Monday, October 31, 2011

' NOTABLEPERSONS '


NOTABLEPERSONS ' என சிலர் விளம்பரப்படுத்தப்படுகிறார்கள் . அவர்களில் பெரும்பாலோனோர் உருப்படியானவர்களாக இருக்கமாட்டார்கள் ! இந்த வாசகத்தை சிறிது மாற்றி அமைத்தாலே போதும் ; இந்த உண்மை விளங்கிவிடும் . எப்படி மாற்றவேண்டும் ? இதோ , இப்படித்தான் :
NOT ABLE PERSONS !
--- ' உலக சரித்திர நூலில் ' ஜவஹர்லால் நேரு .
கண நேரம் என்பது ...
நூறு தாமரை இதழ்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி அவற்றினூடே ஊசியைச் செலுத்தினால் அவ்வூசி முனை ஓரிதழுக்கும் மற்றோரிதழுக்கும் இடையே கடந்து செல்லும் கால அளவுதான் கண நேரம் என்பது .
--- ஆனந்தவிகடன் , 29 . 12 . 2010 .

Sunday, October 30, 2011

தர்ப்பணம் .


தர்ப்பணம் : சில குறிப்புகள்..
* முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது .
* முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது, தாம்பாளத்தில் கூர்ச்சம் வைத்து பித்ருக்களை ஆவாஹனம் செய்தபிறகு கூர்ச்சம் இருக்கும் தாம்பாளத்தை வேறுஇடத்துக்கு நகர்த்தக்கூடாது .
* குழந்தை பிறந்த தீட்டு அல்லது உறவினர் இறந்த தீட்டு ஆகியவற்றை அனுஷ்டிக்கும்போது நடுவில் அமாவாசை மாதப்பிறப்பு போன்ற தர்ப்பணம் செய்யவேண்டிய நாட்கள் வந்தால், அன்று தர்ப்பணம் செய்யக்கூடாது .
* சிரார்த்த சமையலில் மிளகாய் சேர்க்கக் கூடாது . அதற்குப் பதிலாக மிளகு சேர்க்கலாம் .
* தர்ப்பணம் செய்பவர், சிரார்த்தம் செய்வதற்கு முன்பாக அதே பட்சத்தில் எண்ணை தேய்த்துக் கொள்வதோ, சவரம் செய்துகொள்வதோ கூடாது .
* அமாவாசை போன்ற நாட்களில் தர்ப்பணம் செய்யும்போது எள்ளை மடியில் வைத்துக் கொண்டு தர்ப்பணம் செய்யக்கூடாது .
* தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக்கூடாது .
* பூஜைகள், ஹோமங்கள், தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவை நடைபெறும் காலங்களில் புதிய வேஷ்டியாக இருந்தாலும் கரையில்லாத வேஷ்டியை கட்டிக்கொள்ளக்கூடாது . அப்படிப்பட்ட வேஷ்டியை மற்றவர்க்கும் தானம் செய்யக்கூடாது .
* நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது ; அதுபோல், கரையில் இருந்துகொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது .
--- தினமலர் இணைப்பு . ஜனவரி 6,. 2011 .

சூரியனின் பெருமைகள் !


பொன் வண்ணத்தேரில் மத்தியில் அமையும் பத்மாசனத்தில் இரண்டு மனைவியருடன், ஒளிமயமாக எழுந்தருளியிருப்பவன் சூரியன் .
சூரியதேவன் தேருக்கு ஏழு குதிரைகள் . காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஹ்ருக், அனுஷ்டுப், பங்தி என்னும் ஏழு வகையான சப்த வஸ்ஸுக்கள் ஏழு பச்சைக் குதிரைகளாக அவனது பொன்வண்ணத் தேரை அலங்க்கரிக்கின்றன .
பொதுவாக தேர் என்றால் இரண்டு சக்கரங்கள்தானே இருக்கும் . ஆனால், சூரியதேவன் தேருக்கோ ஒரேஒரு சக்கரம்தான் உண்டு . கருடனுக்கு ஒரு சகோதரன் உண்டு . அவன் பெயர் அருணன் . அவன்தான் சூரியனுடைய தேரை ஓட்டக்கூடிய சாரதி .
அதிகாலை சூரியன் ரிக்வேத சொரூபமாக இருக்கிறார் . உச்சி காலத்தில் யஜுர் சொரூபமாகிறான் . மாலை நேரத்தில் சாமவேத சொரூபமாக இருக்கிறான் என்கிறார்கள் .
இப்படி பல பெருமைகள் படைத்த சூரியதேவன் தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு மூர்த்தியின் பெயரால் வணங்கப்படுகிறார் . சித்திரை மாதத்தில் விஷ்ணுவாகவும், வைகாசி மாதத்தில் அரியமா என்றும் . ஆனியில் விவஸ்வான் என்றும், ஆடியில் அம்சுமான் என்றும், ஆவணியில் பிரசன்யன் என்றும், புரட்டாசியில் வருணன் என்றும், ஐப்பசியில் இந்திரன் என்றும், கார்த்திகையில் தாதா என்றும், மார்கழியில் விஸ்வான் என்றும், தையில் பூஷ்வா என்றும், மாசியில் பகன் என்றும், பங்குனியில் துவஷ்டா என்றும் பெயர் பெறுகிறார் .
பருவங்களுக்கு சூரியனே காரணம் . ஆண்டினை ஆறு பருவங்ககளாகப் பிரிப்பார்கள் . கார், கூதிர், முன்பனி, பின்பனி, வேனில், இளவேனில் என்பவை ஆறு பருவங்களாகும் . இரண்டு இரண்டு மாதங்களை ஒரு பருவமாக சொல்வார்கள் . பருவத்தை ' ருது ' என்று வடமொழியில் சொல்வார்கள் . வசந்த ருது, கிரீஷ்ம ருது, வர்ஷருது, சரத்ருது, ஹேமந்தருது சிசிரருது என்பன ருதுக்கள் . சூரியன் ஒவ்வொரு ருதுவிலும் ஒவ்வொரு வர்ணத்தில் இருப்பாராம் .
உதயகிரி எனப்படும் மலையில் தோன்றுகிறார் சூரியன் . அவர் தோன்றும் போது தென்திசையில் இலங்கை நோக்கி துயில்கொள்ளும் த்ருமாலின் காலை பார்த்துக்கொண்டே உதயமாகிறாராம் . எனவேதான் அவர் உதயமாகும் நேரத்துக்கு காலை என்று பெயர் வைத்தார்களாம் . அதுபோலவே மறையும் நேரத்தில் சூரியன் திருமாலின் முழு உருவத்தையும் தரிசிப்பதால் மாலை என்ற பெயர் ஏற்பட்டது என்றும் சொல்வார்கள் .
--- தினமலர் இனைப்பு . ஜனவரி 13 . 2011 .

Saturday, October 29, 2011

சிமென்ட்.


ஒளி ஊடுருவும் சிமென்ட்.
இத்தாலியை சேர்ந்த ' இத்தாலியன் சிமென்ட் குரூப் ' என்ற நிறுவனம் ஒளி ஊடுருவும் சிமின்டை கண்டுபிடித்துள்ளது . நிறமற்ற பிளாஸ்டிக் கலவையைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த சிமென்ட் கலவையை கொண்டு கட்டடம் கட்டினால், இரண்டு செங்கற்களுக்கு இடையிலான இடைவெளி மூலம் வெளிச்சம் ஊடுருவும் . இதனால், சுவருக்கு அப்பால் இருக்கும் பொருட்களை எளிதாக பார்க்கலாம் .
ஒளி ஊடுருவும் வகையில் டிரான்ஸ்பிரன்ட் சிமென்ட் கலவை, நிறமற்ற பிளாஸ்டிக் கலவையால் ஆனது . இந்த கலவையை கொண்டு சுவர் கட்டினால், இரண்டு செங்கற்களுக்கு இடையில் சிமென்ட் கலவை இருப்பதே தெரியாது . தொலைவில் இருந்து பார்ப்பதற்கு இரண்டு கற்களுக்கு இடையில் இடைவெளி இருப்பதுபோல் தெரியும் . ஒளி ஊடுருவும், நிறமற்ற கண்ணாடி போன்ற இந்த கலவையால் கட்டடத்தின் வெளிப்புறத்தில் இருந்து அறைக்குள் ஒளி ஊடுருவும். இதனால் பகல் நேரத்தில் மின் விளக்குகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது . இதனால் கணிசமான அளவு மின்சாரம் சேமிக்கமுடியும் .
--- தினமலர் .ஜனவரி 9 , 2011 .

Friday, October 28, 2011

37 ஸ்பெஷல் !


37 என்ற எண்ணை 3 -ன் மடங்குகளால் பெருக்கினால் இப்படி ' மேஜிக் ' எண்கள் வரும் ! நண்பர்களிடம் சொல்லி அசத்துங்கள் !
37 x 3 = 111
37 x 6 = 222
37 x 9 = 333
37 x 12 = 444
37 x 15 = 555
37 x 16 = 666
37 x 21 = 777
37 x 24 = 888
37 x 27 = 999 .
--- தினமலர் , இணைப்பு . 14 . 1. 2011 .

Thursday, October 27, 2011

வீடுகளுக்கு கதவில்லை !


வீடுகளுக்கு கதவில்லை, வங்கிக்கு பூட்டு கிடையாது !
மாகாராஷ்டிரம் மாநிலம் அகமது நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகான சிற்றூர் ஷானி சிங்னாப்பூர் . உலகப் புகழ் பெற்ற ஷானி கோயில் இங்கு உள்ளது . இதை சூரியன் கோயில் என்றும் சொல்கிறார்கள் . தங்கள் ஊரை கடவுளே காவல் காப்பதாக இந்த ஊர் மக்கள் நம்புகின்றனர் .
இதனால், இந்த ஊரில் எந்த வீட்டுக்கும் கதவு கிடையாது . எல்லா வீடுகளும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது . ஆனால் கதவு மட்டும் இல்லை . நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் . அவர்கள் தங்குவதற்கு அழகான குடில்கள் உள்ளன . அவற்றுக்கும் கதவு இல்லை . எந்த பொருளும் திருடு போனதில்லை . திருடுபவர்களை கடவுள் ஷானி தண்டித்துவிடுவார் என்று மக்கள் உறுதியாக நம்புகின்றனர் .
இந்த கிராமத்தில் யூகோ வங்கி கிளை திறந்துள்ளது . வங்கியை பாதுகாப்பாக பூட்டி வைக்கவும் சேப்டி லாக்கர் அமைக்கவும் நிர்வாகம் முயன்றது . ஊர்மக்கள் ஒத்துக்கொள்ளவில்லை . அப்புறம் என்ன, பகலும் இரவும் வங்கி திறந்தே இருக்கிறது . இந்த வங்கியில் கலெக்ஷன் ஆகும் பணத்தை, விடுமுறை நாட்களில் மட்டுமாவது வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று அருகில் உள்ள வங்கிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது . எந்த வங்கியும் முன்வரவில்லை . இதனால் யூகோ வங்கியின் சேவை திறந்த பெட்டகமாகத்தான் இருக்கிறது .
--- தினமலர் 12 . 1. 2011 .
--- பின்குறிப்பு : நான் எங்கள் குடும்பத்துடன், அங்கு சென்று , ஒரு நாள் தங்கியபோது , அங்குள்ள விடுதிகளிலும் அறைகளிலும் இருக்கும் , குளியல் மற்றும் கழிவறைகளில் கூட கதவு இல்லை என்பதுதான் வேடிக்கை சுற்றுலாவில் சென்றதால் வேறு வழியின்றி தங்க நேரிட்டது . என்பதும் வேறு கதை .

Wednesday, October 26, 2011

டிப்ஸ் .


* தேங்காய் துருவுவதற்கு முன், தேங்காய் மூடியைத் தண்ணீரில் நனைத்துவிட்டுத் துருவினால், மூடியில் உள்ள நார், தேங்காய்த் துருவலில் விழாது .
* ரவா தோசை வார்க்கும் போது, ரவையை வறுத்துக் கொண்டு தோசை மாவில் கரைத்து வார்த்தால், கல்லில் ஒட்டாமல் வார்க்க வரும் .
* சன்னா மசாலா, பைங்கன் பர்தா போன்ற வட மாநில ரெசபிகள் செய்யும்போது கொஞ்சம் பதம் தப்பினாலும் கிரேவி நீர்த்துப்போய்விடும் . அப்போது சிறிதளவு வேர்க்கடலையைப் பொடித்து போடுங்கள் . கிரேவி ' திக் 'காகி விடும் .
* இழைக் கோலம் போட திடீரென்று மாவு தேவைப்படும்போது இந்த ஈஸி வழி உங்களுக்கு கை கொடுக்கும் . ஒரு டம்ளர் அரிசியை ஊறவைத்து கெட்டியாக நைசாக மிக்க்ஸியில் அரைத்து ஓர் தட்டில் ஊற்றி வெயிலில் 2 நாட்கள் வைக்கவும் . நன்றாக காய்ந்ததும் அதை பொடி செய்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால், இழைக் கோலம் போடும்போது தேவையான மாவை தண்ணீரில் கரைத்து இழைக் கோலம் போடலாம் .
* முட்டை உபயோகிக்கும் வீடுகளில் முட்டையை உடைத்து ஊற்றியபின், அதை அப்படியே முழு ஓட்டுடன் தூக்கி எறியக்கூடாது . முட்டையில் ஓட்டை ஒட்டி உள்ள பகுதியில் வெண்மையாக ஒரு திசு ஒட்டிக் கொண்டிருக்கும் . இந்த திசுவின் வாசனை, பாம்புகளுக்கும், எலிகளுக்கும் ரொம்பப் பிடிக்கும் . அதை சாப்பிட அவைகள் முட்டை ஓடுகளைத் தேடி வரும் . எனவே, முட்டை ஓடுகளை முழுவதுமாக தூக்கி எறியாமல் தூளாக உடைத்து, ஒரு பேப்பரில் பொட்டலம் கட்டி அப்புறப்படுத்த வேண்டும் .
--- குமுதம் சிநேகிதி , ஜனவரி 16 - 31 , 2011 . இதழ் உதவி ; N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு ) ,கொல்லுமாங்குடி

Tuesday, October 25, 2011

பாசத் தீ .


ஊருக்குச் சென்று
திரும்பும்போதெல்லாம்
சொல்லுவார் அப்பா
'உடம்பைப் பார்த்துக்கப்பா '.
எனக்கும் ஆசைதான்
சேர்ந்தாற்போல்
நான்கு நாட்கள் விடுமுறையில்
அருகிலேயே இருந்து
அப்பாவைக் கவனித்துக்கொள்ள
என்றாலும்
ஒருபோதும் முடிந்ததில்லை
ஒவ்வோர் இரவிலும்
கட்டிப்பிடித்தபடி
தூக்கத்தில்
மேலே போடும்
மகனின் கால் பிடித்து
அமுக்கிவிடுவேன் இதமாக
அப்பாவை எண்ணிக்கொண்டு !
--- ஆர்.சி.மதிராஜ் , ஆனந்த விகடன் 22 . 11 . 2010 .

Monday, October 24, 2011

ஆண் விலங்குகள் !


பொதுவாக, ஆண் விலங்குகள் அனைத்துக்கும், இனப்பெருக்க உறுப்புக்குள் பாக்குலம் ( baculum ) என்ற ஓர் எலும்பு இருக்கும் . இந்த எலும்புதான் விறைப்புத் தன்மையை நீட்டிக்க உதவுகிறது . சிம்பன்சி மாதிரியான நம் நெருங்கிய உறவுக்கார வானரங்களுக்கும் இந்த பாக்குலம் இருக்கிறது . ஆனால், மனித ஆண்களுக்கு மட்டும் பாக்குலம் இல்லை . ஏன் ? பல நூற்றாண்டுகளாக, பல தலைமுறைகளாக மனிதப் பெண், பாக்குலம் இல்லாத ஆண்களாகப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்ததில்.... கடைசியில் மனித ஆண், பாக்குலம் இல்லாதவனாகவே போய்விட்டான் . எலும்பின் உபயத்தால் விறைப்பு ஏற்படுவதைவிட, எலும்பே இல்லாதபோதும் விறைப்புடன் இயங்குவதுதான் நிஜ வீரியத்தின் வெளிப்பாடு . அதனால் மனிதப் பெண்கள் எல்லோரும் எலும்பு இல்லாத ஆண்களுடன்கூடி, அவர்களின் தரத்தை வித்தியாசப்படுத்த ஆரம்பித்தனர் . ஆணும் காலப்போக்கில் அது இல்லாமலேயே விறைப்புடன் தன்மையைப் பெற்றான் .
---' உயிர்மொழி ' .தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் 17 . 11 . 2010 .

Sunday, October 23, 2011

பேட்டை .கடி .


ரீடர்ஸ் பேட்டை .கடி .
* மயிலுக்கும் கிளிக்கும் உள்ள வித்தியாசம் ....?
யோசிங்க... யோசிங்க....
மயில் தெசியப் பறவை
கிளி ஜோசியப் பறவை !
* சிவன் கோயிலுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்...
அங்கே நந்தி இருக்கும் ;
இங்கே தொந்தி இருக்கும் !
--- லதானந்த் , குங்குமம் , 1 . 11 . 2010 .
--- இதழ் உதவி :S .பிரகாஷ் ( எ ) ஸ்வாமிநாதசர்மா , திருநள்ளாறு .

Saturday, October 22, 2011

வெப்ப அளவு !


வெப்ப அளவு மாற்றும் ஈஸி வழி !
வெப்ப அளவை ' சென்டிகிரேடு ', 'கெல்வின் ', ' பாரஹீட் ', என மூன்று விதமான அலகுகளால் குறிப்பிடுகிறோம் . ஒரு அலகில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றும் ஈஸி வழி இது :
* சென்டிகிரேடை பாரன்ஹீட்டாக மாற்ற 9 ஆல் பெருக்கி, 5 ஆல் வகுத்து, 32 ஐ கூட்ட வேண்டும் .
* பாரன்ஹீட்டை சென்டிகிரேடாக மாற்ற 32 ஐ கழித்து, 5 ஆல் பெருக்கி, 9 ஆல் வகுக்க வேண்டும் .
* சென்டிகிரேடை கெல்வினாக மாற்ற, 273.15 ஐ கூட்டவேண்டும் .
* கெல்வினை சென்டிகிரேடாக மாற்ற, 273.15 ஐ கழிக்க வேண்டும் .
--- தினமலர் , இணைப்பு ஜனவரி 7 , 2011 .

Thursday, October 20, 2011

தகுதி !


பரிணாமவியல் பிதாமகர் சார்லஸ் டார்வினின் முக்கிய கோட்பாடு, ' Survival of the fittest '. எந்த உயிரினம் சூழலுக்கு ஏற்ப தன்னை அட்ஜஸ்ட் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறதோ, அதுவே வாழத் தகுதியானதாக இருக்கும் . தாக்குப்பிடிக்க முடியாதவை அழிந்து போய்விடும் . அரிதான எத்தனை உயிரினங்கள் அழிந்துகொண்டிருப்பதாக தினசரி செய்திகள் படிக்கிறோம் ! ஆனால், எல்லாவற்றையும் தாண்டி ஜீவித்திருக்கும் சாமர்த்தியத்தை மனிதன் பெற்றிருக்கிறான்
------ லதானந்த் , குங்குமம் , 29 . 11 . 2010 .
--- இதழ் உதவி :S .பிரகாஷ் ( எ ) ஸ்வாமிநாதசர்மா , திருநள்ளாறு .

Wednesday, October 19, 2011

டிப்ஸ்...டிப்ஸ்...


* ' தேங்காயைத் துருவி ஃப்ரீஸரில் வைத்தால், பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும் ' என்று நமக்குத் தெரியும் . ஆனால், உபயோகிப்பதற்கு எடுக்கும்போது அது இறுகாமல் இருக்க வேண்டுமே..! முதலில் தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். பிறகு, வாணலியை வெறுமனே நன்கு சூடாக்கி, அடுப்பை அணத்துவிடுங்கள் . துருவலை அதில் பொட்டு, நாலைந்து முரை புரட்டி, ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரீஸரில் வையுங்கள் . எடுக்கும்போது உதிர் உதிராக இருக்கும் . கெட்டியாக இருந்தாலும் ஸ்பூனால் லேசாக சுரண்டும்போதே பூப்பூவாக உதிரும் !
* மட்டர் பனீர், சன்னா சுண்டல் முதலியன செய்ய திடீர் ஐடியா தோன்றுகிறது . ஆனால், கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவற்றை முன்கூட்டியே ஊறவைக்கவில்லை கவலையை விடுங்கள் . வெறும் வாணலியில் அவற்றைப்போட்டு, ஐந்தாறு நிமிடங்கள் நன்கு வறுக்கவும் . பின்னர், இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு, ஒரு சிட்டிகை சமையல் சோடா போட்டு, உப்பு சேர்க்காமல் குக்கரில் ஐந்தாறு விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்தால்... நன்கு வெந்திருக்கும் . அதிகப்படி தண்ணீரைக் கொட்டிவிடாமல் தாளிப்புடன் சுண்ட விடவும் .
--- அவள் விகடன் . 14 . 1. 2011 . இதழ் உதவி ; N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு ) ,கொல்லுமாங்குடி .

Tuesday, October 18, 2011

ஜோக்ஸ் !

* " சார் பில்...."
" இந்தாங்க ...."
" என்ன சார் ரேஷன் கார்டைத் தர்றீங்க ..? "
" நீங்கதானே ஹோட்டல் வாசல்ல ' ஆல் கார்ட்ஸ் அக்சப்டட்'னு போர்டு வெச்சிருக்க்கீங்க...?!
* " ஹலோ... யார் பேசறது ? "
" நான் செல்லம்மா பேசறேன் .."
" நாங்க மட்டும் என்ன கோவமாவா பேசறோம்...? யாருனு சொல்லும்மா ! "
* " கார் ஓட்ட தெரியலன்னா என்ன பண்ணனும் > "
" கார்ல இன்னும் கொஞ்சம் பெரிய ஓட்ட போடணும் ! "
--- அவள் விகடன் . 14 . 1. 2011 . இதழ் உதவி ; N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு ) ,கொல்லுமாங்குடி .

Monday, October 17, 2011

ரோமம் !


ஒரு நாளைக்கு 75 - லிருந்து 150 வரை முடி உதிர்வது சகஜம் . ஒருவர் தலையில் 90,000 லிருந்து 1 லட்சத்து 40,000 வரை முடிகள் இருக்கும் . வெதுவெதுப்பான க்ளைமேட்டில் முடி வளர்ச்சி கூடுதலாக இருக்கும் . கன்னத்திலும் இதர பகுதிகளிலும் இருக்கும் மெல்லிய ரோமங்களை லானுகோ என்பார்கள் /
தலைமுடியிலிருந்து எல்.சிஸ்டெய்ன் என்ற அமினோ அமிலம் பிரிக்கப்பட்டு, அது சாக்லெட்டுகள் மற்றும் பேக்கரியில் கிடைக்கும் சில உணவுப்பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது .
--- லதானந்த் , குங்குமம் , 1 . 11 . 2010 .
--- இதழ் உதவி :S .பிரகாஷ் ( எ ) ஸ்வாமிநாதசர்மா , திருநள்ளாறு

Sunday, October 16, 2011

பொய் மேல் பொய் .

உலகம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது பற்றிக் கடவுளிடம் புகார் செய்ய ஒருவன் சொர்க்கத்துக்குப் போனான் . ' எல்லாம் வல்ல இறைவனே ! நீங்கள் எல்லாம் அறிந்தவர் என்று எல்லோரும் கூறுகிறார்கள் . ஆனால் நீங்கள் படைத்த பூமியில் என்ன நடக்கிறது என்பதே உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன் . உண்மையைப் பற்றி யாருமே கவலைப்படுவது இல்லை ' என்றான் .
இதைக் கடவுள் மறுத்தார் . ' எனக்கு எல்லாம் தெரியும் . அதோ எதிரே உள்ள பலகையைப் பார் , ஒருவர் பொய் சொல்லும் போதெல்லாம் ஒரு சிவப்பு ஒளி பளிச்சிடும் . பொய் சொல்வது யார் என்பதை தெரிந்து கொள்வேன் .'
பலகையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஏராளமான சிவப்பு விளக்குகள் இடைவிடாது பளிச்சிட்டன . ' ஒரே சயத்தில் எல்லா விளக்குகளும் ஏன் பளிச்சிடுகின்றன ? ' என்று கேட்டான் அப்பாவி மனிதன் .
கடவுள் சொன்னார் , " ஓ அதுவா ? இப்போது ஆல் இந்தியா ரேடியோவில், தூர்தர்ஷன் செய்திகளைக் கேட்டிக் கொண்டிருக்கிறோம் ."
--- ' குஷ்வந்தசிங் ஜோக்ஸ் ' புத்தகத்தில் இருந்து ஆர். ஆர். பூபதி .
--- தினமணிகதிர் , மார்ச் 21 , 1993 .

Saturday, October 15, 2011

உயரம் கண்டுபிடிக்க....

கட்டிடத்தின் உயரம் கண்டுபிடிக்க....
கட்டிடத்தின் உயரம் கண்டுபிடிக்க ஒரு வழி !
ஒரு உயரமான கட்டிடத்தின் உயரம் என்ன என்பதை ஒரு மாடிப்படி கூட ஏறாமல் கண்டுபிடிக்க முடியுமா > முடியும் என்று கூறினார் வானிலை அறிஞர் தேலீஸ் .
தம் கையில் இருந்த கோல் ஒன்றை செங்குத்தாக மணலில் நட்டார் . கட்டிடத்தின் உயரம் காணவேண்டிய கட்டிடத்தின் நிழலை செங்குத்தாக நட்ட அந்த கோலின் நிழலோடு ஒப்பிட்டார் . நாலடி நீளமுள்ள கோல் ஒன்று பகல் வேளையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இரண்டடி நீளமுள்ள நிழலை விழச்செய்கிறது என்றால், 40 அடி நிழலை விழச்செய்யும் கட்டிடத்தின் உயரம் எத்தனை அடியாக இருக்கும் ? 80 அடியாகத்தானே இருக்கும் . இவ்வாறு கணக்கிட்டுக் கொள்ள வேண்டியதுதான் என்றார் தேலீஸ் .
--- ' சரித்திரத்தின் பொன்னேடுகள் ' என்ற நூலிலிருந்து , கே.ஏ. காளிமுத்து .
--- தினமலர் வாரமலர் . நவம்பர் 8 . 1992 .

அட... இப்படியா சங்கதி ? !

' அற்பனுக்கு வாழ்வு வந்தா... அர்த்த ராத்திரியில குடை பிடிப்பான் '
அவன் அற்பனாகவே இருக்கட்டும்... அர்த்த ராத்திரியில மழை வந்தா, குடை பிடிக்காம என்ன செய்வான் ? இல்ல... அர்த்த ராத்திரியில குடை பிடிக்கிறவனெல்லாம் அற்பன்னு சொல்லிவிட முடியுமா ? ஆனா , முன்னோருங்க சொல்லிவெச்ச விஷயமே வேற..! அதாவது மத்தவங்களுக்கு கொடுத்து வாழனுமுன்னு நினைக்கிற மனசு உள்ளவங்ககிட்ட எந்த நேரத்துல வேணும்னாலும் உதவின்னு போய் நிக்கலாம் . தாராளமா கொடை கொடுப்பாங்கறதுதான் விஷயம் . இதை, ' அர்ப்பணித்து வாழ்பவன் , அர்த்த ராத்தியியிலும்கூட கொடை கொடுப்பான் 'னு சொல்ல ஆரம்பிச்சு... கடைசியில ' அர்ப்பணிப்பு ' , ' அற்பன் ' னு மாறிடுச்சு .
' நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ! '
இதைக் கேட்டதுமே... ' நல்லவங்களா இருந்தா , ஒரு தடவை சொன்னதுமே புரிஞ்சுகிட்டு நடந்துக்கணும்கிற அர்த்தத்துல சொல்லியிருப்பாங்க' னு நினைப்போம் . ஆனா , கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா... ' நல்ல மாட்டுக்கு எதுக்காக சூடு வைக்கணும் ? 'னு கேட்கத் தோணும் . அதாவது...ஒரு மாடு ஆரோக்கியமா...திடகாத்திரமா இருக்குதானு கவனிக்கிறதுக்கு அதை நிலத்துல நடக்க வைப்பாங்க . அதனோட சுவடு , ஆழமா பதிஞ்சா... அது நல்ல மாடு . அதைத்தான் , ' நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு ' னு சொல்லி வெச்சாங்க ... காலப்போக்குல அதுல ' சூடு ' வெச்சுட்டாங்க .
--- மெய்யழகன் . அவள் விகடன் , ஜனவரி 16 , 2010 .

Friday, October 14, 2011

வள்ளுவரும் , வாசுகியும் .

வாசுகி இறந்த சோகம் தாளாது வள்ளுவர் பாடிய பாடல் இது :
' அடிசிற்கினியாளே
அன்புடையாளே
படிசொல் தவறாத
பாவாய் ! -- அடிவருடிப்
பின்தூங்கி முன்னெழூஉம்
பேதையே ! போதியோ ?
என் தூங்கும் கண் இரா .'
' இனிய உணவுகளைச் சமைத்து தந்தவளே ! அன்பு நிறைந்தவளே ! என் பேச்சைத் தட்டாதவளே ! நான் தூங்கும்வரை என் பாதங்களை வருடிக் கொடுத்து, அதன் பின் தூங்கி, நான் எழும் முன் எழுபவளே ! என்னைப் பிரிந்து சென்றுவிட்டாயே ! கொல்கிறதே வேதனை , தொலைந்ததே என் தூக்கம் ' என்றெல்லாம் சோககீதம் பாடி மனைவிக்கு அஞ்சலி செலுத்துகிறார் .
--- தினமலர் . 26 . 12 . 2010 .

Thursday, October 13, 2011

1 = 2 ...!

உங்கள் நண்பர்களிடம் , ' 1 = 2 என்று நிரூபிக்கிறேன் ' என்று சொல்லுங்கள் .
அவர்கள், ' எப்படி சாத்தியம்...' என்று ஆச்சரியமாகக் கேட்பார்கள் .
' அல்ஜீப்ரா சமன்பாடு விதிகளைப் பயன்படுத்தி நிரூபிக்கிறேன் , பாருங்கள் ! ' என்று சொல்லிவிட்டு, நீங்கள் செய்து காட்டவேண்டிய கணக்கு முறை இதுதான் :
a = b என்று வைத்துக்கொள்வோம் .
இரண்டையும் b - ஆல் பெருக்கினால் , a x b = b x b .
இதை, ab = b 2
இருபுறத்திலும் a 2 - ஐ கழித்தால், ab - a2 = b2 - a2
இதை அல்ஜீப்ரா விதிகள்படி மாற்றி எழுதினால், a ( b -- a ) = ( b + a ) ( b -- a )
இரு புறத்திலும் பொதுவாக உள்ள ( b -- a ) - ஐ நீக்கினால், a = ( b + a )
இனி a - க்கு 1 என்று எண் கொடுப்போம் .
என்பதால் , b - ன் மதிப்பு 1 தான் .
இனி a = ( b + a ) என்ற சமன்பாட்டில் a மற்றும் b மதிப்பை இணைத்தால் , 1 = ( 1 + 1 ) ; அதாவது, 1 = 2 .
--- தினமலர் டிசம்பர் 31 , 2010 .

Tuesday, October 11, 2011

டிப்ஸ்...

* குழந்தைகளுக்கு, தங்கத்திலான தோடுகளை அணிவிக்கும்போது திருகாணியில், நகப்பூச்சு தடவி மாட்டினால் தோடு இருக்கமாக இருப்பதோடு, தொலைந்துவிடுமோ என்கிற டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் .
* விக்கலை நிறுத்த முடியவில்லையா ? ஒரு டீஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டு அது கரையும் முன்பே விழுங்கவும் . மணலாகத் தொண்டைக்குள் இறங்கும் சர்க்கரை , அங்குள்ள நுண்ணிய நரம்பு முனைகளை வருடி, விக்கலுக்குக் காரணமான ஃப்ரீனிக் என்னும் நரம்பை அமைதிப் படுத்துவதால் விக்கல் விரைவில் நின்றுவிடும் .
* ஸ்கெட்ச் பேனா கறையைப் போக்குவதற்கு அசிடோன் ( நகப்பூச்சு அழிக்கும் திரவம் ) தடவினால் போதும் . கறை போய்விடும் .
* மழைக்காலத்தில், பீரோவுக்குள் இருக்கும் துணிகள் ஈரப்பதத்துடன் இருக்கும் . இதைத் தவிர்க்க, பத்து சாக்பீஸ்களை நூலில் கட்டி உள்பகுதியில் தொங்க் விடுங்கள் . இது பீரோவின் உள்ளே இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி துணிகளைக் காக்கும் .
* அதிக நேரம் உட்கார்ந்தால் கால் மரத்துப் போகிறதா ? கால் கட்டை விரலில் நான்கைந்து முறை விரல்களால் சுண்டி விடுங்கள் . சட்டென்று விறுவிறுப்புக் குறைந்து விடும் .
* சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிட்டிகை உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது .
* அரிசிமாவு, ரவை, மைதா 3 : 1 : 1/2 என்ற விகிதத்தில் இவற்றைக் கலந்து வார்த்தால் ரவா தோசை மொறுமொறுப்பாக இருக்கும் .
--- மங்கையர் மலர் , ஜனவரி 2011 . இதழ் உதவி : N கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு . ( கொல்லுமாங்குடி ) .

Monday, October 10, 2011

அதிசய எண் !

142857 x 1 = 142857
142857 x 2 = 285714
142857 x 3 = 428571
142857 x 4 = 571428
142857 x 5 = 714285
142857 x 6 = 857142
அருகே உள்ள சமன்பாடுகளைக் கவனமாகப் பாருங்க... இதில் ஒரு அதிசயம் இருக்கிறது ...கண்டுபிடிங்க !
எல்லா பெருக்கலின் விடைகளிலும் 1 , 4 , 2 , 8 , 5 , 7 ஆகிய எண்களே இடம் மாறி வருகின்றன .
--- தினமலர் டிசம்பர் 31 , 2010 .

Sunday, October 9, 2011

உங்களுக்குத் தெரியுமா ?

நெட்டில் சுட்டது !
* அட்லாண்டிக் பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறைதான் சூரியன் உதயமாகிறது .
* மழைத்துளியைக் கூட பார்த்திராத இடம் உலகில் உண்டு . சிலி நாட்டின் அடாகாமா பாலைவனத்தில் உள்ள காலாமா என்னும் இடம்தான் அது .
* முதன்முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தீன் மொழிதான் .
* உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூஸிலாந்து .
* உலகிலேயே மிகப் பெரிய மசூதி உள்ள இடம் சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் .
* உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீகுவான் யூ .
* விமானத்தில் செல்லும்போது வானவில் தோன்றினால் அதன் முழு வட்டத்தையும் ரசிக்கலாம் .
* ஆற்று நீரை விட கடல் நீரின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் கடலில் நீந்துவது சுலபமாக இருக்கும் .
--- மங்கையர் மலர் , ஜனவரி 2011 . இதழ் உதவி : N கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு . ( கொல்லுமாங்குடி ) .

Saturday, October 8, 2011

தகவல் களஞ்சியம் .

* சகாரா பாலைவனம், சுமார் 36 லட்சம் சதுரமைல் பரப்பளவு கொண்டது .
* மிக மதிப்பு வாய்ந்த உலோகம், புளூட்டோனியம் .
* 13 நாடுகளின் எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே நாடு சீனா .
* பாலில் இரும்புச்சத்து கிடையாது .
* ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்தவகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது .
* நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது .
* ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும் .
* குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது .
--- தினத்தந்தி 31 12 . 2010 . இதழ் உதவி A சோமசுந்திரம் , ஸ்தபதியார் , திருநள்ளாறு .

Friday, October 7, 2011

நவவித பக்தி .

பக்தியில் 9 வகைகள் உண்டு ...
இறைவனுடைய பெருமைகளையும், குணங்களையும் கேட்டல் : சிரவணம் .
இறைவனின் குணங்களையும், நாமங்களையும் பாடுதல் : கீர்த்தனம் .
இறைவனுடைய குணங்களையும், பெருமைகளையும் மனதால் நினைத்தல் : ஸ்மரணம் .
இறைவனின் திருவடிகளுக்குத் தொண்டு செய்தல் : பாதஸேவனம் .
இறைவனை நீர், மலரால் வழிபடுதல் : அர்ச்சனம் .
வழிபாடு முடிந்ததும் வீழ்ந்து பணிதல் : வந்தனம் .
இறைவனை ஆண்டானாகவும், நம்மை அடிமையாகவும் எண்ணித் தொண்டு செய்தல் : தாஸ்யம் .
இறைவனை நமது தோழனாக எண்ணுதல் : ஸ்காயம் .
நமது செயல்கள் யாவையும் இறைவனுக்கு அர்ப்பணித்தல் : ஆத்ம நிவேதனம் .
--- தினமலர் , இணைப்பு . டிசம்பர் 30 , 2010 .

Thursday, October 6, 2011

பயணம் செய்ய ஏற்ற நாள் .

பொதுவாக கிராமங்களில் உள்ளவர்கள் வெளியூருக்குச் செல்ல வேண்டுமென்றால், அன்றைய தினம் பயணம் செய்ய உகந்த நாளா ? என்று காலண்டரைப் பார்த்து, பிறகு முடிவு செய்வார்கள் . எந்த நாளில் பயணத்தை மேற்கொண்டால் அந்தப் பயணம் இனிமையாக அமையும் என்று பார்ப்போமா ...?
* அசுவினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் வரும் நாட்கள் பயணம் செய்ய ஏற்றவை .
* துதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி, ஆகிய திதிகள் உள்ள நாட்கள் சிறந்தவை .
* மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய லக்ன காலங்கள் உத்தமம் .
* புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் பயணம் செய்வது நல்லது .
--- தினத்தந்தி 31 12 . 2010 . இதழ் உதவி A சோமசுந்திரம் , ஸ்தபதியார் , திருநள்ளாறு .

Wednesday, October 5, 2011

பஞ்சமுக தரிசன பலன் !

கிழக்கு முகம் : ஹனுமான் . இவரது தரிசனம் நல்ல புத்தி, வெற்றியை அருளும் !
தெற்கு முகம் : நரசிம்மர் .. இவரது தரிசனம் துணிவையும் வெற்றியையும் அருளும் !
மேற்கு முகம் : கருடர் . இவரது தரிசனத்தால் விஷ பாதிப்புகள், நோய் நொடிகள், பில்லி சூனியத் தொல்லைகள் அகலும் !
வடக்கு முகம் : வராஹர் . இவரது தரிசனம் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும் !
ஆகாயம் பார்த்திருக்கும் முகம் : ஹயக்ரீவர் . இவரது தரிசனம் ஞானத்தையும் நல்ல வாரிசுகளையும் அருளும் !
--- தினமலர் , இணைப்பு . டிசம்பர் 30 , 2010 .

Tuesday, October 4, 2011

உயிரினங்களின் வகைகள் .

பூமியில் கோடிக்கணக்கான உயிர்கள் உள்ளன . இவற்றை வகைப்படுத்துவது கடினம் . ஆனாலும், முன்னோர்கள் உயிரினங்களை ஆதிகாலம் முதலே பகுத்துப் பார்க்க தொடங்கினர் . நமது முன்னோர்கள் செடி, கொடிகளை 4 பிரிவாகவும், பிராணிகளை 3 பிரிவாகவும் பிரித்தனர் . இதன்படி மனிதனும், பாலூட்டிகளும் ஒரு வகுப்பு . மீன், பறவை, பாம்பு ஆகிய முட்டையிடும் பிராணிகள் 2 -வது பிரிவு . 3 -வது பிரிவு தனி ரகம் என்று பிரித்தனர் .
செடிகளில் பூ உள்ளவை ஒரு பிரிவு . பூ இல்லாதவை ஒரு பிரிவு . காய்ந்தபின் வாடி அழிந்துபோகும் செடிகள் ஒரு வகை . படரும் தண்டுகளை உடையவை 4 -வது பிரிவு என்று பகுத்தனர் . புல், பூண்டு தாவரங்களை உற்றறியும் ஓரறிவு உயிரினங்களாகவும், சிப்பி, நத்தை போன்றவை இரண்டறிவு உள்ளவையாகவும், எறும்புகள், ஈசல் போன்றவை மூன்றறிவு உள்ளவை என்றும், தும்பி, வண்டு போன்றவை நான்கறிவுள்ளவை என்றும், பறவைகள், விலங்குகள் ஐந்தறிவு உள்ளவை என்றும், மனிதன் ஆறறிவு உள்ளவன் என்றும் தொல்காப்பியம் வகைப்படுத்துகிறது .
ஆனால் இந்த வகைப்படுத்துதலை விஞ்ஞானிகள் ஏற்கவில்லை . இவை செயர்கையானவை என்று கூறிவிட்டனர் . 1707 -ம் ஆண்டில் லின்னேயஸ் என்ற பிரெஞ்சு விஞ்ஞானி இயற்கையான வகைப்படுத்தும் திட்டத்தை வெளியிட்டார் . அவர் உயிகளின் உடலமைப்பு, தன்மை, இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தினார் . உயிரினங்கள் முதலில் தாவரங்கள், பிராணிகள் என்று இரு மாபெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுள்ளன .
இவை இரண்டிலும் பல உட்பிரிவுகள் உள்ளன . பிராணிகளில் முதுகெலும்பு உள்ளவை, முதுகெலும்பு இல்லாதவை என்று இரு உபபிரிவுகள் உள்ளன . முதல் பிரிவில் மீன், தவளை, ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என்று 5 பிரிவுகள் உள்ளன . அமீபா, கடற்பஞ்சி, பவளம், மண்புழு, பூச்சி, சிப்பி, நட்சத்திரமீன் ஆகியவை முதுகெலும்பு இல்லாத பிராணிகளின் பிரிவுகல் ஆகும் . இவற்றுக்குள் பல உப பிரிவுகள், குடும்பங்கள், உப குடும்பங்கள், வகுப்புகள், இனங்கள் அடங்கி உள்ளன . இவற்ரின் மிகச்சிறிய தொகுதியே இனமாகும் .
தாவரங்களில் இரு பெரும் பிரிவுகள் உண்டு . பூ உள்ளவை, பூ இல்லாதவை . பூவுள்ள தாவரங்களில் மூடிய விதையுள்ளவை, மூடாத விதை உள்ளவை என உப பிரிவு உண்டு . ஆல்கா, காளான், பாசி, பிரணி ஆகியவை பூவாத தாவர பிரிவுகள் ஆகும் .
பாலூட்டிகள் குட்டி போட்டு பால் தருபவை . ஊர்வனவற்றுள்ள பாலூட்டிகள் உஷ்ண ரத்தம் உடையவை . நுரையீரல்களால் சுவாசிப்பவை . பறவைகளும் நுரையீரலால் சுவாசிக்கின்றன . ஆனால் அவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை . ஒவ்வொரு பிரிவிலும் வெவ்வேறு லட்சணங்களும், பாகுபாடுகலும் உண்டு . ஆடும், மாடும் ஒரே குடும்பம் . பூனையும், புலியும் ஒரு குடும்பம் . கழுதையும், குதிரையும் ஒரே குடும்பம் . இவை பாலூட்டிகள் . இவற்றில் சைவம், அசைவம் உண்டு . என்வே நாய், பூனை, புலி இவை உறவுள்ள இனங்கள் . கழுதையும், குதிரையும் இவற்றின் தாயாதிகள் . ஆடும், மாடும் இவற்றின் உறவினர்களாகும் .
--- தினம் ஒரு தகவல் . தினத்தந்தி 30 12 . 2010 . இதழ் உதவி A சோமசுந்திரம் , ஸ்தபதியார் , திருநள்ளாறு .

மூளை வளர்கிறது !

திட்டமிடல், முடிவு எடுத்தல் என 40 வயது வரை மூளை வளர்கிறது .
மனித மூளையின் வளர்ச்சி குழந்தைப் பருவத்துடன் முடிவடைவதாக 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்பப்ப்ட்டது . ஆனால், அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் அந்த நம்பிக்கையில் உண்மையில்லை எனத் தெரிந்தது . மனித மூளையின் பல பகுதிகளில் மாறுதல்களும், வளர்ச்சியும் 30 முதல் 40 வயது வரை நீடிக்கிறது எனத் தெரிகிறது .
முடிவு எடுத்தல், திட்டமிடுதல், புரிந்து கொள்ளுதல், முறையற்ற சமூக நடத்தைக்கான எண்ணம் மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகியவற்றில் ஈடுபடும் மூளையின் முன்பகுதியில் வளர்ச்சி ஏற்படுகிறது . கருவில் இருக்கும்போதே வளரத் தொடங்கும் இந்தப் பகுதி, குழந்தைப் பருவத்திலும் வளர்கிறது . வாலிப வயதில் மறுசீரமைப்பு செய்து கொள்கிறது . பிறகு, மீண்டும் வளர்ச்சியை தொடரும் அது 40 வயது வரை கூட நீடிக்கும் என்றும், லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி பேராசிரியர் சாரா ஜெய்னே பிளக்மோர் தெரிவித்தார் .
--- தினகரன் , 20 டிசம்பர் 2010 .

Monday, October 3, 2011

கொலைகாரன் சவப்பெட்டி !

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியை கொலை செய்தவனின் சவப்பெட்டி ரூ . 39 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது .
லீ ஹார்வே ஆஸ்வல்டு என்பவனால் ஜான் எப். கென்னடி கடந்த 1963 ம் ஆண்டு, நவம்பர் 22 -ம் தேதி படுகொலை செய்யப்பட்டார் . பின்னர், போலீசாரால் கைது செய்யப்பட்ட லீ, 2 நாட்கள் கழித்து ஜாக் ரபி என்பவரால் கொலை செய்யப்பட்டான் . லீ இறந்த பின் அவனது உடல் டெக்சாஸ் நகரில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது .
இந்த நிலையில் லீ -ஐ அடக்கம் செய்ய பயன்படுத்திய மரத்திலான எளிய சவப்பெட்டி ஏலம் விடப்பட்டது . ஏலத்தின் போது 2 நபர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது . இறுதியில் அந்த சவப்பெட்டி ரூ. 39 லட்சத்துக்கு ஏலம் போனது .
--- தினகரன் , 20 டிசம்பர் 2010 .

Sunday, October 2, 2011

இதிஹாசம் !?

இதிஹாசம் என்றால் என்ன ?
இதிஹாசம் = இதி + ஹ + ஆஸம் .
' இதி ஆஸம் ' என்றால், ' இப்படி நடந்தது ' என்று அர்த்தம் .
' ஹா ' என்றால், ' ஸத்தியமாக ', ' நிச்சயமாக ', ' வாஸ்தவமாக ' என்று அர்த்தம் . எனவே, இதிஹாசம் என்றால் ' ஸத்தியமாக இப்படி நடந்தது ' என்று பொருள் . ராமாயணமும் மகாபரதமும் நமது இதிஹாசங்கள் .
ஸ்ரீராமர் இருந்தபோதே, ராமாயணத்தை வால்மீகி எழுதினார் . பாண்டவர்கள் இருந்தபோதே, மகாபாரதத்தை வியாசர் எழுதினார் .இந்த இரண்டிலும் உள்ள நிகழ்வுகள் நிஜம்தானா என்று சந்தேகப்படுவதற்கு இடமே இல்லை !
--- தினமலர் இணைப்பு . டிசம்பர் 16 . 2010 .