Friday, June 3, 2011

வாட்டர் பியூரிபயர்கள் ' வேஸ்ட் '

வாட்டர் பியூரிபயர்கள் ' வேஸ்ட் ' : ஆய்வில் அம்பலம் .
சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான வாட்டர் பியூரிபயர்கள் கிருமிகளை அழிப்பதில்லை என்று ஆய்வில் அம்பலமாகியுள்ளது . பெரும்பாலான நோய்களுக்கு அசுத்தமான தண்ணீர்தான் காரணம் என்று கூறப்படுகிறது . சுத்தமான தண்ணீர் கிடைப்பது நகர்புறங்களில் அரிதாகி வருவதால் மக்கள் வாட்டர் பியூரிபயர் எனப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர் .சந்தையில் இந்த சாதனங்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் வாட்டர் பியூரிபயர்கள் பிராண்டுகள் புற்றீசலாய் கிளம்பியுள்ளன . தண்ணீரில் உள்ள அனைத்துவிதமான கிருமிகளையும் அழிக்கும் என்று இவை தங்களை விளம்பரப்படுத்திக்கொள்கின்றன .
இந்நிலையில் , சந்தையில் கிடைக்கும் வாட்டர் பியூரிபயர்கள் உண்மையிலேயே எல்லா கிருமிகளையும் அழிக்கிறதா என்று புனேவை சேர்ந்த தேசிய வைராலஜி மையம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது . பிரபல மருத்துவ விஞ்ஞானிகள் அடங்கிய குழு இதற்காக அமைக்கப்பட்டது . அரசு உதவி பெற்று இயங்கும் இந்த அமைப்பு நியமித்த குழுவின் ஆய்வு முடிவுகள் அதிரவைப்பதாக உள்ளது . ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 8 வாட்டர் பியூரிபயர்களில் இரண்டு மட்டுமே அனைத்து வைரஸ்களையும் அழித்திருந்தது . மற்ற ஆறிலும் பகுதியளவே கிருமிகள் அழிந்திருந்தன . ஒவ்வொரு பிரபல பிராண்டில் இருந்தும் ஒரு தயாரிப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது . கார்பன் பில்டர் , செராமிக் கேண்டில் பில்டர் உள்லிட்ட முக்கிய பாகங்களின் செயல்பாடுகள் நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டன .
--- - தினமலர் .18 / 9 /10 .

No comments: