Wednesday, May 18, 2011

ஸ்ரீராமானுஜர் .

நிஜமா ? சிலையா ?
ஸ்ரீராமானுஜர் அத்திபூத்தாற்போல் அவதரித்த ஞானிகளில் ஒருவர் . 11 ம் நூற்றாண்டில் பிறந்து - 120 ஆண்டுகள் வாழ்ந்து - 12 -ம் நூற்றாண்டில் மறைந்தவர் . விசிஷ்டாத்வைதம் எனும் தத்துவத்தை அளித்தவர் . இறைவனுக்குத் தொண்டு செய்வதில் , ஜாதி, மத பேதங்கள் இல்லையென அந்த நாட்களிலேயே கூறியவர் . இறைவன் செல்லப்பிள்ளையைத் தொடர்ந்து ஓடிவந்த முஸ்லீம் பெண்ணைப் பெருமாளுக்கே திருமணம் செய்து வைத்தவர் . ஆதிதிராவிடர்களைத் திருக்குலத்தவர் என்று அழைத்தவர் .
இத்தனை சிறப்புகள் கொண்ட ஸ்ரீராமானுஜருக்கு , ஸ்ரீரங்கத்தில் உள்ள அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோயிலில் , தனிக் கோயில்போல பெரிய சன்னதி ஒன்று இருக்கிறது . அந்த சன்னதியில் திரிதண்டத்துடன் அமர்ந்த நிலையில் இருக்கும் மூலவரைப் பார்த்தால் சிலையென்று நம்புவது கடினம் .
அந்த மூலஸ்தானத்தில் இருப்பது , 865 ஆண்டுகளுக்கு முன்பு ( ஜனனம் 1017 ; சமாதி 1137 ) மறைந்த ராமானுஜரின் திருவுருவம்தான் என்று ஒரு சாராரும் , இல்லை , சுதையால் ஆன சிலைதான் என்று மறு சாராரும் கூறுகிறார்கள் .
--- கோலாகல ஸ்ரீ நிவாஸ் , எம். பாண்டியராஜன் . தினமணிகதிர் , மார்ச் 5 , 1995 .

No comments: