Saturday, October 15, 2011

அட... இப்படியா சங்கதி ? !

' அற்பனுக்கு வாழ்வு வந்தா... அர்த்த ராத்திரியில குடை பிடிப்பான் '
அவன் அற்பனாகவே இருக்கட்டும்... அர்த்த ராத்திரியில மழை வந்தா, குடை பிடிக்காம என்ன செய்வான் ? இல்ல... அர்த்த ராத்திரியில குடை பிடிக்கிறவனெல்லாம் அற்பன்னு சொல்லிவிட முடியுமா ? ஆனா , முன்னோருங்க சொல்லிவெச்ச விஷயமே வேற..! அதாவது மத்தவங்களுக்கு கொடுத்து வாழனுமுன்னு நினைக்கிற மனசு உள்ளவங்ககிட்ட எந்த நேரத்துல வேணும்னாலும் உதவின்னு போய் நிக்கலாம் . தாராளமா கொடை கொடுப்பாங்கறதுதான் விஷயம் . இதை, ' அர்ப்பணித்து வாழ்பவன் , அர்த்த ராத்தியியிலும்கூட கொடை கொடுப்பான் 'னு சொல்ல ஆரம்பிச்சு... கடைசியில ' அர்ப்பணிப்பு ' , ' அற்பன் ' னு மாறிடுச்சு .
' நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ! '
இதைக் கேட்டதுமே... ' நல்லவங்களா இருந்தா , ஒரு தடவை சொன்னதுமே புரிஞ்சுகிட்டு நடந்துக்கணும்கிற அர்த்தத்துல சொல்லியிருப்பாங்க' னு நினைப்போம் . ஆனா , கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா... ' நல்ல மாட்டுக்கு எதுக்காக சூடு வைக்கணும் ? 'னு கேட்கத் தோணும் . அதாவது...ஒரு மாடு ஆரோக்கியமா...திடகாத்திரமா இருக்குதானு கவனிக்கிறதுக்கு அதை நிலத்துல நடக்க வைப்பாங்க . அதனோட சுவடு , ஆழமா பதிஞ்சா... அது நல்ல மாடு . அதைத்தான் , ' நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு ' னு சொல்லி வெச்சாங்க ... காலப்போக்குல அதுல ' சூடு ' வெச்சுட்டாங்க .
--- மெய்யழகன் . அவள் விகடன் , ஜனவரி 16 , 2010 .

No comments: