Friday, June 10, 2011

காதல் போதை !

காதல் போதை ஐந்து வகை ! நீங்கள் அதில் எந்த வகை ?
வழிந்தொழுகும் ரத்தத்துடன் ஆஸ்பத்திரிக்குப் போனாள் அந்தப் பெண் . அவளை அடித்து நொறுக்கியது அவளது கணவன் . ஆனாலும் அவள் ' அவர் கூடத்தான் சேர்ந்து வாழ்வேன் ' என்றாள் . அன்பு இல்லாத அடிதடி புருஷனைக்கூட விட்டுக் கொடுக்காமல் பேசுகிற பெண்களுக்கு ' அப்செஸ்டு லவ் அடிக்டஸ் ' என்று பெயர் . இவர்களுக்குப் புருஷனோ, காதலனோ அயோக்கியனாக இருந்தாலும் பதிலுக்கு அன்பையே பரிசளிப்பார்கள் .
இன்னொரு வகை ' கோ- டிபன்டெண்ட் லவ் அடிக்ட்ஸ் '. இவர்களுக்குச் சுத்தமாக சுயமரியாதை கிடையாது . காதலன் அல்லது புருஷனுக்காக மண்சோறு சாப்பிடுவது, அங்கப்பிரதட்சணம் செய்வது என்று தன்னை வருத்திக்கொள்வார்கள் .காதலன் சந்தோஷத்துக்காகக் கிடைத்த இடத்தில் எல்லாம் கடன் வாங்கிக் கொடுப்பார்கள் . ' என்றைக்காவது தன் துணை மனம் மாறும் ' என்ற நம்பிக்கையுட்னேயே வாழ்ந்து - செத்துப் போவார்கள் . இந்த இரண்டு வகையில் பெரும்பாலும் பெண்களே உண்டு .
காதலியையோ, மனைவியையோ சுத்தமாகப் பிடிக்காது . 100 சதவிகிதம் மனதளவில் வெறுத்தாலும், பிரிந்து செல்ல மாட்டார்கள் . 'ஐ ஹேட் யூ ... என்னை விட்டுப் போயிடாதே ! ' என்று மன்றாடுவார்கள் . இவர்கள் ' ரிலேஷன்ஷிப் அடிக்ட்ஸ் '. இந்த வகையில் ஆண்கள் நிறையவே உண்டு .
வீட்டில் அமளிதுமளி அராஜகம் செய்வார்கள் . தான் என்ன அழிச்சாட்டியம் செய்தாலும் துணை தன்னை மட்டுமே நம்பி இருக்கவேண்டும் என நினைப்பார்கள் . இந்த ரகத்தினர் ' நார்சிஸ்டிக் லவ் அடிக்ட்ஸ் '. இது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது . இவர்களின் பிரச்னையே அநியாயத்துக்கும் இவர்களுக்கு லவ் தேவைப்படும் . காதலுக்காக நாயாய் பேயாய்த் திரிவார்கள் . ஆனால், தான் காதலிக்கிற ஆள் தன்னுடன் நெருக்கமானால் அலறியடித்து ஓடுவார்கள் . இருப்பது போக இன்னொரு காதலுக்கும் ஏங்கித் தவிப்பார்கள் . இதுவும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது !
--- ஷண்மதி . போதை விகடன் . 16 / 12 / 2009.

No comments: