Tuesday, September 27, 2011

மொழி பெயர்க்கிறது கூகுள்

சென்ற வாரம் கூகுள் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது . ஆங்கிலம் தமிழ் மொழிக்களுக்கியையே மொழி பெயர்த்துத் தந்திருக்கும் வசதியே அது . http: // trans-late. google. com என்ற இணைய தளம் சென்றால் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திறகும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம் .
தளத்தைத் திறந்தவுடன் இடது பக்கம் இருக்கும் ஆப்ஷன் விண்டோவில் , ஆங்கிலத்தில் இருந்து தமிழ் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலம் என நம் விருப்ப மொழியினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும் . பின்னர் நாம் மொழி பெயர்த்திட விரும்பும் வாக்கியத்தினை அமைக்க வேண்டும் . .தமிழில் அமைப்பதாக இருந்தால், யூனிகோடு தமிழில் அமைக்க வேண்டும் . நாம் வாக்கியத்தை அமைக்கத் தொடங்கியவுடன், அதற்கான மொழிபெயர்ப்பு தரப்படுகிறது . தொடர்ந்து வாக்கியம் அமைக்கப்படுகையில், சேர்க்கப்படும் சொற்களுக்கேற்ப மொழி பெயர்ப்பு மாற்றப்பட்டு இறுதியான மொழி பெயர்ப்பு கிடைக்கிறது .
மொழி என்பது மனிதனின் எண்ணங்களின் வெளிப்பாடு . இதயத்துடிப்பின் இன்னொரு வடிவமே அவனது எண்ணங்கள் . என்வே, அவன் எண்ணங்களைத் தாங்கி வரும் சொற்களை இன்னொரு மொழியில் மொழி பெயர்த்துச் சொல்வது மனிதனால் மட்டுமே முடியும் . இயந்திரத்தால் முடியாது என்று ஆணித்தரமாக நம்பியவர்களை, ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் மொழி பெயர்த்துத் தந்து ஆச்சர்யத்தைத் தந்துள்ளது கூகுள். வியந்து பாராட்டப்பட வேண்டிய கூகுளின் முயற்சி இது .
--- தினமலர் . 27 . 9 . 2011 .

No comments: