Wednesday, May 25, 2011

விண்வெளி பேனா !

விண்வெளியில் பயன்படுத்துவதற்கு , ஒரு விசேஷ பேனா உள்ளது . இதை ' ஜீரோ கிராவிட்டி பென் ' என்பார்கள் . புவிஈர்ப்பு விசை இல்லாத அல்லது குறைந்த இடங்கள் , இயல்புமீறிய அழுத்தம் மற்றும் வெப்பப் பகுதிகள் , தண்ணீருக்குள் உள்ள பகுதிகள் என எல்லா இடங்களிலும் இந்த விசேஷ பேனாவைப் பயன்படுத்தி எழுதலாம் . இந்த சிறப்பு எப்படி வருகிறது ?
இந்தப் பேனாவில் , அதிக அழுத்தம் கொண்ட கார்ட்ரிட்ஜ் ஒன்று இருக்கும் . அதில் தண்ணீரில் கரையாத விசேஷ தன்மைகொண்ட மை நிரப்பப்பட்டிருக்கும் . கார்ட்ரிட்ஜின் அதிக அழுத்தம் காரணமாக , இந்தப் பேனாவில் உள்ள மையின் ஓட்டத்திற்கு புவிஈர்ப்பு விசை தேவைப்படாது !
--- தினமலர் , ஆகஸ்ட் 27 , 2010 .

No comments: