Tuesday, May 24, 2011

மேஜிக் 7

உங்கள் நண்பரிடம் நீங்கள் சொல்லவேண்டியவை :
1 . ஏதாவது 3 இலக்க எண்ணை கால்குலேட்டரில் பதிவுசெய் .
2 . அதன் அருகில் அதே 3 இலக்க எண்ணை மீண்டும் ஒரு முறை பதிவு செய் .
3 . இந்த 6 இலக்க எண், 11ஆல் மீதமின்றி வகுபடும் பார் ! (' ஆமாம் ' என்பார் நண்பர் .).
4 . வரும் விடை, 13 ஆல் மீதமின்றி வகுபடும் பார் ! ( ' ஆமாம் ' என்று நண்பர் மீண்டும் வியப்படைவார் ! )
5 . வரும் விடையை, நீ முதலில் நினைத்து, பதிவு செய்த எண்ணால் வகுக்க வேண்டும் . அதன் விடையை நீ கண்டுபிடிக்கும் முன்பே நானே சொல்கிறேன் ... விடை ' 7 ' !
( நண்பர் வகுத்தபின், '' கரெக்ட் ' என்று அசந்துபோவார் ! )
ஒரு உதாரணம் : உங்கள் நண்பர் நினைத்து, பதிவு செய்த எண் 123 என்று வைத்துக் கொள்வோம் . அதே எண்ணை அருகில் எழுதினால் 123123 . இதை 11 ஆல் வகுத்தால் 11193 . இதை 13 ஆல் வகுத்தால் 861 . இதை 123 ஆல் வகுத்தால் விடை 7 !
டெக்னிக் இதுதான் : எந்த ஒரு 3 இலக்க எண்ணையும் 1001 ஆல் பெருக்கினால் அதே எண் அதன் அருகில் இருக்கும் வகையிலான 6 இலக்க எண் வரும் . 11, 13, 7 ஆகிய மூன்று எண்களைப் பெருக்கினால் 1001 ; எனவே அந்த 6 இலக்க எண்ணை 11 மற்றும் 13 ஆல் வகுத்துவிட்டு பிறகு ஒரிஜினல் 3 இலக்க எண்ணால் வகுத்தால், விடை எப்போதுமே ' 7 ' தான் !
--- தினமலர் , ஆகஸ்ட் 27 , 2010 .

No comments: