Thursday, April 28, 2011

மனிதனின் இயலாமை !

ஆங்கிலக் கவிதை ஒன்று . யார் எழுதியது என்று தெரியவில்லை .
' நான் சிறுவனாக இருந்தபோது
இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன்
நடக்கவில்லை .
இளைஞன் ஆனபோது ஊரைத்
திருத்த முனைந்தேன்
முடியவில்லை
குடும்பத் தலைவன் ஆனபோது
குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன்
இயலவில்லை .
தந்தை ஆனபோது
பிள்ளைகளை மாற்றிவிட வேண்டும்
என்று துடித்தேன்
அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை .
மரணப்படுக்கையில்தான்
எனக்குப் புரிந்தது
இவ்வளவு முயற்சிகள் செய்ததற்குப் பதிலாக
நான் கொஞ்சம் மாறியிருக்கலாம் என்று
ஆனால் நேரம் கடந்துவிட்டது ! '
இந்தக் கவிதை ஒரு மனிதனின் இயலாமையைச் சொல்வதுபோல் இருந்தாலும் , இந்த உலகில் சில விஷயங்களை மாற்றி அமைப்பது நம் சக்திக்கு உட்பட்டதாக இல்லை என்ற உண்மையை உணர்த்துகிறது .
சமூக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கறையில் நாம் எடுக்கிற பல்வேறு முயற்சிகளும் பாராட்டுக்கு உரியது . ஆனால் , நானும் எனது நிலைப்பாடுகளும்தான் சரி . அதற்கேற்ப இந்த உலகம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற மனோபாவம்தான் பிரச்னை .
---. நீயும் நானும் ! தொடரில் . கோபிநாத் . ஆனந்தவிகடன் 8 / 9 / 2010 .

No comments: