Wednesday, October 26, 2011

டிப்ஸ் .


* தேங்காய் துருவுவதற்கு முன், தேங்காய் மூடியைத் தண்ணீரில் நனைத்துவிட்டுத் துருவினால், மூடியில் உள்ள நார், தேங்காய்த் துருவலில் விழாது .
* ரவா தோசை வார்க்கும் போது, ரவையை வறுத்துக் கொண்டு தோசை மாவில் கரைத்து வார்த்தால், கல்லில் ஒட்டாமல் வார்க்க வரும் .
* சன்னா மசாலா, பைங்கன் பர்தா போன்ற வட மாநில ரெசபிகள் செய்யும்போது கொஞ்சம் பதம் தப்பினாலும் கிரேவி நீர்த்துப்போய்விடும் . அப்போது சிறிதளவு வேர்க்கடலையைப் பொடித்து போடுங்கள் . கிரேவி ' திக் 'காகி விடும் .
* இழைக் கோலம் போட திடீரென்று மாவு தேவைப்படும்போது இந்த ஈஸி வழி உங்களுக்கு கை கொடுக்கும் . ஒரு டம்ளர் அரிசியை ஊறவைத்து கெட்டியாக நைசாக மிக்க்ஸியில் அரைத்து ஓர் தட்டில் ஊற்றி வெயிலில் 2 நாட்கள் வைக்கவும் . நன்றாக காய்ந்ததும் அதை பொடி செய்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால், இழைக் கோலம் போடும்போது தேவையான மாவை தண்ணீரில் கரைத்து இழைக் கோலம் போடலாம் .
* முட்டை உபயோகிக்கும் வீடுகளில் முட்டையை உடைத்து ஊற்றியபின், அதை அப்படியே முழு ஓட்டுடன் தூக்கி எறியக்கூடாது . முட்டையில் ஓட்டை ஒட்டி உள்ள பகுதியில் வெண்மையாக ஒரு திசு ஒட்டிக் கொண்டிருக்கும் . இந்த திசுவின் வாசனை, பாம்புகளுக்கும், எலிகளுக்கும் ரொம்பப் பிடிக்கும் . அதை சாப்பிட அவைகள் முட்டை ஓடுகளைத் தேடி வரும் . எனவே, முட்டை ஓடுகளை முழுவதுமாக தூக்கி எறியாமல் தூளாக உடைத்து, ஒரு பேப்பரில் பொட்டலம் கட்டி அப்புறப்படுத்த வேண்டும் .
--- குமுதம் சிநேகிதி , ஜனவரி 16 - 31 , 2011 . இதழ் உதவி ; N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு ) ,கொல்லுமாங்குடி

No comments: