல் 50 .

மூன்று இலக்க எண்களை 50 -ஆல் பெருக்க ஈஸியான வழி :
* பெருக்க வேண்டிய எண் ஒற்றைப்படை எண் என்று வைத்துக்கொள்ளுங்கள் . உதாரணம் : 323 .
1 . இதை 2 -ஆல் வகுக்க வேண்டும் . 323 வகுத்தல் 2 = 161 ; மீதி 1 .
2 . மீதியை விட்டுவிட்டு, வகுத்து வரும் விடையுடன் 50 -ஐ சேருங்கள் . அதுதான் விடை ! 323 பெருக்கல் 50 = 16150 .
* பெருக்க வேண்டிய எண் இரட்டைப்படை எண் என்று வைத்துக்கொள்ளுங்கள் . உதாரணம் ; 128 .
1 .இதை 2 - ஆல் வகுக்க வேண்டும் . 128 வகுத்தல் 2 = 64 .
2 . இப்படி வகுத்து வரும் விடையுடன் இரண்டு பூஜ்யங்களைச் சேருங்கள் = 6400 . அதுதான் விடை ! 128 பெருக்கல் 50 = 6400 .
---தினமலர் இணைப்பு , 10 . 6 . 2011 .

Wednesday, December 28, 2011

டயாலிசிஸ் ?

கிட்னி ஃபெயிலியரில் அக்யூட், கிரானிக்கில் என்று இரண்டு வகை . இதில் முதல் வகையை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தி, குணப்படுத்தி விட முடியும் . குறிப்பிட்ட காலத்திற்கு டயாலிசிஸ் செய்தால் போதும் . ஆனால் கிரானிக்கில் அப்படி அல்ல . குணப்படுத்த முடியாது . மாறாக வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் சிகிச்சையை தொடரவேண்டும் .
உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்த்ம் வேலையை கனக்கச்சிதமாகச் செய்வது கிட்னிதான் . அடிவயிற்றின் ஆழத்தில் அவரை விதைகள் போல் இருக்கும் இந்த உறுப்புகள் செயலிழந்து போக நிறைய காரணங்கள் உண்டு . அப்போது செயற்கையாக ரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யப்படுவதுதான் ' டயாலிசிஸ் '. சுருக்கமாக ' கிட்னி' யின் வேலையை, இயந்திரம் செய்வதுதான் டயாலிசிஸ் .
டயாலிசிஸ் இரண்டு வகை . ஒன்று... ' பெரிடோனியல் டயாலிசிஸ் '. சுருக்கமாக ( பி.டி . ) ' ஹீமோ டயாலிசிஸ் ' மற்றொன்று .
முதல் வகையில் வயிற்றுக்குள் இருக்கும் ஒருவித சவ்வினை ( மெம்ப்ரேன் ) பயன்படுத்துவார்கள் . அதன்படி, ரத்தத்தை செறிவு குறைந்த திரவ நிலையில் வெளியே எடுத்து, சவ்வூடு பரவல் முறையில் ( ஆஸ்மாசிஸ் ) சுத்தம் செய்து திருப்பி உள்ளே அனுப்புவார்கள் .
இரண்டாவது வகை சற்று சிரமமானது . அதன்படி, நோயாளியின் உடலிலிருந்து குழாய் மூலம் ரத்தத்தை முழுவதும் ( 5 லிட்டர் ) வேகமாக வெளியே எடுப்பார்கள் . பின்னர் அதே வேகத்தில் உடலுக்குள் செலுத்துவார்கள் .
இந்த இரண்டு முறைகளில் சிகிச்சை அளிக்கும்போது நோயாளி சற்று துவண்டு போவது உண்டு . ஆனால் அதனைச் சமாளிக்க மருந்துகளும் நடைமுறையில் இருக்கு .
--- எஸ். அன்வர் , குமுதம் 15 . 6 .2011 .

Tuesday, December 27, 2011

கம்ப்யூட்டரில்...

ரூபாய், காசு புள்ளியுடன் எழுத .
எக்சல் ஒர்க் ஷீட்டில் கரன்சியான ரூபாய் எவ்வளவு என்று குறிப்பிடுகையில் சரியாகக் கணக்கிடும் வகையில் பைசாவையும் சேர்த்துக் குறிப்பிடுவொம் . ஆனால் ஒவ்வொரு முறையும் ரூபாய்க்கும் காசுக்கும் இடையே புள்ளி அமைப்பது சற்று சிரமமாக இருக்கும் . இதனை எக்சல் புரோகிராமே அமைக்கும்படி செட்செய்திடலாம் .
உதாரனமாக, நீங்கள் பண மதிப்பைக் குறிப்பிடுகையில் ரூபாய் காசு இணைந்த எண்ணை புள்ளி இடாமல் முதலில் அமைக்கவும் . உதாரணமாக 11245, 2345, 5693, 236798 என அமைப்பதாக வைத்துக்கொள்வோம் . நீங்கள் கீழ்காணும் முறையில் அமைத்துவிட்டால் இந்த எண்கள் 112.45, 23.45, 56.93, 2367.98 என அமைக்கப்படும் . நீங்கள் செட் செய்திட வேண்டிய முறை :
1 . Tools மெனு கிளிக் செய்து அதில் Options பிரிவைத் தேர்ந்தெடுக்கவும் .
2 . இனி கிடைக்கும் Options என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் Edit என்னும் டேபில் கிளிக் செய்திடவும் . இதில் Fixed decimal என்னும் பிரிவில் செக் செய்திடவும் . இப்போது Places என்னும் இடத்தின் முன்னால் 2 என அமைத்திடவும் . பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும் . இனி நீங்கள் அமைத்திடும் எண்களின் இறுதி இரண்டு இலக்கங்களுக்கு முன்னால் புள்ளி தானே அமைக்கப்படும் . இந்த செயல்பாடு தேவையில்லை என்றால் Fixed decimal என்னும் பிரிவின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விடவும் .
--- தினமலர் , 21 . 6. 2011 .

Monday, December 26, 2011

ஓவனில் ஒரு சிக்கல் .

சமையலை விரைவுபடுத்தும் என்றாலும் மைக்ரோவேவ் ஓவனில் ஒரு ஆபத்தான சிக்கல் உண்டு . மைக்ரோஓவனைப் பயன்படுத்தி சமைக்கும் போது பிளாஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தக் கூடாது . அவ்வாறு செய்தால் பிளாஸ்டிக் பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் டையாக்சின் வெளியாகும் . அவை கேன்சர் நோயை உண்டாக்கும் .
தீர்வு : மைக்ரோவேவ் ஓவனில் கண்ணாடி அல்லது செராமிக் பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும் . ப்ரிட்ஜில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி வைக்கக் கூடாது . அதிக குளிர்ச்சியிலும் டையாக்சின் வெளியாகும் .
--- ராஜி வெங்கடேஷ் .
--- தினமலர் இணைப்பு , 18 . 6 . 2011 .

Sunday, December 25, 2011

தெரியுமா ? தெரியுமே !

பாலைவனம் !
' எந்த இடத்தில் ஒரு சில சிறப்புத் தாவரங்களைத் தவிர பொதுவான தாவரங்கள் வளர முடியாத வகையில் ஈரப்பதம் மிகக் குறைவாக இருக்கிறதோ, அந்த இடம்தான் பாலவனம் ' -- இதுதான், ' பாலைவனம் ' என்ற வார்த்தைக்கான அறிவியல் வரையறை . இந்த வரையறைப்படி, குளிர்நிறைந்த ஆர்க்டிக் துருவப்பகுதியும் பாலைவனம்தான் !
டி.பி. நோய் !
" Mycobacterium tuberculosis என்னும் பாக்டீரியா உடலில் இருந்தால்தான், பரிசோதனையில் டி.பி. பாசிட்டிவ் என்று ரிசல்ட் காண்பிக்கும் . உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு டி.பி. தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் "
பேப்பர் கப் !
அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் லுலன் என்ற வழக்கறிஞர்தான் 1907 -ல் ஆண்டில் பேப்பர் கப்களைக் கண்டுபிடித்தார் . " ஒரே கப்பைப் பலரும் பயன்படுத்தும்போது கிருமி தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு . அதைத் தடுக்கவே இதைக் கண்டுபிடித்தேன் " என்று குறிப்பிட்ட அவர், தனது கண்டுபிடிப்புக்கு ' ஹெல்த் கப் ' என்று பெயர் சூட்டினார் .
கொலாஜ் ஓவியம் !
காகிதங்கள் அல்லது மரத்துண்டுகளை வெட்டி ஒட்டி உருவாக்கப்படும் ஓவியத்தைத்தான் கொலாஜ் ஓவியம் என்கிறார்கள் . கொலே என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு ' பசை ' என்று அர்த்தம் . காகிதத் துண்டு அல்லது மரத்துண்டுகளை பசையால் ஒட்டி உருவாக்கும் ஓவியம் என்பதால்தான் ' கொலாஜ் ' என்ற பெயர் வந்தது .
பாப்கார்ன் !
சோளத்தில் இருந்துதான் சோளப்பொரி ( பாப்கார்ன் ) தயாரிக்கப்படுகிறது . சோளத்தைக் கவனியுங்கள் . அதன் மத்தியில் ஈரப்பதமும், அதைச் சுற்றிலும் கடினமான மாவுச்சத்தும் இருக்கிறது . சோளப்பொரியைத் தயாரிக்க, சோளத்தைச் சூடாக்குவார்கள் . அப்போது, அதன் மத்தியில் உள்ள ஈரப்பதம் விரைவில் வெப்பமடையும் . இதனால் உருவாகும் நீராவி, கடினமான மாவுச்சத்து பகுதியில் ஊடுருவி வெளியேறும் . இதன் விளைவாக, கடினமான மாவுச்சத்து வெந்து மென்மையாக மாறும் . நீராவி வளைந்து நெளிந்து வெளியேறும் என்பதால், அதற்கு ஏற்றபடி மாவுச்சத்து பகுதியும் வளைந்து நெளியும் . இந்த செயல்பாடுதான், சோளப்பொரியை பூ போல் விரிய வைக்கிறது .
யானை !
யானையின் பற்கள் விசித்திரமானவை . பிறந்த யானைக்குட்டிக்கு நான்கு பற்கள் இருக்கும் . அவை பலமிழந்து விழுந்ததும் மீண்டும் நான்கு பற்கள் முளைக்கும் . இப்படி யானையின் ஆயுளில் அதிகபட்சமாக 7 முறை பற்கள் முளைக்கும் . அதாவது, ஒரு யானையின் ஆயுளில் அதற்கு மொத்தம் 28 பற்கள் இருக்க வாய்ப்பு உண்டு . சராசரியாக, ஒரு பல்லின் எடை 4 கிலோ அளவில் இருக்கும் !
----தினமலர் பல இணைப்புகளிலிருந்து .

Saturday, December 24, 2011

' சந்தேகக் கோடு '

சந்தோஷம் எப்போது வரும் ?
பயம் இல்லாத வேளையில் !
பயம் எப்போது இல்லாமல் போகும் ?
சந்தேகம் இல்லாத வேளையில் !
சந்தேகம் எப்போது இல்லாமல் போகும் ?
ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படைத் தன்மை இருக்கும் வேளையில் !
இதனால்தான்
' சந்தேகக் கோடு சந்தோஷக் கேடு ' என்கிறார்கள் !
--- தினமலர் இணைப்பு . 18 . 6 . 2011 .

Friday, December 23, 2011

ஈஸி 101 பெருக்கல் !

இரண்டு மற்றும் மூன்று இலக்க எண்களை 101 -ஆல் பெருக்கும் ஈஸி டெக்னிக் .
இரண்டு இலக்க எண்ணை 101 -ஆல் பெருக்குவது ரொம்ப ரொம்ப ஈஸி . வேறு எதுவும் செய்ய வேண்டாம் . அந்த இரண்டு இலக்க எண்ணை ஒருமுறை அதன் அருகில் எழுதிவிட்டால் போதும் !
உதாரணம் : 15 x 101 = 1515 ; 30 x 30 = 3030 ; 47 x 47 = 4747 .
மூன்று இலக்க எண்ணை 101 -ஆல் பெருக்கும் ஈஸி டெக்னிக் இதோ :
456 ஐ 101 ஆல் பெருக்க வேண்டும் ...
முதலில், 456 -ன் கடைசி இரு இலக்கங்களை அப்படியே எழுதுங்கள் ; 56 . இதை ' அ ' என்று குறித்துக் கொள்ளுங்கள்.
பின்னர், 456 லிருந்து முதல் இலக்க எண்ணுடன் 456 ஐ கூட்டுங்கள் . : 4 + 456 = 460 . இதை ' ஆ ' என்று குறித்துக் கொள்ளுங்கள் .
456 x 101 = B A ! அதாவது , 456 x 101 = 46056 .
இன்னொரு உதாரணம் : 338 x 101 = ?
அ = 38.
ஆ = 3 + 338 = 341 .
338 + 101 = ஆ அ = 34138 .
--- தினமலர் இணைப்பு , 27 . 5 . 2011 .

Thursday, December 22, 2011

விமானம் !

தேங்காய் எண்ணெயில் ஓடும் விமானம் !
உலகளவில், முன்னணி விமான நிறுவனமான ' வெர்ஜின் அட்லாண்டிக் ' நிறுவனம், தேங்காய் எண்ணெயை எரிபொருளாகக் கொண்டு விமானத்தை இயக்கி உள்ளது . பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், மாற்று எரிபொருளாக, பயோ எரி பொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது . இதற்கான முயற்சியில், வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது .
இதன் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணை மற்றும் தென் அமெரிக்காவில் அமேசான் காடுகளில் விளையும் ஒரு வகை பனை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் பாபாசூ எண்ணையில் இருந்து உருவாக்கப்பட்ட புதிய எரிபொருளை, இந்நிறுவனம் பயன்படுத்தியது .
லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து, நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வரை, இந்த எரிபொருளை கொண்டு, போயிங் ரக ஜெட் விமானம் இயக்கப்பட்டது .
இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றிருக்கிறது . விமானத்தில் நான்கு எரிபொருள் டாங்குகள் உள்ளன . அதில் ஒன்றில், புதிய எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது . இந்த விமானத்தில், பயணிகள் பயணம் செய்யவில்லை . பைலட்டுகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் மட்டுமே பயணம் செய்தனர் .
--- தினமலர் இணைப்பு , 29 . 1 . 2011 .

Wednesday, December 21, 2011

ஷாஜகான் எழுதிய கடிதம் !

பதவி ஆசையால், பெற்ற தந்தை என்றும் பாராமல் முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜகானை சிறையில் அடைத்து தண்ணீர் கூட தராமல் கொடுமைப்படுத்தினான் ஔரங்கசீப் . அது குறித்து ஔரங்கசீப்புக்கு கடிதம் எழுதினார் ஷாஜகான் . அதில், ' ஔரங்கசீப்.... இந்துக்கள் சம்பிரதாயத்தில், தந்தை இறந்துவிட்டால், அவருடைய மகன் எள்ளையும், தண்ணீரையும் வழங்கி இறந்த தன் தந்தையின் ஆன்மாவுடைய பசியைத் தீர்ப்பான் . ஆனால், நீ உயிருடன் இருக்கும் எனக்கு தண்ணீர் கூட தர மறுத்து தவிக்க விட்டுள்ளாய் ' என்று வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார் .
--- தினமலர் இணைப்பு , 29 . 1 . 2011 .
ஒரு புதிர் !
ஆங்கிலத்தில் 5 என்ற எண்ணுக்கு நடுவில் 4 ம் எண்ணை எப்படி எழுதுவீர்கள் ?
---
விடை : F I V E . 15 . 6. 11 .
-------

Tuesday, December 20, 2011

ஆணா, பெண்ணா ?

செத்துப் போனவரோட மண்டை ஓட்டைப் பார்த்தே அவர் ஆணா, பெண்ணானு கண்டுபிடிக்க முடியும் !
ஆண்களின் கண் குழிவு முழுமையா, வட்டமா இருக்கும் . பெண்களோட கண் குழிவு முழு வட்டமா இருக்காது . தவிர, பெண்களோட மண்டை ஓடு சின்னதாக இருக்கும் . அதேசமயம், அவங்களோட இடுப்பு எலும்பு பகுதி பெரிசா இருக்கும் . இதையெல்லாம் கணக்கெடுத்தாலே ஒரு குறிப்பிட்ட மண்டை ஓடு ஆணுடையதா, பெண்ணுடையதானு தீர்மானிக்கலாம் .
சின்ன பசங்களோட குரல் வளர்ந்த உடனே மாறிடுதே அது ஏன் ?
குழந்தையா இருக்கும்போது நம்மளோட குரல்வளை சின்னதா இருக்கு . குரல்வளையில காத்து படும்போது, அதுல அதிர்வுகள் உண்டாகுது . அந்த அதிர்வுகள்தான் ஒலி அலைகளை ஏற்படுத்துது நாம் வளரும்போது குரல்வளைகளும் நீளமாகுது . சின்ன குரல்வளையில் காத்து சுலபமா நுழைஞ்சு வெளிவே வந்துடும் . ஆனா, நீளமான குரல்வளையால ஒலி எழுப்பணும்னா காற்றினுடைய அழுத்தத்தை அதிகமா குடுக்க வேண்டியிருக்கும் . அதனால அதிர்வுகளும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் . பெண்களோட குரல்வளை நீளம்விட, ஆண்களோட குரல்வளை நீளம் அதிகம் . அதனாலதான் குரல்ல அவ்வளவு வித்தியாசம் இருக்கு .
--- தஞ்சம்மா... குஞ்சம்மா ! தொடரில் , ஜி. எஸ். எஸ் . .
---- அவள் விகடன் , டிசம்பர் 21 , 2007 .

Monday, December 19, 2011

அப்படியா சங்கதி .

பப்பாளி
வீட்டில் ஒரு பப்பாளி மரமிருந்தால் நல்ல வைத்தியர் ஒருவர் வீட்டில் இருக்கிறார் என்று அர்த்தம் .
வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள பழம் பப்பாளி . தினமும் பப்பாளி பழம் உண்டால் கண் பார்வை தெளிவடையும் . மலச்சிக்கல் தீரும் . இப்பழத்தின் பெப்லின் என்ற திரவப் பொருள் உள்ளது . இதற்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மை உள்ளது .
மூல நோய்
முடக்கத்தான் வேரை ஒரு கைப்பிடி எடுத்து, நன்றாகக் கழுவி, சிறிது சிறிதாக நறுக்கி ஒரு மண் சட்டியில் இட்டு சிறிது நீர்விட்டு சுண்டக் காய்ச்சி சுத்தமான துணியில் வடிகட்டி, காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும் .
புழுவெட்டு நீங்க
சிலருக்கு தலையில் புழுவெட்டு காரணமாக தலைமுடி உதிர்ந்து போகும் . இவர்கள் செம்பருத்திப் பூவின் மொட்டை எடுத்து நன்கு மைபோல் அரைத்து புழுவெட்டு உள்ள பகுதிகளில் தொடர்ந்து பூசி வந்தால், புழுவெட்டு மறையும் . முடி உதிர்தல் நீங்கி, தலைமுடி அடர்த்தியாக வளரும் .
தூக்கம்
தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து சாறெடுத்து சிறிது தேன் கலந்து தூங்கப்போவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தினமும் கொடுத்து வந்தால் தூக்கம் நன்றாக வரும் .
பேன் தொல்லை
படுக்கும் போது தலையணையில் கருந்துளசி பரப்பி படுத்தால் பேன்கள் உதிர்ந்துவிடும் . கருந்துளசி இலையை காயவைத்து புகையிட்டு தலையைக் காட்டினாலும் பேன்கள் உதிர்ந்து விடும் .
--- ஹெல்த் சாய்ஸ் , மருத்துவ மாத இதழ் . ஏப்ரல் 2011 .
--- இதழ் உதவி : K.S .மாதவன் , நெற்குன்றம் . சென்னை 107

Sunday, December 18, 2011

துணிகளில் ரத்தக் கறை !

துணிகளில் படிந்துவிட்ட ரத்தக் கறையைப் போக்குவதற்கு ஏதாவது கெமிக்கல் இருக்கிறதா ?
' ரத்தக்கறை படிந்த துணியை முதலில் தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி, பின் நன்றாக பிழிந்துகொள்ளவும் . அதன்பின் கறை படிந்த புள்ளிகளில், இடங்களில் மட்டும் படும்படி ஹைட் ரஜன் பெர் ஆக்ஸைடு கரைசலை ஒரு சிறிய பிரஷ்ஷால் தொட்டு வைக்கவும் . வைத்த சிறிது நேரத்தில் அந்தக் கரைசல் நுரைக்கத் தொடங்கும் . அது நன்றாக நுரைத்தபின் அந்த இடத்தை பிரஷ் செய்து சுத்தமாக தண்ணீர்விட்டு அலசவும் . அப்பொழுதும் லேசாக ரத்தக்கறை தென்பட்டால் அது முற்றிலும் போகும்வரை ஹைட்ரஜன் பெர் ஆக்ஸைடு கரைசலால் அந்த இடத்தை மீண்டும் மீண்டும் சுத்தம் செய்யலாம் . எல்லாம் முடிந்தவுடன் கடைசியாக அந்த ஹைட்ரஜன் பெர் ஆக்ஸைடு கரைசல் துணியில் எங்கும் ஒட்டியிருக்காத அளவிற்கு நன்கு துவைத்து உலர்த்தி பயன்படுத்தவேண்டும் ."
வைரம் !
" பூமிக்கு அடியில் இருக்கும் கார்பன் படிமங்கள்தான் வைரமாக உருவாகிறது . கரியாக இருந்து வைரமாக மாறுவதற்கு குறைந்தபட்சம் 990,000,000 வருடங்கள் ஆகும் . இது குறைந்த பட்சம் . இதற்கு மேலும் ஆகலாம் . வைரங்களில் இளஞ்சிவப்பு, மஞ்சள், நீல நிறத்தில் உள்ள வைரங்கள் கொஞ்சம் காஸ்ட்லியானவை . அபூர்வமானவை .
செயற்கை வைரங்கள் கிரிஸ்டல், கிளாஸ் உட்பட பல்வேறு பொருட்களில் இருந்து உருவாக்கப்படுகிறது . செயற்கை வைரங்களில் கியூபிக் ஜிர்கோனியா மொஸானைட் என இரண்டுவித வைரங்கள் ஒரிஜினல் வைரங்கள் போலவே தோற்றமளிக்கும் . அதைப் பாகுபடுத்தி பார்ப்பது சிறிது கடினம்தான் ."
--- தகவல் தமயந்தி , குமுதம் . 14 . 4 . 2010 .

Saturday, December 17, 2011

கனக்கு ஐக்யூ !

8 x 473 = 3784 .
9 x 351 = 3159 .
15 x 93 = 1395 .
21 x 87 = 1287 .
27 x 81 = 2187 .
35 x 41 = 1435 .
இந்த பெருக்கல் சமன்பாடுகளில் ஒரு விசித்திர ஒற்றுமை இருக்கிறது ! அதாவது, பெருக்கப்படும் எண்களில் உள்ள எண்கள்தான் விடையிலும் உள்ளன !
--- .தினமலர் இணைப்பு . 25 . 3 . 2011 .

Friday, December 16, 2011

அப்படியா சங்கதி .

நெய்யும் தயிரும் ஏன் ?
உணவு உண்ணும் ஆரம்பத்தில் பருப்புடன் நெய் சேர்த்து உண்பதால் துவரம் பருப்பின் உஷ்ணம், பழைய மலபந்தம், வாததோஷம் ஆகியவை நீங்கும் . ஞாபக சக்தி அதிகரிக்கும் . மேனிக்கு வனப்பும் கண்ணுக்கு ஒளியும் உண்டாகும் . உணவின் முடிவில் தயிரும் உப்பும் சேர்த்து சாப்பிட்டால் உண்ட உணவு நன்கு ஜீரணமாகும் .மலச்சிக்கல்
மலச்சிக்கல் வராமல் தடுக்கும் ஆசனங்கள் .
சர்வாங்காசனம், சிவலிங்காசனம், ஹலாசனம், ஏசபாத ஆசனம், பாத ஹஸ்தாசனம், யோக முத்ரா, நாடிசுத்தி .
வாய்ப்புண் குணமாக .
மனத்தக்காளி இலையைச் சுத்தம் செய்து வாயில் பொட்டு மென்று அதன் சாறை சிறிது நேரம் வாயில் ஊறவைத்து பின்னர் அதனை உமிழ்ந்துவிட வேண்டும் . இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு வேளை செய்தால் வாய்ப்புண் ஆறும் .
சுவையும் முக்குற்றமும் .
புளிப்பும் துவர்ப்பும் அதிகரித்தால் வாதம் அதிகரிக்கும் .
உப்பும் கசப்பும் அதிகரித்தால் பித்தம் அதிகரிக்கும் .
காரமும் இனிப்பும் அதிகரித்தால் கபம் அதிகரிக்கும் .
--- ஹெல்த் சாய்ஸ் , மருத்துவ மாத இதழ் . மே 2011 .
--- இதழ் உதவி : K.S .மாதவன் , நெற்குன்றம் . சென்னை 107 .

Thursday, December 15, 2011

கத்தரிக்காய் !

பி. டி . கத்தரிக்காய் !
பி. டி . கத்தரிக்காய் என்பது, மரபணு மாற்ற முறையில் தயாரிக்கப்பட்ட கத்தரிக்காய் .
பேசில்லஸ் துரின்சீன்ஸிஸ் என்பதின் சுருக்கம்தான் ' பி.டி ' . இந்த ' பி.டி ' பாக்டீரியாவின் மரபணுவை கத்தரி செடியின் மரபணுவில் இணைத்து ' பி. டி' கத்தரிக்காயை உருவாக்குகின்றனர் .
--- .தினமலர் இணைப்பு . 25 . 3 . 2011 .

Wednesday, December 14, 2011

இனிக்கும் கணக்கு !

முதல் இலக்கம் ' 1 ' ஆக உள்ள இரு இரட்டை இலக்க எண்களை ஈஸியாகப் பெருக்கும் சூப்பர் பெருக்கல் டெக்னிக் .கீழே உள்ள இரு உதாரணங்களையும் நன்கு கவனித்து பயிற்சி செய்தால் நல்லது .
* உதாரணம் : 1 : 11 x 13 .
1 . கடைசி இரு இலக்கங்களைப் பெருக்குங்கள் : 1 x 3 = 3 . இதுதான் விடையின் கடைசி இலக்கம் .
2 . கடைசி இரு இலக்கங்களைக் கூட்டுங்கள் : 1 + 3 = 4 . இதுதான் விடையின் நடு இலக்கம் .
3 . பிறகு இந்த இரு இலக்கங்களுக்கு முன் ' 1' சேர்த்தால் விடை வந்துவிடும் . = 143 .
* உதாரணம் 2 : 12 x 18 .
1 . கடைசி இரு இலக்கங்களைப் பெருக்குங்கள் : 2 x 8 = 16 . இதன் கடைசி இலக்கம்தான் 12 x 18 -ன் விடையில் கடைசி இலக்கம் = 6 ; எஞ்சியுள்ள எண்ணை ( 1 ) அப்படியே வைத்துக்கொள்ளவும் .
2 . கடைசி இரு இலக்கங்களைக் கூட்டுங்கள் : 2 + 8 = 10 .இதோடு முன்னர் எஞ்சியுள்ள 1 - ஐ கூட்டவும் = 11 ; இதில் உள்ள கடைசி எண் ' 1 ' தான் 12 x 18 -ன் விடையின் நடு இலக்கம் = 1 ; எஞ்சியுள்ள எண்ணை ( 1 ) அப்படியே வைத்துக்கொள்ளவும் .
3 . முன்னர் எஞ்சியுள்ள எண் ( 1 ) உடன் ' 1 ' கூட்டினால், அதுதான் 12 x 18 - ன் விடையில் முதல் எண் ; அதாவது 1 + 1 = 2. எனவே, 12 x 18 = 216 .
---தினமலர் இணைப்பு . 25 . 3 . 2011 .

Tuesday, December 13, 2011

தொப்பை குறைக்கும் செல்போன் !

ஜப்பானில் அதிரடி .
பேசுவதில் இருந்து சினிமா பார்ப்பது வரை பல வசதிகளை தரும் செல்போன்கள் அடுத்து உடலை ஸ்மார்ட் ஆக வைத்துக்கொள்ளவும் உதவப்போகின்றன . புதுமை படைப்புகளை உருவாக்கி வரும் ஜப்பானியர்கள்தான் இந்த அதிசயத்துக்கும் காரணம் . சாப்பிட உள்ள உணவு பதார்த்தங்களை இந்த செல்போனில் படம் பிடிக்க வேண்டும் .அதில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதை செல்போன் உடனடியாக காட்டிவிடும் . இதை வைத்து எதை, எவ்வளவு சாப்பிடலாம் என்பதை நாம் முடிவு செய்துகொள்ளலாம் . வரைமுறை இல்லாமல் வயிறு முட்ட சாப்பிட்டு தொப்பை விழுந்து அவஸ்தைப்படுபவர்களுக்கு இந்த செல்போன் ஒரு வரப்பிரசாதம் . ஜப்பானின் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான என் டிடி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் இந்த மாயாஜால போனை உருவாக்கியுள்ளது .

Monday, December 12, 2011

தாராள மனது !

நார்வேகாரர் ஒருவர் விபத்தில் சிக்கினார் . அருகில் இருந்த நம்மூர்க்காரர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, ரத்தமும் கொடுத்து காப்பாற்றினார் . பிழைத்து எழுந்துவந்த நார்வேகாரர், நம்மூர்க்காரருக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றைப் பரிசளித்தார் . துரதிருஷ்டம் பாருங்கள், ஆறு மாதம் கழித்து நார்வே மறுபடியும் விபத்தில் மாட்டியது . அதே நம்மூர் ஆசாமி மறுபடியும் காப்பாற்றினார் . ஆஸ்பத்திரியில் சேர்த்தார் . உயிர் பிழைத்து வந்த நார்வேகாரர், நம்மூருக்கு நன்றி சொல்லி அரை கிலோ திருநெல்வேலி அல்வா கொடுத்தாராம் .நம்மூர்க்காரர் ஏமாற்றமாகப் பார்க்க, நார்வே சொன்னதாம், 'ங்கொய்யால .... உன் ரத்தம்தான் எனக்குள்ள ஓடுது ! '
--- நாட்டாமை பதில்கள் . தினகரன் , இணைப்பு . 14 . 11 . 10 .

Sunday, December 11, 2011

மூளை சுறுசுறுப்பாக இருக்க .

மூளை சுறுசுறுப்பாக இருக்க மீன் எண்ணெய் சாப்பிடுங்க !.
மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கு மூளையில் ஏற்படும் பாதிப்பே காரணம் . மூளை பாதிக்கப்படுவதால் உடல் உறுப்புகள் செயல் இழக்கின்றன . இந்த பிரச்னைக்கு தீர்வு சொல்லியிருக்கிறார் லூசியானா பலகலைக்கழக டாக்டர் நிக்கோலஸ் பசான் . மூளை பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்ட 5 மணி நேரத்துக்குள், நோயாளிக்கு மீன் எண்ணெய் கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும் என்கிறார் டாக்டர் நிக்கோலஸ் .
மீன் எண்ணெயில் இருக்கும் டோகோசாக் ஷாயினிக் அமிலம் என்ற வேதிப்பொருள்தான் மூளையை சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறதாம் . பக்கவாதம் ஏற்பட்ட 5 மணி நேரத்துக்குள் மீன் எண்ணெய் கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்றும், 5 மணி நேரம் கழித்து மீன் எண்ணெய் சாப்பிட்டால் தாமதமாகத்தான் நிவாரணம் கிடைக்கும் என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது .
மீன் எண்ணெய்யில் இருக்கும் நல்ல கொழுப்பு அமிலமான ஒமேகா 3, என்ற பொருளும் இதயத்தையும் மூளையையும் பாதுகாக்க உதவுகிறதாம் . குறிப்பாக ஒமேகா 3 அதிகம் சாப்பிட்டால் இதயபாதிப்பு மிகவும் குறையும் என்றும் ஆய்வுத்தகவல் சொல்கிறது .
--- தினமலர் .. நவம்பர் 12 .2010 .

Saturday, December 10, 2011

வலி மாத்திரை வேண்டாம் .

கர்ப்பிணிகளே உஷார்.... வலி மாத்திரை வேண்டாம் !
வலி நிவாரண மாத்திரைகளை கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், அது அவர்கள் வயிற்றில் இருக்கும் ஆண் குழந்தைக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று லண்டனை சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் ஆதாரத்துடன் அதிர்ச்சித் தகவலை வெளியிடுள்ளது .
உலகில் உள்ள கர்ப்பிணி பெண்களில் 50 சதவிகிதம் பேர் ' பெயின்கில்லர் '. என்று சொல்லப்படும் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது .வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், அது தாயின் கருவில் இருக்கும் ஆண் குழந்தையின் இனப்பெருக்க உறுப்பை செயல் இழக்கச் செய்துவிடுகிறதாம் . அதாவது அந்த ஆண் குழந்தை வாலிபனாகும்போது, விந்தணு உற்பத்தி குறைந்துவிடுமாம் . அதுபோல டெஸ்டிக்கிள் புற்றுநோய் ஏற்படவும் வலி நிவாரண மாத்திரைகள் காரணமாகிவிடுகின்றன என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது .
ஒரு கர்ப்பிணி தனது கர்ப்ப காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பாதிப்பு 7 மடங்காக அதிகரிக்குமாம் . 4 முதல் 6 மாதம் வரையிலான கர்ப்பக் காலத்தில்தான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துமாம் . அதாவது இந்த காலக்கட்டத்தில் ஒரு வலி நிவாரண மாத்திரையை சாப்பிட்டால், அது 2 மாத்திரை சாப்பிட்டதற்கான பின்விளைவுகளை ஏற்படுத்துமாம் .
அதிலும் பாரசிட்டமால் மருந்து 2 மடங்கும், புருபென், ஆஸ்பிரின் போன்றவை 4 மடங்கும், பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த ஆய்வுத்தகவல் மேலும் எச்சரிக்கிறது . இதனால்தான் பெரும்பாலான டாக்டர்கள், கர்ப்பிணிகள் யாரும் வலி நிவாரண மாத்திரை சாப்பிடக்கூடாது என்று எச்சரிக்கிறார்கள் .
--- தினமலர் .. நவம்பர் 11 .2010 .

Friday, December 9, 2011

என்ன சத்தம் இந்த நேரம் ?

இரவுகளில் காடு எப்படி இருக்கும் ?
பூமியின் நிலப்பரப்பில் வெறும் ஆறு சதவிகிதமே காடுகள் இருக்கின்றன . இந்த ஆறு சதவிகித இடத்தில்தான் உலகின் பெரும்பாலான ஜீவராசிகள் உயிர் வாழ்கின்றன . இவை நள்ளிரவில் ' குட் நைட் ' சொல்லிப் படுத்துவிடும் என்று நினைத்தால், அது தவறு . பூச்சிகள், மிருகங்கள், பறவைகள் இரவு நேரத்தில்தான் பெரும்பாலும் பேசிக்கொள்ளும் . பேசுவது என்றால் பக்கத்தில் இருக்கும் விலங்கிடம் ரகசியம் பேசுவது அல்ல . இருட்டில் இணை எங்கே இருக்கிறது என்றே தெரியாது . அதனால், ' செல்லம் எங்கேடா இருக்க ? ' என்ற கேள்வியை இரவு முழுக்க ஒலிபரப்பிக்கொண்டே இருக்கும் .
தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை குரங்குகள் எழுப்பும் காதல் ஒலி ஐந்து கி.மீ. தூரத்துக்கு கேட்கும் .
காங்கோ காடுகளில் காணப்படும் ஒரு வகை வௌவால்களின் தொண்டையே பரிணாம வளர்ச்சியால் மார்புவரை நீண்டுவிட்டது . அந்தளவுக்கு அந்த வௌவால்கள் பரம்பரை சவுண்ட் பார்ட்டிகளாக உள்ளன .
சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றின் இணைகள் தொலைதூரத்தில் எங்கேயோ இருக்கும் இணையை அழைக்க அவைகள் காடே அதிர்கிற மாதிரி கர்ஜிக்கும் . சிங்கம் கூப்பிட, பெண் சிங்கம் பதில் சொல்ல... நடுவில் எங்காவது நீங்கள் இருந்தால் குலை நடுங்கிவிடும்.
ஆப்பிரிக்க யானைகள் எழுப்பும் ஒலி, அடர்ந்த காடுகளைக் கிழித்துக்கொண்டு பல கி.மீ. தூரம் தாண்டியும் கேட்கும் . தன் இனை நடந்து வருகிற அதிர்வைவைத்து, எவ்வளவு தூரத்தில் இணை உள்ளது என்பதைக் கண்டுபிடித்துவிடும் அளவுக்கு யானைகள் கில்லாடிகள் .
சிம்பன்சி குரங்குகள் கால்களால் பூமியைத் தட்டி காதலிகளுக்கு மெசேஜ் அனுப்பும் .
ஒரே நேரத்தில் இப்படி ஓராயிரம் ஒலிபரப்புகள் நடக்கும்போது, அமைதியான உயிரினங்கள் எப்படி தகவல் அனுப்பமுடியும் ? ஒரு சில விலங்குகள் தங்கள் உடலின் வாசனையையே தூது அனுப்பும் . புனுகுப் பூனை, கஸ்தூரி மான் துவங்கி பட்டாம்பூச்சிகள் வரை சில உயிரினங்கள் வாசனையை வைத்துத்தான் வம்சத்தை வளர்க்கின்றன . சிப்பாய் எறும்புகள் என்று சொல்லப்படும் கண் பார்வை இல்லாத எறும்புகள் நூல் பிடித்த மாதிரி ஒன்றையொன்று பின்பற்றி, வரிசையாகச் செல்லும் . வழிநடத்துவது வாசனைதான் . இரவுகளை இரைச்சல் ஆக்குவதில் முக்கியப் பங்கு தவளைகளுக்கு உண்டு . தவளைகளின் குரலைவைத்தே அந்தத் தவளையின் வயது, அளவு எல்லாவற்றையும் இணை தவளைகள் கண்டுபிடித்துவிடும் . பிடித்திருந்தால் விரும்பிப்போகும் . இல்லையென்றால் விலகிப்போகும் !
--- பி.ஆரோக்கியவேல் . காடு விகடன் இணைப்பு . 27 . 1 . 10 .

Thursday, December 8, 2011

தமாஷ் !

தமாஷ் !
* ' ரவுடிக்கு வீடு வாடகைக்கு விட்டது ரொம்பத் தப்பாப்போச்சு ! '
' ஏன், என்னாச்சு ? '
' வாடகை கேட்டேன், ' காலி ' பண்ணிடுவேன்னு மிரட்டறான் ! '

சதவீத சவால் !

' 110 ' - ஐ இரண்டு பகுதியாகப் பிரிக்க வேண்டும் . அதில் ஒரு எண்ணை விட அடுத்த எண் 150 சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் ... எப்படி பிரிப்பது ? யோசித்து விடை
கண்டுபிடிங்க .
விடை : 44, 66 என்று பிரிக்க வேண்டும் . 66 என்பது 44 ஐ விட 150 சதவீதம் அதிகமான எண் !
--- தினமலர் . நவம்பர் 12 , 2010 .

Wednesday, December 7, 2011

இருட்டிலும் பார்க்க முடியும் !

நமது கருவிழியில் ' ப்யூபில் ' என்ற சிறு துவாரம் உள்ளது . வெளிப்புற வெளிச்சத்துக்கு ஏற்றபடி இந்த துவாரம் பெரிதாகவோ, சிறியதாகவோ மாறும் . அதிக வெளிச்சம் இருந்தால், இந்த துவாரம் மிகமிகச் சிறிய அளவில் சுருங்கிவிடும் . இதனால்தான், அதிக வெளிச்சத்தில் நமக்கு கண் 'கூசும் '.
மங்கல் ஒளி, இருட்டு போன்ற குறைவான வெளிச்சத்தின் போது, இந்த துவாரம் பெரிதாக விரியும் . சாதாரண வேளையில் ப்யூபில் துவாரம் இருக்கும் அளவைவிட, இருட்டு வேளையில் அதன் அளவு 16 மடங்கு பெரிதாக மாறும் . இப்படி விரிவடைந்த துவாரத்தின் வழியாக சில காட்சிகள் கண்ணுக்குள் நுழையும் . இதனால்தான் இருட்டிலும் நம்மால் கொஞ்சம் பார்க்க முடிகிறது .
இருட்டிலும் அதிக வெளிச்சத்திலும் கண்விழித்துப் பார்ப்பது பார்வையைப் பாதிக்கும் . எனவே இந்த இரண்டையும் தவிர்க்க வேண்டும் .
--- தினமலர் . நவம்பர் 12 , 2010 .

Tuesday, December 6, 2011

தெரியுமா ? தெரியுமே !

* 50 ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரம் ஆண்டு ஒன்றுக்கு 5.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆக்ஸிஜனை வெளியிடுகிறது . 10 லட்ச ரூபாய் மதிப்புக்கூணவைத் தருகிறது . உலகில் மிக அதிகக் காலம் வாழக்கூடிய உயிரினம் மரம்தான் . ஸ்வீடனில் இருக்கும் ஊசியிலை மரத்தின் வயது 9,550 ஆண்டுகளுக்கும் அதிகம் .
* ஜப்பானில் 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை சைபீரிய பனிப் பிரதேசங்களில் வாழ்ந்த கம்பள யானையின் ( Woolly Mammoth ) மரபணுவைச் சேகரித்து, அதை உயிரோடு உள்ள ஆப்பிரிக்க யானைக்குச் செலுத்தி மீண்டும் கம்பள ஆனையை உருவாக்கும் முயற்சிகள் நடக்கின்றன !
* கிரேக்கத்தில் உள்ள லெஸ்வாஸ் தீவில் உள்ள கல் காடு தான் உலகின் மிகப் பெரிய கல் காடு, கிட்டத்தட்ட 150 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள காட்டுப் பகுதி இங்கு கல் காடாக மாறியிருக்கிறது .
* மின்னல், எரிமலை, பாறைச் சரிவால் ஏற்படும் உராய்வுகள், சிறு தீப்பொறிகள் இவைகள் காட்டுத் தீ உருவாக முக்கிய காரணங்களாம் .
* காட்டுத் தீ அருகில் பரவும் முன்னே அந்தப் பகுதியின் காற்று 800 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமாகிவிடும் .
* காட்டுத் தீயின் வேகம் மணிக்கு 10 கி.மீ. என்றாலும் புல்வெளிகளில் 22 கி.மீ. வரை சீறும் .
* காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த, அது பரவும் திசைக்கு எதிர்த் திசையில் தீ வைப்பதுதான் தீர்வு .
* 2030 -ம் ஆண்டுக்குள் அமேசான் காடுகளில் கிட்டத்தட்ட 55 சதவிகிதம் காட்டுத் தீயினால் அழிந்துவிடும் வாய்ப்பு இருக்கிறதாம் .
* ஜப்பானில் குப்பைகளுக்குப் பஞ்சமே இல்லை . மொத்தக் குப்பைகளையும் கடலில் கொட்டி செயற்கைத் தீவு ஒன்றை உருவாக்கி, அதில் மண்னைக்கொட்டி மரம் வளர்ப்பது என்பதுதான் திட்டம் . இதனால், குப்பைகளும் காலியாகும்; சுற்றுச்சூழலும் பாதிக்கபடாது . காடும் வளர்க்கலாம்; கார்பனையும் கட்டுப்படுத்தலாம் .
* காடுகள் நோய் தீர்க்கும் ஓர் அற்புத மருத்துவன் . இப்போது நாம் பயன்படுத்தும் மருந்துகளை அளித்தது எல்லாமே தாவரங்கள்தான்
* காடுகள்தான் நீரின் ஆதாரம் . ஆனால், ஆச்சர்யமாக நீருக்கு அடியிலும் காடுகள் இருக்கின்றன . இரண்டு வகை நீர்க் காடுகள் இருக்கின்றன . முதல் வகை அலையாத்தி காடுகள்
இது பெரும்பாலும் கடல் நீருக்கு அருகில் மட்டுமே வளரும் . இரண்டாவது வகை கெல்ப் காடுகள் . கடலுக்கு அடியில் வளர்ந்திருக்கும் பூஞ்சை வகைச் செடிகள் இவை .
* உலகின் மிகப் பெரிய அலையாத்தி காடுகள் பிரேசிலில் ( 26 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு ) இருக்கிறது . இரண்டாவது இடம் நமது பிச்சாவரம் காடு ..
--- காடு விகடன் இணைப்பு . 27 . 1 . 10 ..

Monday, December 5, 2011

இசையும் வழிபாடும் !

உற்சவங்களில் ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒரு குறிப்பிட்ட இசையைத்தான் வாசிக்க வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன ....
* உதய காலம் : பூபாளம், பவுளி, கோபிகா வசந்தம் .
* காலை நேரம் : பிலஹரி, கேதாரம், ஆரபி, தன்யாசி.
* நடுப்பகல் : ஸ்ரீராகம், சாவேரி, மத்யமாவதி, மணிரங்கு, மோஹனம் .
* சந்தியா காலம் : சங்கராபரணம், கல்யாணி, நாட்டைக்குறிஞ்சி, பூர்விக கல்யாணி .
* இரவு : காம்போதி, தோடி, பைரவி, நீலாம்பரி .
* தீபாராதனை வேளை : மிஸ்ர மல்லாரி, தேவாரம், திருப்புகழ், அஷ்டபதி, திருப்பாவை .
* யாகசாலை வரை : மல்லாரி .
* யாகசாலை முதல் கோபுர வாசல் வரை : திரிபுடை மல்லாரி .
* கோவிலுக்குள் : துரிதகால திரிபுடை மல்லாரி .
* நிவேதன வேளை : தாளிகை மல்லாரி .
* கும்பம் எழுந்தருளல் செய்யும் போது : தீர்த்த மல்லாரி .
* ஸ்வாமி வீதியுலா வேளை : ராகம், தானம், பல்லவியுடன் கீர்த்தனைகள் .
* பள்ளியறைக்கு எழுந்தருளும் வேளை : ஆனந்த பைரவி, கேதாரகௌளை .
* பள்ளியறைக்கு சேர்த்தபின் : நீலாம்பரி .
---- தினமலர் . நவம்பர் 11 .2010 .

Sunday, December 4, 2011

ஆலய வாத்தியங்கள் ..

ஆலய வாத்தியங்கள் பஞ்சபூத அடிப்படையில் ஆனவைதான் :
1 . ப்ருதிவி ( நிலம் ) வாத்யம் : மரத்தினால் செய்யப்பட்டவை .
2 . அப்பு ( நீர் ) வாத்யம் : உலோகத்தினால் செய்யப்பட்டவை .
3 . வாயு வாத்யம் : துளை உள்ள வாத்யங்கள் .
4 . ஆகாய வாத்யம் : சங்கநாதம், தாள வாத்யம் .
5 . அக்னி வாத்யம் : நரம்பு வாத்யங்கள் .
--- தினமலர் . நவம்பர் 11 .2010 .

Saturday, December 3, 2011

அமேசான் காடுகள் .

உலகில் உள்ள காடுகளிலேயே மிகப் பெரியது அமேசான் காடுகள்தான் . அடர்த்தியானதும் இவைதான் . அமேசான் என்ற வார்த்தைக்கு, ' திடகாத்திரமான, உயரமான பெண் ' என்று ஓர் அர்த்தம் இருப்பதால், அமேசான் நதியை ' நதிகளின் ராணி ' ( 4,000 மைல்கள் நீளம் ) என்று அழைக்கிறார்கள் . நதியைச் சூழ்ந்திருக்கும் காடு, சந்தேகமே இல்லாமல் ராஜாதானே ?
பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்ளிட்ட எட்டு நாடுகளை எல்லைகளாகக் கொண்ட அமேசான் காடு, 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவுகொண்டது . பூமிப் பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவிகிதம் இங்குதான் உற்பத்தியாகிறது . உலகப் பறவை இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்குதான் இருக்கின்றன . உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் ( தாவரம், விலங்கு, பூச்சி ) அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் உண்டு . 2,500 வகை மீன்கள், 1,500 வகைப் பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்கள் இந்த காடுகளில் உள்ளன .
அமேசான் காடுகளை நான்கு தளங்களாகப் பிரிக்கலாம் . மேல் தளத்தில் கழுகு, பருந்து போன்ற பறவைகளும், அடுத்தத்தளத்தில் குரங்கு போன்ற உயிரினங்களும், மூன்றாவது தளத்தில் பூச்சிகள், ஊர்வன போன்ற விலங்குகளும் வாழ்கின்றன . தரைப் பகுதி பயங்கர காட்டு விலங்குகளுக்கானது . ( அனகோண்டா இருப்பது இந்தக் காடுகளில்தான் ).
இந்தக் காடு மற்றும் நதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள் . அமேசான் நதி 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்கொண்டு, பிறக்கும் இடத்தில் இருந்து சுமார் 6.712 கி.மீ. கடந்து வந்து கடலில் கலக்கிறது . இங்கு இருக்கும் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட தாவரங்களை இன்னமும் தாவரவியல் வல்லுனர்களே படித்தது இல்லை என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உணர்த்தும் !
--- பா.முருகானந்தம், தீபக், அ.ஆதித்தியன் . காடு விகடன் இணைப்பு . 27 . 1 . 10 .

Friday, December 2, 2011

மன உளைச்சலா...

மன உளைச்சலா முக மசாஜ் போதும் !
இங்கிலாந்து நாட்டு மனோதத்துவ நிபுணர்கள், மன உளைச்சல் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்தனர் . மன உளைச்சலுக்கு மாத்திரை போடாமல் தீர்வு காணும் சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர் . இதற்கு " பேசியல் ரெப்ளக்சாலஜி " என்று பெயர் சூட்டி உள்ளனர் . இது வேறு ஒன்றும் இல்லை . முகத்தில் லேசாக மசாஜ் செய்வதுதான் .
மன உளைச்சலுக்கு ஆளானவர்களின் முகத்தில் கன்னம், தாடை, நெற்றியில் பட்டுத்துணியால் ஒற்றி எடுப்பது போல மெதுவாக குத்தியும் அழுத்தி தடவியும் மசாஜ் செய்வதுதான் பேசியல் ரெப்ளக்சாலஜி .
சீனாவின் அக்குபஞ்சர் முறையை பின்பற்றி இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது . உடலின் அத்தனை உறுப்புகளின் நரம்புகளும் முகம் வழியாகத்தான் மூளைக்கு செல்கின்றன . எனவே இந்த நரம்புகளை தூண்டும் வகையில் இதமாக மசாஜ் செய்தால், மன உளைச்சல் போயே போய்விடும் . அழுத்தம் குறைந்து மனசு லேசாகிவிடும் . தூக்கம் கெட்டு அவதிப்படுபவர்கள் நன்றாக தூங்கமுடியும் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள் .
--- தினமலர் 10 . 11 . 10 .

Thursday, December 1, 2011

ஒபாமா .

' We Can ' என்ற ஒற்றை ஸ்லோகன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி பதவியை எட்டிப்பிடித்தவர் பராக் உசேன் ஒபாமா ! மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவில் அமெரிக்கா சிக்கித் தவித்த வேளையில் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் கறுப்பின அதிபர் . பூ மழை தூவி வசந்தங்கள் வாழத்த பதவிக்கு வந்தவர் . அதன் பிறகு எதிர்கொண்டது அனைத்தும் கண்டனங்களும் ஆவேசக் கோபதாபங்களும்தான் !
* அமெரிக்கா ஹவாய் மாகாணத்தின் ஹோனோலுலுவில் 1961 - ம் ஆண்டு ஆகஸ்ட் 4 - ம் தேதி பிறந்தார் . கென்யாவின் ஸ்வாஹிலி மொழியில் ' பராக் ' என்றால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று பொருள் !
* ஒபாமாவின் அப்பா ஒபாமா சீனியர் ஆண்டன் ஹாமை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் . திருமணத்தின்போதே ஒபாமா மூன்று மாதக் குழந்தையாக ஆன் வயிற்றில் இருந்தார் !
* ஒபாமா, அவரது பெற்றோருக்கு ஒரே மகன்தான் . ஆனால், தந்தை மற்றும் தாயின் மறுமணங்களால் இவருக்கு எட்டு சகோதர, சகோதரிகள் உண்டு !
* இடது கைப் பழக்கம்கொண்ட ஒபாமா, தினமும் உடற்பயிற்சி செய்வார் . கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும்தான் உடற்பயிற்சிக்கு ஓய்வு !
* சிகாகோ சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 12 ஆண்டுகள் ' சிறந்த பேராசிரியர் ' ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கு உரியவர் !
* சிகாகோ சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிற்சிபெற்றபோது அறிமுகமான மிஷேலைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் . மலியா, சஷா என்று இரண்டு குழந்தைகள் !
* மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், சீசர் சாவேஸ் ( விவசாயிகளின் நலனுக்காகப் போராடிய மெக்சிக்கோ அமெரிக்கன் ) ஆகிய மூவரும்தான் தன் ரோல்மாடல் ஹீரோக்கள் என்று குறிப்பிடுவார் .
* " இங்கே கறுப்பு அமெரிக்கா, வெள்ளை அமெரிக்கா, ஆசிய அமெரிக்கா, கிறிஸ்துவ அமெரிக்கா என்றெல்லாம் எதுவும் இல்லை . இங்கே இருப்பது எல்லாம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காதான் ! " என்று தாய்நாட்டை உயர்த்திப் பிடிக்கும் பேச்சுக்களால் கைதட்டல்களை அள்ளி வாக்குகளைக் கவர்ந்தவர் ஒபாமா !
* ' அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி ' என்று செய்தி வெளியானவுடன், இன்ப அதிர்ச்சி தாங்க முடியாத லட்சக்கணக்கான ஆஃப்ரோ -- அமெரிக்கர்கள் வீதிகளில் வாய்விட்டு அழுத காட்சிகள் அப்போது டி.ஆர்.பி ஹிட் சென்சேஷன் !
* ஒபாமா அதிபராகப் பதவியேற்றபோது, வாஷிங்டனில் 2.4 டிகிரி செல்சியஸ் குளிரையும் மீறி, 20 லட்சம் பேர் திரண்டார்கள் . கிளிண்டன் இரண்டாவது முறை பதவியேற்றபோது, 50 ஆயிரம் பேர் நேரில் கூடியதே அதுவரையிலான சாதனை !
* 2009 -ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது . " அந்தப் பரிசுக்கு ஒபாமா தகுதியானவரா என்பது ஒருபுறம் இருக்கட்டும் ... இந்தப் பரிசை அளித்ததன் மூலம் அமெரிக்கர்களைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டது நோபல் கமிட்டி . பதவி ஏற்ற ஒன்பதே மாதங்களில் அவருக்கு அளிகப்பட்ட இந்த அங்கீகாரம் மிகவும் பிரமாண்டமானது ! " என தலையங்கம் எழுதியது அமெரிக்காவின் மனசாட்சியான ' தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ' பத்திரிகை !
* உலகமே எதிர்பார்த்தபடி அதிபராகப் பதவியேற்றவுடன் ஒபாமாவால் அற்புதங்களை நிகழ்த்த்த முடியவில்லை . ' அமெரிக்காவின் இன்றைய அரசியல் நிலையும், யதார்த்த சூழ் நிலையும் ஒபாமாவின் கனவுகளை இப்போதைக்குச் சாத்தியப்படுத்தாது ! ' என்கிறார்கள் அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் !
---சார்லஸ் . ஆனந்த விகடன் , 10 . 11 . 10 .