Friday, June 17, 2011

ஜெமினி இரட்டையர் !

நீங்கள் அந்தக் காலத்து ஆளாக இருந்தாலும் சரி, இந்தக் காலத்து ஆளாக இருந்தாலும் சரி, ஜெமினி இரட்டையரை நிச்சயம் அறிந்திருப்பீர்கள் . பழைய கருப்பு, வெள்ளைப் படங்களை டி. வி. யில் பார்க்கும்போது ஜெமினி ஸ்டுடியோவின் பீப்பி ஊதும், ஜட்டி மட்டுமே அணிந்த இரட்டையர் சின்னத்தைப் பார்க்காமல் இருந்திருக்க வாய்ப்பேயில்லை .
அந்தச் சின்னத்துக்கான ஐடியா, ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ். எஸ். வாசனுக்கு எங்கிருந்து வந்தது ?
ஜெமினி என்பது நட்சத்திரம் . ஜெமினி என்ற சொல் லத்தீன் மொழியைச் சார்ந்தது . அச்சொல்லுக்கே இரட்டையர் என்பதுதான் பொருள் . கேஸ்டர் மற்றும் போலகஸ் என்ற இரட்டை
நட்சத்திரங்கள் இணைந்ததுதான் ஜெமினி . கேஸ்டரும், போலக்ஸும் இரட்டையர். கிரேக்கப் புராணத்து கதை மாந்தர்கள் . ஒரே தாய் . ஆனால், வேறு வேறு தந்தை என்பதாக வித்தியாசமான கதை உண்டு . அக்காலத்தில் மாலுமிகளுக்கு இரவில் திசை காட்டும் நட்சத்திரமாக ஜெமினிதான் இருக்குமாம் .
--- புதிய தலைமுறை . 30 செப்டம்பர் 2010 . இதழ் உதவி : N.கிரி , ( News Agent - Thirunallar ) கொல்லுமாங்குடி .

3 comments:

சிநேகிதன் அக்பர் said...

இதுவரை அறிந்திராத தகவல்

சிநேகிதன் அக்பர் said...

Word Verification ஐ எடுத்துவிட்டால் பின்னூடமிட எளிதாக இருக்கும்.

க. சந்தானம் said...

சிநேகிதன் அக்பர் , அவர்களுக்கு ! நன்றி . Word Verification ஐ எடுத்துவிட்டால் பின்னூட்டமிட எளிதாக இருக்கும் . என்று சொல்லியுள்ளீர்கள் . எனக்கு ஏதும் புரியவில்லை. Word Verification என்றால் என்ன ? என்று தயவுகூர்ந்து தெரிவிக்கவும் .