Wednesday, April 20, 2011

டிப்ஸ்...டிப்ஸ் !

* பிடி சாதத்தை எடுத்து நன்கு மசித்து மாவில் கலந்து வடை சுட்டால் மிருதுவாகவும், அதேசமயம் எண்ணெய் குடிக்காமலும் இருக்கும் .
* ரசத்துக்கு நெய்யில் தாளிதம் செய்வதற்கு பதில் , சிறிது சமையல் எண்ணெயில் தாளித்துவிட்டு , பிறகு , சூடான ரசத்தில் நெய்யை ஊற்றினால் மணம் தூக்கலாக இருக்கும் .ஏற்கனவே உருக்கிய நெய்யை , மீண்டும் காயவைப்பதைவிட ... இப்படிச் செய்வதால் நெய் தீய்ந்து விடாமல் , ஒரிஜினல் வாசனையுடன் கமகமக்கும் .
* கட்டிப் பெருங்காயத்தை சிறு துண்டுகளாக உடைத்து , கோதுமை மாவில் புரட்டி ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள் . ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாமல் , தினமும் எடுத்துப் பயன்படுத்த எளிதாக இருக்கும் .
* கட்லெட் செய்வதற்காக தயாரித்து வைத்திருந்த காய்கறிக் கலவை ஒன்றாகச் சேராமல் தளர்வாக இருக்கிறதா ? இரண்டு பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்து , காய்கறிக் கலவையுடன் சேர்த்துப் பிசைந்து விடுங்கள் . கட்லெட்டை அழகான வடிவத்தில் தாயாரித்து விடலாம் .
--- அவள் விகடன் . 10 / 9 / 10. இதழ் உதவி : N. கிரி , ( News Agent Thirunallar ) கொல்லுமங்குடி .

No comments: