Friday, April 22, 2011

தெரியுமா ? தெரியுமே !

* பாண்டிச்சேரியிலிருந்து 13 கி. மீ. தொலைவில் இருக்கும் புனித நகரம் ' ஆரோவில் '.( Auroville ) . ஆரோ என்பது அரவிந்தரின் ( Aurobindo ) பெயரைக் குறிக்கும் . வில்லா என்றால் ஃபிரெஞ்ச் மொழியில் வீடு என்று அர்த்தம் . அதிலிருந்து வில் என்ற எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஆரோவில் என்று பெயராயிற்று
--- குமுதம் , 8 / 9 / 2010.
* அமெரிக்க அதிபராக இருந்த ஆப்ரஹாம் லிங்கனும் , அவரது காதலி ஆன் ரட்லெட்ஜும் சேர்ந்து படித்த ஆங்கில இலக்கண நூல் ஒன்று , அட்டையில் ஆனின் கையெழுத்துடன் ,அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் இன்றைக்கும் காட்சிக்கு வைக்கப்படுள்ளது .
* " என் காதல் ஆபிரகாம் லிங்கனுடன் இணைந்த துணைவியான நான் -- ஆன் ரட்லெட்ஜ் , மரணம் தந்த பிரிவால் இந்தக் கல்லறையில் உறங்குகிறேன் ' என்று எனது கல்லறையில் பொறித்து வைப்பீர்களா ? " என்று வேதனை முட்களுடன் காத்லி ஆன் ரட்லெட்ஜ் கேட்டாள் .'
-- அவள் விகடன் , பிப்ரவரி 29 . 2008 .
.* " If an individual wins a company does not win . But if a team wins a company also win ". -- இதுதான் டீம் ஸ்பிரிட்டின் மகத்துவம்
* ஒரு ஒளி ஆண்டு என்பது , ஒளி ஓராண்டில் எவ்வளவு தூரம் பயணம் செய்யுமோ அந்த அளவிவிலான தூரம் . ஒளி , ஒரு நொடிக்கு 3 லட்சம் கி. மீ., பயணிக்கும் ; ஓராண்டில் 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கி. மீ., பயணிக்கும் . இந்த தூரம்தான் ஒரு ஒளி ஆண்டு . இதைவிட அதிகமான தூரத்தை அளக்க ' பார்செக் ' என்ற அலகு உள்ளது ஒரு பார்செக் என்பது 3. 26 ஒளியாண்டுகள் ! .
* ஒரு விஷயம் குறித்து வெவ்வேறு விதமான கருத்து கொண்டும் , வெவ்வேறான முடிவும் எடுத்து தடுமாறிக் கொண்டிருப்பவர்களை ஆங்கிலத்தில் ' ப்ளோயிங் ஹாட் அண்டு கோல்டு ' ( Blowimg Hot and Cold ) ( வெப்பத்திற்கும் , குளிர்ச்சிக்கும் இடையே தாவிக் கொண்டு இருப்பவர்கள் ) என்பார்கள்
* அதிபர் தினம் தெரியுமா ? அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவின் பெயரால் ' அதிபர் தினம் ' கொண்டாடப்படுகிறது . அந்த நாடு கென்யா . முதன் முதலாக கறுப்பரான ஒபாமா, அதிபராக வெற்றி பெற்ற நாள் 2008 , நவம்பர் 6 . இப்போது நவம்பர் 6 , கென்யாவில் ஒபாமா தினம் . இது தேசிய விடுமுறை நாள் . உயிருடன் இருக்கும் ஒருவருக்கு அவரின் வாழ்நாளிலேயே அவர் பெயரால் விடுமுறை அளிக்கப்படுவது உலகத்தில் இதுவே முதல் முறையாம் . கறுப்புக்குக் கிடைத்த சிறப்பு !.
* நிலநடுக்கம், வெள்ளம், புயல் என்று அதிகம் இயற்கை பேரழிவுக்கு உள்ளாகும் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாக்களின் பெயர் ' அழிவுச் சுற்றுலா '

No comments: