Wednesday, September 14, 2011

விமான ' கறுப்பு பெட்டி '

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பகுதியைச் சேர்ந்த டேவிட் வாரன் என்பவர்தான் 1953 ல் கறுப்பு பெட்டியைக் கண்டுபிடித்தார் . 1960 முதல் ஆஸ்திரேலியாவிலும் பின்னர் படிப்படியாக மற்ற நாடுகளிலும் இந்தப் பெட்டியை விமானங்களில் பயன்படுத்த ஆரம்பித்தனர் .
இதன் பெயர் ' கறுப்பு ' பெட்டி என்று இருந்தாலும், இது ஆரஞ்சு நிறத்தில்தான் இருக்கும் . விபத்து பகுதியில் இதை விரைவாகக் கண்டுபிடிக்க வசதியாகத்தான் இதற்கு ஆரஞ்சு நிறம் பூசப்படுகிறது .
இந்தப் பெட்டியை விமானத்தின் வால் பகுதியில் பொருத்தியிருப்பார்கள் . விபத்து வேளையில் வால் பகுதி பாதிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால்தான் அங்கு பொருத்துகின்றனர் .
பல தகவல்களையும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்யும் சிறுசிறு கருவிகள் இந்தப் பெட்டியில் இருக்கும் . விமானம் எவ்வளவு உயரத்தில், எவ்வளவு வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்ற தகவல்; விமான இன்ஜின் இயக்கத்தின்போது வெளிப்படும் சத்தம்; விமானி அறையில் நடக்கும் உரையாடல்கள் போன்றவை கறுப்பு பெட்டியில் பதிவாகும் . இதனால், விபத்துக்குப் பின் கறுப்பு பெட்டியை மீட்டு அதில் பதிவாகியுள்ள தகவல்களை ஆய்வு செய்யும்போது, விபத்திற்கான காரணம் வெளிப்பட்டுவிடும் .
--- தினமலர் இணைப்பு . நவம்பர் 26 . 2010 .