Sunday, August 7, 2011

டிப்ஸ்...டிப்ஸ்...

* பால் பவுடரைக் கரைக்கும்போது, பெரும்பாலும் கட்டியாகி படுத்திவிடும் . பவுடருடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரையை கலந்து கொள்ளுங்கள் . பிறகு, வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு கரைத்தால்... கட்டி இல்லாமல் எளிதில் கரைந்துவிடும் . * சின்னக் குழந்தைகளுக்கு பார்டர் வைத்த ஜரிகை பாவாடைகள் தைக்கும்போது, புடவைக்கு வைப்பது போலவே, பாவாடை பார்டரிலும் ஃபால்ஸ் வைத்துத் தைத்து விடுங்கள் . இதனால், பார்டர் ஓரம் கிழியாமலும், ஜரிகை காலில் உராயாமலும், கொலுசு மாட்டி ஜரிகை இழுக்காமலும் இருக்கும் . * பண்டிகை நாட்களில் வீடுகளுக்கு முன்பாக மாவிலை கட்டுவோம் . அடுத்த நாளே காய்ந்து தொங்கி, பார்ப்பதற்கே ஒரு மாதிரியாக இருக்கும் . மாவிலையை முந்தைய நாளே தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள் . மறுநாள் தோரணமாகக் கட்டுங்கள் . இரண்டு மூன்று நாட்களானாலும, பச்சைப் பசேல் என்றிருக்கும் . * வாழைத்தண்டை நார் இல்லாமல் நறுக்கி, லேசாக எண்ணெயில் வதக்கி வைத்துக் கொள்ளுங்கள் . 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு பல் பூண்டு, நான்கு காய்ந்த மிளகாயை எண்ணெயில் வருத்து.... உப்பு, வாழைத்தண்டு சேர்த்து அரைத்தால் வாழைத்தண்டு சட்னி ரெடி ! சாதத்துடன் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும் . * பாயசம் மீந்து விட்டால்... ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள் . பிறகு, ஒரு கண்ணாடி பவுலில் பாயசத்தைவிட்டு... வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, கொய்யா, திராட்சை போன்ற பழத்துண்டுகளைப் போட்டு, ஐஸ்கிரீம் விட்டு, பரிமாறினால்... அசத்தலான ஃபுரூட் சால்ட் ரெடி ! ---அவள் விகடன் . 13 -ம் ஆண்டு மெகா சிறப்பிதழ் , 22 . 10. 10 . இதழ் உதவி : N கிரி , ( நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி

No comments: