Sunday, May 1, 2011

கணக்கு மேஜிக் !

உங்கள் நண்பர், ஒரு மிகப் பெரிய எண்ணை சொல்லி அது 4-ஆல் மீதியின்றி வகுபடுமா என்று சட்டெனக் கண்டுபிடிக்க சவால் விடுக்கிறார்...
அது ஒற்றை எண்ணாக இருந்தால், வகுபடாது என்று சட்டென சொல்லிவிடலாம். இரட்டை எண்ணாக இருந்தால் கஷ்டம் ? ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் பதில் சொல்லமுடிந்தால் எப்படியிருக்கும்? சந்தோஷம் பொங்குமே ! அப்படி சந்தோஷப்பட இதோ ஒரு ஈஸி டெக்னிக்...
ஒரு எண் : 1234567890. இதன் கடைசி இலக்கத்தின் முந்தைய இலக்கம் 9 . இதை 2ஆல் பெருக்கினால் 18. இதோடு கடைசி இலக்கமான 0-ஐ கூட்டினால் 18. இது , 4ஆல் வகுபடாது . ஆகவே, இந்த எண்ணும் 4-ஆல் வகுபடாது .
இன்னொருஎண் : 12345678930156 . இதன் கடைசி இலக்கத்தின் முந்தைய இலக்கம் 5. இதை 2ஆல் பெருக்கினால் 10 . இதோடு கடைசி இலக்கமான 6-ஐ கூட்டினால் 16. இது நான்கால் வகுபடும் என்பதால் இந்த எண்ணும் 4-ஆல் மீதியின்றி வகுபடும் .
ஈஸி டெக்னிக் : ஒரு எண்ணின் கடைசி இலக்கத்தின் முந்தைய எண்ணை இரண்டால் பெருக்கிவரும் விடையையும் கடைசி இலக்கத்தையும் கூட்டி அந்த கூட்டல் தொகை நான்கால் வகுபடுமா என்று பார்த்தால் போதும் !
--- தினமலர் , மே 21 , 2010 .

No comments: