Wednesday, September 28, 2011

இனி அம்மாக்கள் வேண்டாம் !

அப்பாக்கள் மட்டும் போதும் , இனி அம்மாக்கள் வேண்டாம் !
பொதுவாக, ஆணும் பெண்ணும் இணைந்தால்தான் பாலூட்டிகள் வகையில் இனப்பெருக்கம் நடைபெறுவது சாத்தியம் . இந்த இயற்கை விதிகளுக்கு மாறாக, ஸ்டெம்செல் பகுப்பாய்வு ஆராய்ச்சி மூலம், இரண்டு ஆண்களின் எக்ஸ் மற்றும், ஒய் குரோமசோம்களை பிரித்து புதிய கருவை உருவாக்கி உள்ளனர் . அதாவது, ஆண் எலி ஒன்றின் எக்ஸ் -- ஒய் குரோமோசோம்களை மரபணு மாற்றம் செய்து, அதில் இருந்து ஐ.பி.எஸ். என்ற ஒரு வகை செல்லை உருவாக்கியுள்ளனர் . இந்த செல் முதிர்ந்த செல் என்பதால், அதைக்கொண்டு கருவை உருவாக்க முடியும் . அதன்படி, ஐ.பி.எஸ். செல்லில் செய்யப்படும் மாற்றத்தினால், அதில் உள்ள ஒய் குரோமோசோம்களை அழித்துவிடுகிறார்கள் .
அதன்பிறகு கிடைக்கும் செல்லுக்கு எக்ஸ்.ஓ. செல் என்று பெயர் சூட்டிய விஞ்ஞானிகள், இந்த செல்லையும், மற்றொரு ஆண் எலியின் செல்லில் உள்ள எக்ஸ்.ஒய். குரோமோசோம்களையும் ஸ்டெம்செல் வாயிலாக பிரித்து இணைத்து கருவை உற்பத்தி செய்துள்ளனர் . இந்த கருவை, ஒரு பெண் எலியின் கருப்பையில் வளர வைத்து புதிய எலியை உருவாக்கி உள்ளனர் . இந்த எலி இரண்டு அப்பா எலிகளுக்கு பிறந்த எலி என்று விஞ்ஞானிகள் அடித்து கூறுகிறார்கள் .
இப்படி தலையை சுற்றி வாலைத் தொட்டாலும், கடைசியில் கரு வளர பெண் எலியின் கருப்பை தேவைப்படுவதால், இனி ஆண் எலிக்கும் கருப்பையை வைத்தால்தான், அது குட்டி போட முடியும் . என்வே இந்த கண்டுபிடிப்பு எலிக்கு சாத்தியம் . மற்ற உயிரினங்களுக்கு சாத்தியமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது .
--- தினமலர் ,12 . 12 . 2010 .

No comments: