Friday, May 6, 2011

எத்தனை புத்தகம் ?

நண்பரிடம் இப்படி சொல்லுங்கள் :
1 . உன் பையில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை 3 -ஆல் பெருக்கு .
2 . வரும் விடையுடன் 1 -ஐ கூட்டு .
3 . வரும் விடையை 3 -ஆல் பெருக்கு .
4 . வரும் விடையுடன் உன் பையில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையைக் கூட்டு .
இப்படி சொல்லிவிட்டு, " என் மேஜிக்கைப் பார் இப்போது ! " என்று ' பில்டெப் ' கொடுத்துவிட்டு, " விடையில் முதல் இரு இலக்கங்கள்தான் உன் புத்தகங்களின் எண்ணிக்கை ! விடையின் கடைசி இலக்கம் 3 ! " என்று அசத்துங்கள் . அது நூறு சதவீதம் சரியாக இருக்கும் !
ஒரு உதாரணம் : நண்பரின் பையில் 12 புத்தகங்கள் என்று வைத்துக்கொள்வோம் . அவருக்கு கடைசி விடையாக 123 வரும் . ( 12 பெருக்கல் 3 = 36 , கூட்டல் 1 = 37, பெருக்கல் 3 = 111 ; 111 கூட்டல் 12 = 123 ). இதன் முதல் இரு இலக்கங்கள் புத்தகங்களின் எண்ணிக்கையான 12 ; கடைசி இலக்கம் 3 ! .
--- தினமலர் . செப்டம்பர் 3 , 2010 ..

No comments: