Monday, May 9, 2011

வீட்டுக் குறிப்பு...

வெண்ணெய் வெட்டும் கத்தி !
* வெண்ணெயைக் கத்தியால் வெட்டுவது கொஞ்சம் இம்சையான சமாசாரம் . கத்தியில் வெண்ணெயை ஈஷிக் கொள்ளும் . இந்த உறவைப் பிரிப்பது எப்படி ? கத்தியைத் தண்ணீரில் முக்கிவிட்டு பிறகு வெண்ணெயை வெட்டிப் பாருங்கள் . கத்தி சுத்தமாக வெளியே வந்துவிடும் .
தயிர் வந்தது ; கறைபோச்சு !
* வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உள்ளவரா நீங்கள் ? உங்கள் சட்டை மீதே நீங்கள் துப்பிக் கொள்ளும் அபாயம் இருக்கிறதே ! இப்போது புளித்த தயிர் உங்களுக்குக் கை கொடுக்கும் . ஒரு துணியைத் தயிருடன் நட்பாக்கி கறைமீது தடவுங்கள் . கறை பளிச் .
மிக்ஸி சொன்னபடி கேட்க...
* மாதத்திற்கு ஒருமுறை....கொஞ்சம் கல்லு உப்பை எடுத்து மிக்ஸியில் போட்டு அரையுங்கள் .எதையும் அரைக்க மாட்டேன் என்று சத்தியாகிரகம் செய்த பிளேடுகள் பளபளப்பான கூர்னையோடு தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றத் தயாராகிவிடும் . தூள் உப்பு கிடைப்பது போனஸ் !
ஒரு தேனான தகவல் ...
* அடுப்படியில் வேகும் அம்மையரா நீங்கள் ? அடுப்பின் நேரடிச் சூடு உங்கள் கைகளை , மென்மையாக உள்ள புறங்கைகளை ஆவலுடன் தீண்டியிஉக்குமே ! கொஞ்சம் அலமாரியைத் திரும்பிப் பாருங்கள் . அங்கே தேன் பாட்டில் , ' மே ஐ ஹெல்ப் யூ ? ' என்று கேட்கும் . அதன் உதவியை நாடுங்கள் . பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுங்கள் . அன்றைக்கு மட்டுமல்ல ;மறுநாளும் ஜோராக சமையல் செய்யலாம் .
--- ராமுசாமி ,தினமணி கதிர் 20 / 5 / 1990.

No comments: