Thursday, April 28, 2011

மனிதனின் இயலாமை !

ஆங்கிலக் கவிதை ஒன்று . யார் எழுதியது என்று தெரியவில்லை .
' நான் சிறுவனாக இருந்தபோது
இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன்
நடக்கவில்லை .
இளைஞன் ஆனபோது ஊரைத்
திருத்த முனைந்தேன்
முடியவில்லை
குடும்பத் தலைவன் ஆனபோது
குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன்
இயலவில்லை .
தந்தை ஆனபோது
பிள்ளைகளை மாற்றிவிட வேண்டும்
என்று துடித்தேன்
அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை .
மரணப்படுக்கையில்தான்
எனக்குப் புரிந்தது
இவ்வளவு முயற்சிகள் செய்ததற்குப் பதிலாக
நான் கொஞ்சம் மாறியிருக்கலாம் என்று
ஆனால் நேரம் கடந்துவிட்டது ! '
இந்தக் கவிதை ஒரு மனிதனின் இயலாமையைச் சொல்வதுபோல் இருந்தாலும் , இந்த உலகில் சில விஷயங்களை மாற்றி அமைப்பது நம் சக்திக்கு உட்பட்டதாக இல்லை என்ற உண்மையை உணர்த்துகிறது .
சமூக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கறையில் நாம் எடுக்கிற பல்வேறு முயற்சிகளும் பாராட்டுக்கு உரியது . ஆனால் , நானும் எனது நிலைப்பாடுகளும்தான் சரி . அதற்கேற்ப இந்த உலகம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற மனோபாவம்தான் பிரச்னை .
---. நீயும் நானும் ! தொடரில் . கோபிநாத் . ஆனந்தவிகடன் 8 / 9 / 2010 .

Wednesday, April 27, 2011

ஐக்யூ கார்னர் .

கோபம், அபாயம் ! இதை ஆங்கிலத்தில் ஒரே வார்த்தையில் அடக்கமுடியுமா ? -- விடை : முடியுமே . டேஞ்சர் ! டேஞ்சர் என்றால் அபாயம் ; இதில் டி என்ற எழுத்தை நீக்கிவிட்டால் ஆங்கர் ... கோபம் என்று அர்த்தம் !
பூஜ்யம் முதல் 9 வரையிலான பத்து தசம எண்களும் இருக்கும் மிகச்சிறிய எண்ணில் எத்தனை இலக்கங்கள் இருக்கும் ? -- விடை : பலரும் அவசரத்தில் பத்து என்பார்கள் . அது தவறான விடை.! 9 என்பதுதான் சரியான பதில் ! 0 முதல் 9 வரையிலான பத்து தசம எண்களும் இருக்கும் மிகச்சிறிய எண் : 0123456789 . எண்முறைப்படி, முழு எண்களின் முன்பு பூஜ்யத்தைஎழுதி அதை ஒரு இலக்கமாகக் கணக்கு வைக்கத் தேவையில்லையே !
--- தினமலர் , மே 21 , 2010.

Tuesday, April 26, 2011

கிச்சு...கிச்சு...கிச்சு...

* வடிவேலு ( சர்வர் ) : " பொங்கலுக்கு சாம்பார் ஊத்தவா ? "
பார்த்திபன் : " அதுவரைக்கும் எனக்குப் பொறுமையில்லை... இப்பவே ஊத்து ! "
* உலகின் அன்பு வாக்கியம்...
" ஆனாலும் , நான் உன்னை நேசிக்கிறேன் ! "'
உலகின் சுயநல வாக்கியம் ...
" நான் உன்னை நேசிக்கிறேன்...ஆனால்...! "

Monday, April 25, 2011

டிப்ஸ் ...டிப்ஸ் ...

* சுவாமிப் படங்களை சாதாரண நீர் கொண்டு துடைக்காமல், பன்னீர் கலந்த நீரினாலோ அல்லது கற்பூரம் கரைத்த நீரினாலோ துடைத்தால் பூச்சி அரித்து வீணாகாமல் நீண்டநாள் பாதுகாக்கலாம் .
* பாத்ரூம் டைல்ஸ்களில், பாத்திரம் துலக்கும் பவுடருடன், கோலமாவைக் கலந்துத் தூவி ஊற வைத்துக் கழுவவும் . பளபளப்பு கூடுவதோடு வழுக்கவும் வழுக்காது .
* சேப்பங்கிழங்கை எப்படிச் சமைத்தாலும் வழுவழுப்பு போகாது . கிழங்கை வேக வைத்துத் தோல் உரித்து, ஃபிரிஜ்ஜில் 2 மணி நேரம் வைத்து, பொரித்தால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் மொறு மொறுப்பாக இருக்கும் .
* ஃபெவிகால் ஒட்டுவதற்கு எடுத்து, மூடி வைப்போம் . அடுத்தமுறை உபயோகிக்கும்போது மேல் பக்கம் ஆடை போல் கெட்டியாகியிருக்கும் . நீண்ட நாட்களுக்குப் பின் திறந்து பார்த்தால் முழுவதுமே கெட்டியாகி வீணாகிவிடும் . இதைத் தடுக்க, ஃபெவிகாலை ஒருமுறை உபயொகித்தவுடன் அது மூழ்கும்படி மேலே சிறிது தண்ணீர் ஊற்றி வைக்கவும் அப்போது கெட்டியாகாமல் இருக்கும் .
* வறுத்த தேங்காய்த் துருவல், ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் தூளாக்கி, அத்துடன் நன்கு வறுத்த சேமியாவைப் பொடியாக நொறுக்கிப் போட்டு, வறுத்த முந்த்ரியையும் ஒடித்துப் போட்டுக் கலந்து வைத்துக் கொண்டால், விருந்தினர் வந்ததும் கொதி நீரில் ஒரு கரண்டி எடுத்துப் போட்டுக் கிளறி, சூடான பாலும் ஒரு ஸ்பூன் நெய்யும் விட்டுக் கலந்து சட்டென்று நிமிடத்தில் பாயசம் செய்து விடலாம் .
* போளி தட்டும்போது வாழையிலையின் பின்பக்கமாகத் தட்டினால் மெல்லியதாக வரும் .
* ஊறுகாய் கிண்ணத்தில் ஸ்பூனுக்குப் பதிலாக சிறிய ஃபோர்க்குகளை உபயோகிக்கலாம் . இதனால் ஊறுகாயுடன் என்ண்ணெயும் சேர்ந்து வாராமல் ஊறுகாயிலேயே தங்கிவிடும் .
* நாம் தினசரி உபயோகிக்கும் சர்க்கரை பாட்டிலில் எறும்பு வந்துவிட்டால், வெங்காயம், உருளைக்கிழங்கு வைத்திருக்கும் தட்டில் பாட்டிலைத் திறந்து வைத்துவிடுங்கள் . சில மணி நேரங்களில் எறும்பெல்லாம் மாயமாய் மறைந்து போயிருக்கும் .
* தரையில் எலுமிச்சைச் சாறு பட்டு தரை வெள்ளையாக மாறியிருந்தால், அதன் மீது பூசணிக்காயை நறுக்கி தேய்க்கவும் . கறை உடனடியாக நீங்கிவிடும் .
* தோசைக்கு மிளகாய்ப் பொடி அரைக்கும்போது ஒரு டீஸ்பூன் சீரகத்தை வறுத்து, சேர்த்து அரைக்கவும் . வாசனையாக இருப்பதோடு, எளிதில் செரிமானம் ஆகும் .
* சுவாமி படங்களைக் கண்ணாடி ஃப்ரேம் போடாமல், லேமினேஷன் செய்வதுதான் நல்லது . பூச்சி அரிக்காது . துடைப்பதும் சுலபம் . வெளியூர் மாற்றலாகிப் போகும்போது உடையாமலும் இருக்கும் . அதிக எடையும் இருக்காது .
* கடையில் வாங்கும் சுண்டைக்காய் வற்றலை, தண்ணீரில் போட்டு அலசவும் . பிறகு, புளித்த மோரில் ஊற வைத்துக் காய வைத்து வறுத்தால், அபார ருசி கிடைக்கும் . அதிகப் படியான உப்பும் தண்ணீரில் போய்விடும் .
* பாகற்காயை நறுக்கி, அரிசி களந்த நீரில் ஊற வைத்து, பிறகு சமைத்தால் துளியும் கசக்காது .
* வீட்டில் பல்லிகள் பாடாய்ப் படுத்துகிறதா ? பல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காயத்துண்டை போட்டு வைத்தால், பல்லித் தொல்லை நீங்கிவிடும் .
* இட்லிப்பொடி காரமாகி விட்டதா ? ஒரு கைப்பிடி பொட்டுக்கடலையை அரைத்துச் சேர்த்தால், காரம் குறையும் .
* இட்லி கல் போல வருகிறதா ? ஒரு கிலோ இட்லி மாவுக்கு ஒரு சாஷே ஈனோ உப்பைக் கலந்து, அரை மணி நேரம் கழித்து வார்த்தால், இட்லி பஞ்சு போல் இருக்கும் . எளிதில் ஜீரணமும் ஆகும் .
--- மங்கையர் மலர் .செப்டம்பர் 2010 . இதழ் உதவி : N. கிரி , ( News Agent Thirunallar ) கொல்லுமாங்குடி

Sunday, April 24, 2011

அன்னை தெரசா 100 ?

புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என்ற உபதேசத்தை இந்தியர்களுக்கு உணர்த்த யூகோஸ்லாவாவியாவிலிருந்து பறந்து வந்த வெள்ளைப் புறா . சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற தேவதை . உயிருடன் இருக்கும்போதே இந்தியத் தபால் தலையில் இடம்பெற்று கௌரவிக்கப்பட்ட அன்னை . அன்பு, ஆதரவு, அரவணைப்பு என்றால் முதலில் நினைவுக்கு வரும் நீங்கா முகம் . யூகோஸ்லாவியாவிற்கு நன்றி .
--- அரசு பதில்கள் , குமுதம் 8 / 9 / 2010.

Saturday, April 23, 2011

ஜோக்ஸ் ஹிய்...ஹிய்...

* " காதலுக்கும் , கள்ளக்காதலுக்கும் என்ன வித்தியாசம் ? "
" காதல் பண்ணி வெளியே தெரிஞ்சா கல்யாணப்பத்திரிகைல பேர் வரும் . கள்ளக்காதல் பண்ணி வெளியே தெரிஞ்சா எல்லா பத்திரிகையிலேயும் பேர் வரும் ."
* " என்னைக் காதலிக்கும்போது நொடிக்கு 100 தடவை தேவயானி... தேவயானின்னு பாசமா கூப்பிட்டுகிட்டிருந்தவர் , கல்யாணமானதும் அப்படியே மாறிட்டார்டி ."
" எப்படி ? "
" இப்பல்லாம் ' தேவையா நீ... தேவையா நீ...ங்கிறார்டி ! "
-- குமுதம் , 8 / 9 / 2010.
* "' Tea ' க்கும் ' Coffee ' - க்கும் என்ன வித்தியாசம் ? "
" தெரியலியே ... ! "
" ' Tea ' - ல ஒரு ' e ' இருக்கும் . ' Coffee ' - ல இரண்டு ' e ' இருக்கும் . அதனால பார்த்துக் குடிங்க ... "
* " என்ன சார் , என் பொண்ணு கிளாமரா வரலேன்னு திட்டினீங்களாமே ? "
" நாசமா போச்சு , நான் அவளுக்கு கிராமர் வரலேன்னு திட்டினேன் ."
* " நீங்க மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்துல கார் ஓட்டுவீங்க ? "
" யார் அது மணி ? அவனுக்கெல்லாம் நான் கார் ஓட்றதில்லே "
* ஒரு ஊர்ல அப்படி , இப்படின்னு இரண்டு பேரு .
ஒருநாள் அப்படி " எப்படி இருக்கிங்க "ன்னு கேட்டார் .
இப்படி , " எப்படியோ இருக்கேன் "னாரு.
" இப்படி சொன்னா எப்படி ! அப்படி இருக்கேன் . இல்ல இப்படி இருக்கேன் " ன்னு சொல்லுங்கன்னாரு .
உடனே இப்படிக்கு அப்படி ஒரு கோபம் . " நான் எப்படி இருந்தா உனக்கென்னனு சொல்ல நினைச்சாலும் நீ எப்படி கேட்ப ? "
இது எப்புடி ? ( செம்.... ம கடி ...)
-- மங்கையர் மலர் .செப்டம்பர் 2010 . இதழ் உதவி : N. கிரி , ( News Agent Thirunallar ) கொல்லுமங்குடி
* " உன்னைக் கட்டிக்கிட்டதுக்குப் பதிலா , ஒரு கழுதையைக் கட்டியிருக்கலாம் ! "
" நல்ல வேளை... நீங்க அப்படிச் செய்யலை , நெருங்கிய சொந்தத்துல பொண்ணு கட்டறது தப்புங்க ! "
---. ஆனந்தவிகடன் 8 / 9 / 2010 .

Friday, April 22, 2011

தெரியுமா ? தெரியுமே !

* பாண்டிச்சேரியிலிருந்து 13 கி. மீ. தொலைவில் இருக்கும் புனித நகரம் ' ஆரோவில் '.( Auroville ) . ஆரோ என்பது அரவிந்தரின் ( Aurobindo ) பெயரைக் குறிக்கும் . வில்லா என்றால் ஃபிரெஞ்ச் மொழியில் வீடு என்று அர்த்தம் . அதிலிருந்து வில் என்ற எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஆரோவில் என்று பெயராயிற்று
--- குமுதம் , 8 / 9 / 2010.
* அமெரிக்க அதிபராக இருந்த ஆப்ரஹாம் லிங்கனும் , அவரது காதலி ஆன் ரட்லெட்ஜும் சேர்ந்து படித்த ஆங்கில இலக்கண நூல் ஒன்று , அட்டையில் ஆனின் கையெழுத்துடன் ,அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் இன்றைக்கும் காட்சிக்கு வைக்கப்படுள்ளது .
* " என் காதல் ஆபிரகாம் லிங்கனுடன் இணைந்த துணைவியான நான் -- ஆன் ரட்லெட்ஜ் , மரணம் தந்த பிரிவால் இந்தக் கல்லறையில் உறங்குகிறேன் ' என்று எனது கல்லறையில் பொறித்து வைப்பீர்களா ? " என்று வேதனை முட்களுடன் காத்லி ஆன் ரட்லெட்ஜ் கேட்டாள் .'
-- அவள் விகடன் , பிப்ரவரி 29 . 2008 .
.* " If an individual wins a company does not win . But if a team wins a company also win ". -- இதுதான் டீம் ஸ்பிரிட்டின் மகத்துவம்
* ஒரு ஒளி ஆண்டு என்பது , ஒளி ஓராண்டில் எவ்வளவு தூரம் பயணம் செய்யுமோ அந்த அளவிவிலான தூரம் . ஒளி , ஒரு நொடிக்கு 3 லட்சம் கி. மீ., பயணிக்கும் ; ஓராண்டில் 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கி. மீ., பயணிக்கும் . இந்த தூரம்தான் ஒரு ஒளி ஆண்டு . இதைவிட அதிகமான தூரத்தை அளக்க ' பார்செக் ' என்ற அலகு உள்ளது ஒரு பார்செக் என்பது 3. 26 ஒளியாண்டுகள் ! .
* ஒரு விஷயம் குறித்து வெவ்வேறு விதமான கருத்து கொண்டும் , வெவ்வேறான முடிவும் எடுத்து தடுமாறிக் கொண்டிருப்பவர்களை ஆங்கிலத்தில் ' ப்ளோயிங் ஹாட் அண்டு கோல்டு ' ( Blowimg Hot and Cold ) ( வெப்பத்திற்கும் , குளிர்ச்சிக்கும் இடையே தாவிக் கொண்டு இருப்பவர்கள் ) என்பார்கள்
* அதிபர் தினம் தெரியுமா ? அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவின் பெயரால் ' அதிபர் தினம் ' கொண்டாடப்படுகிறது . அந்த நாடு கென்யா . முதன் முதலாக கறுப்பரான ஒபாமா, அதிபராக வெற்றி பெற்ற நாள் 2008 , நவம்பர் 6 . இப்போது நவம்பர் 6 , கென்யாவில் ஒபாமா தினம் . இது தேசிய விடுமுறை நாள் . உயிருடன் இருக்கும் ஒருவருக்கு அவரின் வாழ்நாளிலேயே அவர் பெயரால் விடுமுறை அளிக்கப்படுவது உலகத்தில் இதுவே முதல் முறையாம் . கறுப்புக்குக் கிடைத்த சிறப்பு !.
* நிலநடுக்கம், வெள்ளம், புயல் என்று அதிகம் இயற்கை பேரழிவுக்கு உள்ளாகும் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாக்களின் பெயர் ' அழிவுச் சுற்றுலா '

Thursday, April 21, 2011

புதிய கருவி கண்டுபிடிப்பு !

கோவை இன்ஜினிய்ர் சாதனை .
குடிபோதையில் இருந்தால் பைக் , கார் ஸ்டார்ட் ஆகாது .
கோவை கல்வீரம்பாளையம் நால்வர் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் ( 27 ) பி. இ எலக்ட்ரிக் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்தவர் . பல கருவிகளை இவர் கண்டுபிடித்துள்ளார் . தற்போது , ' டிரங்கன் டிரைவ் கன்ட்ரோல் சிஸ்டம் ' என்ற புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார் . இக்கருவியை பைக் , கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களில் பொருத்தலாம் . கருவி சீல் வைக்கப்பட்டிருக்கும் .
டிரைவர் சீட்டில் அமர்ந்தவுடன் , கருவியிலுள்ள ஆல்கஹால் சென்சார் தானாக செயல்படும் . டிரைவர் குடித்திருந்தால் ' மன்னிச்சிடுங்க பாஸ் ... நீங்க குடிச்சிருக்கீங்க... உங்களால வண்டி ஓட்டமுடியாது ' என்று எச்சரிக்கை வரும் . மது குடிக்காவிட்டால் , டிஸ்பிளேவில் 3 இலக்க எண் தோன்றி மறையும் . அந்த எண்ணை நம்பர் பட்டனில் அழுத்த வேண்டும் . அத்துடன் ஓட்டுபவரிடம் உள்ள ரகசிய எண்ணை சேர்த்து அழுத்தினால் வண்டி ஸ்டார்ட் ஆகிவிடும் . வண்டியை ஸ்டார்ட் செய்த பிறகு மது குடித்தாலும் , 30 வினாடியில் கண்டுபிடித்து வண்டி நின்றுவிடும் .
இதற்கு முன் இவர் 2004ம் ஆண்டில் , ' ஆட்டோமேட்டிக் ரூம் கன்ட்ரோலர் ' என்ற கருவியை உருவாக்கினார் . வீட்டு பூட்டை உடைத்து திருடர்கள் உள்ளே வந்தால் , இந்த கருவி சத்தமிடுவதுடன் அனைத்து விளக்குகளையும் எரிய வைக்கும் . இதற்கு போபாலிலுள்ள தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர் என்ற அமைப்பு தங்கப்பதக்கம் வழங்கியது .
--- தினமலர் .27 . ஆகஸ்ட் 2010 .

திரும்பிப் பார்ப்போம் !

அது ஒரு விளையாட்டு மைதானம் !
எட்டு சிறுமிகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடுவதற்கு தயாராக நிற்கிறார்கள் . விசில் ஊதியவுடன் எல்லோரும் ஓடுகிறார்கள் . அவர்களில் ஒரு சிறுமி கீழே விழுந்து விடுகிறாள் . கால் முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டு வலி தாங்காமல் அழ ஆரம்பிக்கிறாள் . ஓடிக்கொண்டிருக்கும் மற்ற ஏழு சிறுமிகளும் நின்று திரும்பிப் பார்க்கிறார்கள் . அப்படியே திரும்பி ஓடி கீழே விழுந்த சிறுமியைத் தூக்கி , நிறுத்தி ஆறுதல் கூறுகிறார்கள் . அனைவரும் அவளை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டு வெற்றிக் கோட்டை நோக்கி மெதுவாக நடக்கிறார்கள் .
பார்வையாளர்கள் ஸ்தம்பித்து போகிறார்கள் . அதிகாரிகள் அதிர்ச்சியில் வாயடைத்துப் போகிறார்கள் . பலர் கண்களில் நீர் வழிகிறது . பார்வையாளர்களின் கரவொலியில் மைதானம் அதிர்கிறது .
சமீபத்தில் ஹைதராபாத்தில் தேசிய மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மையம் நடத்திய ஓட்டப்பந்தயத்தில் கண்ட காட்சிதான் இது . ஆம் , மேலே குறிப்பிட்ட எட்டுச் சிறுமிகளும் மன வளர்ச்சி குன்றியவர்கள்
இதன் மூலம் , அவர்கள் இந்த உலகத்துக்கு என்ன போதிக்கிறார்கள் .
ஒருமைப்பாட்டையா , மனித நேயத்தையா.... எல்லோரும் சமம் என்பதையா... தன்னலமற்று இரு என்பதையா... வெற்றிகரமான மனிதர்கள் , பலவீனமானவர்களுக்கு தோள் கொடுக்க வேண்டும் என்பதையா ?
மன வளர்ச்சி அடைந்தவர்களே.... திரும்பிப் பார்ப்போம் !.
--- வசந்தி குலசேகரன் , சென்னை - 34 . அவள் விகடன் . 10 / 9 / 10. இதழ் உதவி : N. கிரி , ( News Agent Thirunallar ) கொல்லுமாங்குடி .

Wednesday, April 20, 2011

டிப்ஸ்...டிப்ஸ் !

* பிடி சாதத்தை எடுத்து நன்கு மசித்து மாவில் கலந்து வடை சுட்டால் மிருதுவாகவும், அதேசமயம் எண்ணெய் குடிக்காமலும் இருக்கும் .
* ரசத்துக்கு நெய்யில் தாளிதம் செய்வதற்கு பதில் , சிறிது சமையல் எண்ணெயில் தாளித்துவிட்டு , பிறகு , சூடான ரசத்தில் நெய்யை ஊற்றினால் மணம் தூக்கலாக இருக்கும் .ஏற்கனவே உருக்கிய நெய்யை , மீண்டும் காயவைப்பதைவிட ... இப்படிச் செய்வதால் நெய் தீய்ந்து விடாமல் , ஒரிஜினல் வாசனையுடன் கமகமக்கும் .
* கட்டிப் பெருங்காயத்தை சிறு துண்டுகளாக உடைத்து , கோதுமை மாவில் புரட்டி ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள் . ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாமல் , தினமும் எடுத்துப் பயன்படுத்த எளிதாக இருக்கும் .
* கட்லெட் செய்வதற்காக தயாரித்து வைத்திருந்த காய்கறிக் கலவை ஒன்றாகச் சேராமல் தளர்வாக இருக்கிறதா ? இரண்டு பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்து , காய்கறிக் கலவையுடன் சேர்த்துப் பிசைந்து விடுங்கள் . கட்லெட்டை அழகான வடிவத்தில் தாயாரித்து விடலாம் .
--- அவள் விகடன் . 10 / 9 / 10. இதழ் உதவி : N. கிரி , ( News Agent Thirunallar ) கொல்லுமங்குடி .

Tuesday, April 19, 2011

தபால் தலை !

ஒரு நாட்டின் , மாநிலத்தின் கலாசாரத்தை , வரலாற்றை , மக்களின் பழக்கவழக்கங்களை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லும் சரித்திர ஆதாரங்களாக தபால் தலைகள் திகழ்கின்றன . அரசியல் தலைவர்கள் , நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் உருவம் பொறித்த தபால் தலைகள் உட்பட அனைத்து நாடுகளின் தபால் தலைகளும் ஒவ்வொரு வரலாற்றை சொல்கிறது , நினைவுபடுத்துகிறது .
--- தினகரன் , இணைப்பு 17 / 9 / 2010..

Monday, April 18, 2011

பதில் சொல்லுங்க பாய்ஸ் !

ஒரு பையனால 55 கிலோ
வெயிட் இருக்கற ஒரு பொண்ணை
அலேக்கா தூக்கிட முடியுமாம் .
ஆனா , அம்மா கெஞ்சினாலும்
அவனால 14.2 கிலோ வெயிட்
இருக்கற கேஸ் சிலிண்டரை தூக்க முடியாதாம் !
என்ன கொடுமை சரவணா இது ?
ஃபீலிங் கார்னர் !
அன்பை
இன்னும் ஆழமாக
புரிந்துகொள்ள
வாய்க்கும் சந்தர்ப்பம்தான்
பிரிவு !
உண்மையைச் சொன்னா தகராறு !
நேரங்கறது
ரஜினி படம் மாதிரி....
நாம ஓட்டத் தேவையில்ல ;
அதுவா ஓடிரும் .
ஆனா , வாழ்க்கைங்கறது
விஜய் படம் மாதிரி....
நாமதான் உட்கார்ந்து
ஓட்டணும் !
--- அவள் விகடன் . 10 / 9 / 10. இதழ் உதவி : N. கிரி , ( News Agent Thirunallar ) கொல்லுமங்குடி

Saturday, April 16, 2011

கொலு வைப்பதன் தாத்பரியம் .

" இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் தேவை , உயிர் பிழைத்தல்தான் ! அதாவது Survival . அதற்கு நீரும் , உணவும் தேவை .
அடுத்த தேவை... ஆடை , வீடு , அணிகலன் , வாகனம் போன்றவை . அதாவது growth . அதற்கு தொழில் நுட்ப அறிவும் பணமும் தேவை .
அடுத்த தேவை... உயர்நிலை . அதாவது Sub - limity . உயிரும் பொருளும் பெற்றதோடு நில்லாமல் , ஞானத்தை அடையவும் முயற்சித்து , அதை எட்டும்போதுதான் அவன் முழு மனிதனாகிறான்
இதன் அடிப்படையில்தான் நவராத்திரி கொலுவின் ஒன்பது படிகளும் வைக்கப்படுகின்றன .
கீழே உள்ள மூன்று படிகளில் உயிர் வளர்க்கத் தேவையான அடிப்படைப் பொருள்களைக் காட்சிக்கு வைக்கிறோம் . ( மண் , வயல் , நதி , உழவன் ,, பறவை , தானியம் , காய்கனி போன்றவை ) .
நடுவிலிருக்கும் மூன்று படிகளில் நமது வளர்ச்சியையும் பாதுகாப்பையும் எடுத்துக்காட்டும் பொருள்கள் இடம் பிடிக்கின்றன . ( நவீன வீடுகள் , நாணயங்கள் , வாகனங்கள் , நூதனப் பொருள்கள் , நாகரிக மனிதர்கள் , ராஜாராணி , சிப்பாய்கள் போன்றவை .)
மேலே உள்ள மூன்று படிகளில் ஞானத்தைக் குறிக்கும் கலையை வளர்க்கும் அம்சங்கள் , தெய்விகக் குறியீடுகள் வைக்கப்படுகின்றன . ( கலைஞர்கள் , மகான்கள் , கடவுள் சிலைகள் போன்றவை .)
உயிர்களை ஜனிக்க வைப்பவள் துர்க்கை .
பொருள் வளம் தருபவள் லக்ஷ்மி .
ஞானம் தருபவள் சரஸ்வது .
இதன் அடிப்படையில்தான் முப்பெரும் தேவியரை வணங்கி , மூன்று சக்திகளுக்கு மூன்று ராத்திரிகள் என நவராத்திரி கொண்டாடி மகிழ்கிறோம் !
ஆல்ஃபிரட் மார்ஷல் , ஹெர்ஸ்பெர்க் , மாஸ்லோ போன்ற பொருளாதார மனவியல் நிபுணர்களின் தியரிகளைப் படித்தால் , அவை நமது நவராத்திரிக் கோட்பாடுகளுடன் அச்சு அசலாக ஒத்துப் போவதைக் கண்டு அசந்து போகலாம் !
முதலில் உயிர் பிழைத்தாலே போதும் என்ற கீழ்நிலை , பிற்பாடு , வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் . கிடைத்த செல்வத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் ... எல்லாம் ஓரளவு கிடைத்தபின் , கலை , இலக்கியத்தில் நாட்டம்... அதைத் தொடர்ந்து ஞானமும் மோனமும் வேண்டும் உயர் நிலை . அதைப் பெறவே... இந்த மனிதப்பிறவி . எல்லாமே படிப்படியான உயர்வு !
--- அனுஷா நடராஜன், மங்கையர் மலர் .செப்டம்பர் 2010 . இதழ் உதவி : N. கிரி , ( News Agent - Thirunallar ). கொல்லுமாங்குடி .

என்ன உலகமடா இது ? !

* ' இங்கே நாட்டுக் கோழி
முட்டை கிடைக்கும் ;னு போர்டு வைக்கறாங்க .
ஆனா , ' எந்த நாட்டோட
கோழி ? ' னு கேட்டா
முறைக்கறாங்க ?
என்ன உலகமடா இது ? !
* புதிய கண்டுபிடிப்பு 2010 !
எல்லோரும் கோடு .
. போட்டுத்தான் ரோடு
போடுவாங்க .
ஆனா , அணில் ரோடு
பொட்டதால்தான் ராமர்
அதுக்கு கோடு போட்டாரு !
இதிகாசத்துலயும்
புகுந்து
புறப்படுவோம்ல ? !
* கேம்பஸ் பஞ்ச் !
மறப்போம் , மன்னிப்போம் !
அட ஆமாங்க... பரீட்சைக்கு படிக்கிறதை
மறப்போம் .
நம்மள ஃபெயில் ஆக்கற புரொபசரை
மன்னிப்போம் !
---- அவள் விகடன் , 29 / 1 / 2010 .

Friday, April 15, 2011

தன்னை அறிதல் ! டார்லிங் டார்லிங்

நாட்கள் நகர நகர உங்கள் தலைமுடி, பற்கள், கண்பார்வை எல்லாம் உங்களை விட்டுப் போகலாம் . ஆனால், உங்கள் திறமை, புத்திசாலித்தனம், சாமர்த்தியம்... இவையெல்லாம் உங்களை விட்டுப் போகாது .
ஏனென்றால்.... உங்ககிட்ட இருக்கறதுதான் மக்கா உங்களைவிட்டுப் போகும் !
எப்பூடி ? !
--- இர. ப்ரீத்தி .
டார்லிங் டார்லிங் டர்ர்ர்ர் !
அந்த வங்கியில் புகுந்த திருடன், அங்குள்ளவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பனத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துவிட்டுக் கிளம்பும்போது, வங்கிக்கு வந்திருந்த ஒருவரிடம் கேட்டான்...
" நான் திருடியதைப் பார்த்தியா ? "
" பார்த்தேன்...." என்று நடுங்கிக்கொண்டே அவர் சொல்லி முடிப்பதற்குள் அவரை சுட்டுக் கொன்றான் . இப்போது திருடன் மற்றொரு நபரிடமும் கேட்டான் .
" நான் திருடியதைப் பார்த்தியா ? "
" நான் பார்க்கல, ஆனா , என் மனைவி பார்த்தா ! "
இவியங்கெல்லாம் பில்கேட்ஸுக்கே கம்ப்யூட்டர் வித்தவைங்க !
--- எம்.ஜி. பாஸ்கரராஜன் , அவள் விகடன் , 29 / 1 / 2010 .

Thursday, April 14, 2011

இயற்கை உபாதை !

இயற்கை உபாதைகளை அதிக நேரத்துக்கு அடக்கி வைப்பதால்.....
" சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உந்துதலை முதல் முறை உணர்ந்த உடனேயே சிறுநீர் கழித்து விட வேண்டும் . ஒரு வேளை அப்போது செல்லாவிட்டாலும் அடுத்த நான்கு மணி நேரத்துக்குள் கண்டிப்பாக சீறுநீர் கழிக்க வேண்டும் .
அதன் பிறகும் பல மணி நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது . தொடர்ந்து இப்படியே நடந்தால் சிறுநீர்ப்பை தனது செயல் திறனை இழந்து விடுகிற அபாயமும் இருக்கிறது .
அதுபோலவே குறித்த நேரத்தில் மலம் கழிக்கத் தவறுவது தொடர்ந்தாலும் மலக்குடல் இறக்கம், பைல்ஸ் போன்ற பிரச்னைகள் வரலாம் ".
--- ஸ்ரீகலா பிரசாத் , மகப்பேறு மருத்துவ நிபுணர் . சென்னை . அவள் விகடன் , 14 / 03/ 2008 .

Wednesday, April 13, 2011

கோயிலுக்கு செல்லக் கூடாது !

" குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் ஒரு வருடம் கோயிலுக்கு செல்லக் கூடாது என்கிறார்களே ஏன் ? "
" நம்மை உருவாக்கிய குலத்தின் அதிபதி மறைந்து விட்டாலும் அவருடைய ஜீவன், ஒரு ஆண்டுக்கு வீட்டிலேயே தெய்வம்போல இருக்கும் என்பது முன்னோர் கருத்து . அதனால்தான் அவருக்காக வருத்தம் தெரிவிக்கும் வகையில் ஒரு வருடம்வரை வீட்டில் கோலமிடாமல், பண்டிகை கொண்டாடாமல் இருக்கிறோம் . ஆனால், 30 நாட்களுக்குப் பிறகு கோயிலுக்குச் செல்லலாம் . மிகப் பெரிய புண்ணியத் தலங்களுக்குத்தான் ஒரு வருட காலம் செல்லக்கூடாது . இந்த கருத்தை சம்ஷேப தர்மசாஸ்திர நூல் உறுதிப்படுத்துகிறது ."
--- குமார சிவாச்சாரியார் . அவள் விகடன் , 14 / 03/ 2008 .

Tuesday, April 12, 2011

பாத காணிக்கை .

மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபொது, ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டார் .சிறையில் அடைத்தவர் ஜெனரல் ஸ்மட்ஸ் என்பவர் . இருந்தாலும் அந்த அதிகாரி தமது நூலகத்தில்லிருந்து சிறந்த நூல்களை காந்தியடிகள் படிப்பதற்காக அனுப்பி வந்தார் .
சிறையிலிருந்த காந்தியடிகள் செருப்பு தைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் . விடுதலையானதும் ஜெனரல் ஸ்மட்ஸை காணஸ் சென்றார் காந்திஜி . அப்போது தாம் தயாரித்திருந்த ஒரு ஜோடி செருப்புகளை அவருக்கு பரிசாக அளித்தார் . நெகிழ்ந்து போய் ஸ்மட்ஸ் அதை பெற்றுக் கொண்டார் .
பின்னாளில் இந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்த ஸ்மட்ஸ், ' நான் சிறையில் தள்ளிய அந்த மனிதரின் ( காந்திஜி ) மகத்தான தயாள குணத்தை முதன்முதலில் கண்டுகொண்டேன் . அவர் தந்த பரிசு சாதாரணமாயினும் , அவற்றின் மீது கால் வைக்க எனக்கு மனம் வரவில்லை . அன்பு, தயாள குணம் இரண்டுக்கும் நினைவுச் சின்னமாக விளங்கும் அந்தக் காலணியை மிகவும் கவனமாக இன்றளவும் பாதுகாத்து வருகிறேன் ' என்றார் .
-- ப்ரியாபாலு தொகுத்த ' பிரபலங்கள் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் ' நூலிலிருந்து ... தினகரன் .3 / 1 / 2010.

Monday, April 11, 2011

ரத்ததானம் சில உண்மைகள் !

* 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம் .
* சராசரியாக ஒருவரின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் இருக்கும் . ரத்த தானத்தின்போது 300 மில்லிலிட்டர் ரத்தத்தைதான் எடுப்பார்கள் .
* தானம் செய்யும் ரத்தமும் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் நம் உடலில் ஊறிவிடும் .
* ரத்த தானத்திற்கு பிறகு ஓய்வு, ஸ்பெஷல் உணவு எதுவும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை .
* ரத்தம் கொடுப்பவர்கள் இரண்டு நாட்களுக்குள் எந்த மருந்தும் சாப்பிட்டு இருக்க கூடாது .
* ரத்தம் கொடுப்பவர் குறைந்தது மூன்று ஆண்டுகளாக மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருக்க கூடாது .
* ரத்த தானம் செய்பவருக்கு ரத்தசோகை, ரத்த அழுத்தம், எய்ட்ஸ் போன்ற நோய்கள் இருக்க கூடாது என்பது முக்கியமான கண்டிஷன் .
--- தாரணி, எடமலைப்பட்டிபுதூர் . தினமலர் . ஜனவரி 9 . 2010.

Sunday, April 10, 2011

கிச்சு...கிச்சு...கிச்சு...

* அட்வைஸ் வேணுமா ?
கால் மீ !
ஃப்ரெண்ட்ஷிப் வேணுமா ?
லெட்டர் மீ !
பணம் வேணுமா >
யார் நீ ?
* லவ்வுன்னா அதுல ஒன் சைடும் பண்னலாம்...
டூ சைடும் பண்ணலாம்... ஆனா , சூசைடுதான்
பண்னக் கூடாது !
* உன் கை ரேகையை பார்த்து
எதிர்காலத்தை நம்பி விடாதே...
கை இல்லாதவனுக்கும்
எதிர்காலம் உண்டு !
* புரியாத நட்புக்கு ,
அருகில் இருந்தும் பயனில்லை...
புரிந்துகொண்ட நட்புக்கு ,
பிரிவு ஒரு தூரமில்லை ...
* அப்பன் சம்பாத்தியத்தில்
சிகரெட் .
சொந்த சம்பாத்தியத்தில்
வைத்தியம் !
--- அவள் விகடன் ,18 / 01 / 2008

Saturday, April 9, 2011

டிப்ஸ்...டிப்ஸ்...

* புது பாத்திரங்களின் அடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரை பாத்திரத்தில் ஒட்டாமல் எடுக்க இதோ பிடியுங்கள் டிப்ஸ்... ஸ்டிக்கர் இருக்கிற இடத்தின் பின்புறத்தை நெருப்பில் சில நொடிகள் காட்டி சூடாக்குங்கள் . இப்போது உரித்தால் சட்டென்று கையில் வந்து விடும் ஸ்டிக்கர் .
* அதிரசம், பூரி, வடை, அப்பம் போன்ற எண்ணெயில் பொரித்த பதார்த்தங்களை பாத்திரத்தில் எடுத்து வைக்கும்போது அதில் சொதசொதவென்று எண்ணெய் ஊறியிருக்கும் . இதைத் தவிர்க்க பாத்திரத்தின் அடியில் நாலைந்து டேபிள் ஸ்பூன்கள் அல்லது ஃபோர்க்குகளை சதுர வடிவில் வைத்து அவற்றின் மேல் எண்ணெய் பண்டங்களை வைத்து விடுங்கள் . எண்ணெயில் இருந்து தப்பிக்கலாம் .
* பால் காய்ச்சும்போது திரிந்து விட்டால், பால் ஓரளவு ஆறியதும் மிக்ஸியிலோ, முட்டை பீட்டரிலோ அடித்து ( கெட்டி மோர் போல வரும் ), உறை ஊற்றி வைத்தால் கெட்டியான தயிராக உறைந்துவிடும் ( கெட்டிப் போன பாலாக இல்லாமல் வேறு காரணங்களால் திரிந்து விட்டால் மட்டும் இப்படிச் செய்ய வேண்டும் ) .
* அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரங்களில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கைப் போக்க வேண்டுமா ? பாத்திரத்தில் அரை ஸ்பூன் இட்லி மாவை தடவி விட்டு கழுவுங்கள் .பிசுக்கு முழுவதும் அகன்று விடும் .
---- அவள் விகடன் ,18 / 01 / 2008

Friday, April 8, 2011

ரயில் பயணங்களின் போது...

எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்யும்போது என்னதான் விழிப்பு உணர்வோடு இருந்தாலும் மயக்க பிஸ்கெட் தந்து கொள்ளை அடிப்பது, கத்தி முனையில் நகைகளை பறிப்பது, குடித்து சக பயணிகளுக்கு தொல்லை கொடுப்பது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடிவதில்லை .
இதுபோன்ற நேரங்களில் உதவுவதற்காகவே ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் . ' ரயிலில் பயணிக்கும் போது ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உடனே 9962500500 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, நீங்கள் பயணிக்கும் ரயிலின் பெயர், பெட்டி மற்றும் இருக்கை எண்ணை குறிப்பிட்டு, உங்களுக்கு நேர்ந்த ஆபத்தையும் சொன்னால் போதும், அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் பயணம் செய்யும் ரயிலில் இருக்கும் போலீஸ் அதிகாரியே , உங்களுக்கு உதவ வருவார் என்பதுதான் அவர்களின் திட்டம் .
திட்டமிட்டபடி இந்த லைஃப் லைன் செயல்பட வேண்டிக் கொள்வோம் !
--- அவள் விகடன் ,18 / 01 / 2008

Thursday, April 7, 2011

கதை கேளு...கதை கேளு...

ஒரு ராஜா தன் மந்திரியிடம், . தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் ? சொல்லுங்கள் ' என்று கேட்டார் .
மந்திரி உடனே அதற்கு பதில் சொல்லாமல், கொஞ்சம் களிமண், பஞ்சு, சர்க்கரை மூன்றையும் எடுத்து வந்தார் . ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தண்ணீரில் போட்டார் . களிமண்ணோடு கலந்த தண்ணீர், கலங்கி சேறானது . பஞ்சு முடிந்த அளவு தண்ணீரை உறிஞ்சியது . சர்க்கரை தன்னைக் கரைத்துக்கொண்டு நீரையும் இனிப்பாக்கியது .
இதைக் கவனித்துக் கொண்டிருந்த அரசனிடம், ' மன்னா... தானும் கெட்டு சமூகத்தையும் கெடுக்கிறவன் களிமண் . தான் மட்டும் கெட்டுப் போகிறவன் பஞ்சு . தன்னையே கரைத்து, தான் சேரும் பொருளையும் சுவையுள்ளதாக்கும் சர்க்கரை போன்று சமூகத்தை வாழ வைக்கிறவந்தான் நல்ல தலைவன் ...' என்றார் மந்திரி .
ஆம் ! தன்னலம் துறத்தல்தானே தலைவனுக்கு அழகு !
--- சாரதாநம்பி ஆரூரன் . சொற்பொழிவாளர் . அவள் விகடன் , ஜனவரி 30 , 2004 .

Wednesday, April 6, 2011

காலேஜ் கலாட்டா !

* என்ன கொடுமை இது ?
பெருமாள் செஞ்சா ' பெருமை '
சிவன் செஞ்சா ' திருவிளையாடல் '
கண்ணன் செஞ்சா ' லீலை '
ஆனா, நாம செஞ்சா மட்டும் ' ஈவ் டீசிங் ' கா
என்ன கொடுமை சார் இது ?
* தத்துவம்
வாழ்க்கை என்பது
பனைமரம் மாதிரி
ஏறினா நொங்கு
விழுந்தா சங்கு !
* ஒரு பையன் முதல் நாள் ஒரு
பொண்ணோட கடற்கரையில்
உட்கார்ந்திருந்தான் , மறுநாள்
வேறொரு பெண்ணோட , மறுநாள்
இன்னொரு பெண்ணோட
இதுலேர்ந்து என்ன தெரியுது ?
பொண்ணுங்க மாறிகிட்டே
இருப்பாங்க , பசங்க மாறவே
மாட்டாங்க .
* மொக்க...
பஸ்ல நாம ' பிரேக் டான்ஸ் '
ஆடினா ' ஜாலி 'ன்னு அர்த்தம்
பஸ்சோட ' பிரேக்கே டான்ஸ் '
ஆடினா ' காலி 'ன்னு அர்த்தம் !
* "சாப்ட்வேர் , ஹார்ட்வேர் என்ன
வித்தியாசம் ? "
"செடியோட வேர் சாப்ட்வேர் ,
மரத்தோட வேர் ஹார்ட் வேர் ! "
----தினமலர் , பல இதழ்கள் வாயிலாம .

Tuesday, April 5, 2011

டானிக் !

' உடம்புக்கும் சரியில்லை, மனசுக்கும் முடியல ...' னு புலம்பல் அலம்பல்ஸா இருக்கறவங்களா நீங்க ? பைசா செலவில்லாம மனசையும் உடலையும் மெயின்டெய்ன் பண்ண, இலவசமா மருந்துச் சீட்டு தர்றோம் இந்தாங்க ...
ஆரோக்கியமான உணவு ........................ 1 - 1 - 1
உடலை வலுப்படுத்த உடற் பயிற்சி....1 - 0 - 1
தியானம் .......................................................1 - 0 - 0
மனம்விட்டுப் பேசுதல் .............................0 - 0 - 1
பழவகைகள் சாப்பிடுதல் ......................... 0 - 1 - 0
இதெல்லாம் டாக்டர்ஸ் எழுதித் கொடுத்தது இல்லைங்க ... நம்ம ஊர்ல வாழ்ந்த முன்னோர்களே எழுதி வச்சுட்டுப் போனது . அப்படியே புடிச்சுகுங்க . ஆரோக்கியமா இருங்க !
--- ச. கார்த்திகேயன் . அவள் விகடன் , டிசம்பர் 7 , 2007 .

Monday, April 4, 2011

என்ன ஒற்றுமை !

ஒரு ஓட்டலுக்குச் சென்ற ஓர் இளம்பெண் பாஸந்திக்கு ஆர்டர் கொடுத்தாள் . எதிரே அமர்ந்திருந்த ஆள், " அட... என்ன ஒற்றுமை . நானும் பாஸந்திதான் ஆர்டர் கொடுத்தேன் " என்றான் .
" நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் " என்றாள் பெண் .
" அட... என்ன ஒற்றுமை . நானும் சந்தோஷமா இருக்கேன் " என்றான் அந்த ஆள் .
" நான் கர்ப்பமா இருக்கேன்னு டாக்டர் இன்னிக்கு கன்பர்ம் பண்ணார் " என்றாள் பெண் .
" அட... என்ன ஒற்றுமை . என்னோட கோழிப்பண்ணைல முட்டை போடாம இருந்த கோழிகள் இப்பதான் முட்டை போட ஆரம்பிச்சிருக்கு " என்றான் அந்த ஆள் .
" என்ன செய்ததால இப்படி ஆச்சு ? " என்று கேட்டாள் பெண் .
" சேவலை மாத்திட்டேன் " என்றான் அந்த ஆள் .
" அட....என்ன ஒற்றுமை " என்றாள் பெண் .
--- தினகரன் . 29/8/2010 /

Sunday, April 3, 2011

வட்டமிட்ட எண்களை சட்டென சொல்லலாம் !

ஒரு பேப்பரில் 1 முதல் 31 வரையிலான எண்களை எழுதுங்கள் . உங்கள் நண்பரிடம் அதைக் காண்பித்துவிட்டு, திரும்பி நின்று கொள்ளுங்கள் .
நண்பரிடம், " இதில் அடுத்தடுத்து எண்களாக ஏதாவது 3 எண்களை வட்டமிட்டுக் கொள் . அந்த எண்களை என்னிடம் கூற வேண்டாம் . அந்த எண்களைக் கூட்டிவரும் தொகையை மட்டும் என்னிடம் சொல் . நீ வட்டமிட்ட எண்களை நான் சொல்கிறேன் ! " என்று ' பில்டெப் ' கொடுங்கள் .
நண்பர் ஒரு எண்ணைச் சொல்வார் .
அதன்பின், அவர் வட்டமிட்ட எண்களை நீங்கள் கண்டுபிடித்து சொல்வது எப்படி ?
ஒரு உதாரணம் :
உங்கள் நண்பர் 16, 17, 18 ஆகிய எண்களை வட்டமிட்டுள்ளார் என்று வைத்துக் கொள்வோம் . இவற்றின் கூட்டுத்தொகை 51 . இதை அவர் உங்களிடம் சொல்வார் .
இந்த எண்ணை நீங்கள் 3--ஆல் வகுக்க வேண்டும் . அதில் கிடைக்கும் விடைதான் அவர் வட்டமிட்ட எண்களில் மத்தியில் உள்ள எண் . அதன் முன்னும் பின்னும் உள்ள எண்கள்தான், அவர் வட்டமிட்ட பிற 2 எண்கள் .
இந்த உதாரணத்தில் 51 ஐ 3 ஆல் வகுத்தால் 17; அதன் முன்னும் பின்னும் உள்ள எண்கள் 16, 18 ; எனவே அவரிடம், " நீ வட்டமிட்ட எண்கள் 16, 17, 18 " என்று சொல்லி அசத்திவிடலாம் !
-- தினமலர் , ஆகஸ்ட் , 27 , 2010.

Saturday, April 2, 2011

6 பருவங்கள் !

இறைவழிபாடு மிகுந்த மார்கழி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக கணக்கிட்டு பின்வரும் பருவங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன .
1 ) மார்கழி -- தை ( ஹேமந்த ருது ) -- முன் பனிப்பருவம் .
2 ) மாசி -- பங்குனி ( சிசிர ருது ) -- பின் பனிப்பருவம் .
3 ) சித்திரை -- வைகாசி ( வசந்த ருது ) -- கோடைப் பருவம் .
4 ) ஆனி -- ஆடி ( கிரீஷ்ம ருது ) -- காற்றடிப் பருவம் .
5 ) ஆவனி -- புரட்டாசி ( வர்ஷா ருது ) -- முன் மழைப் பருவம் .
6 ) ஐப்பசி -- கார்த்திகை ( சரத் ருது ) -- பின் மழைப் பருவம் .
-- தினமலர் , ஆகஸ்ட் , 28 , 2010.

Friday, April 1, 2011

தெரியுமா ? தெரியுமே !

* பால் வழக்கத்தை விட கெட்டியா தெரியறதுக்காக யூரியா நியூட்ரலைசர்ங்கிற ரசாயனத்தைக் கலக்குறாங்க .
* தொலைதூர ஊர்கள்லருந்து பால் விநியோகம் நடக்குறதால, பால் திரியறதைத் தள்ளிப்போட சோடியம் பை கார்பனேட் சேர்க்கப்படுகிறது .
* துவரம் பருப்பில் கலக்கிறதுக்காகவே வட இந்தியாவிலேர்ந்து கேசரி பருப்புங்கிற ரகத்தை வரவழைக்குறாங்க .
--- குமுதம் , 1. 9. 2010.
* இப்போது ஒரு சிரிய வீடு கட்டவே முறுக்கு கம்பிகள் தொடங்கி சிமென்ட் வரை பயன்படுத்துகிறோம் .ஆனால், தஞ்சை பெரிய கோயிலோ, பாறைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியே கட்டப்பட்டிருக்கிறது . பூசுவதற்கு சாந்து பயன்படுத்தப்படவே இல்லை . புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை, குன்றாண்டார் கோயில் ஆகிய இரண்டு ஊர்களில் இருந்த மலைகலை உடைத்து பெயர்த்துக் கொண்டுவந்து கட்டப்பட்டதுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள் .
--- தினமலர், ஆகஸ்ட் 29 , 2010.
* சோப் தாயாரிக்க தாவர் எண்ணெய் மாதிரியான இயற்கையான பொருள்களைத்தான் பயன்படுத்துவாங்க . ஆனா, டிட்டர்ஜென்ட் அப்படியில்லை . பெட்ரோலியம், செயற்கைக் கொழுப்பு, தார்... இப்படி செயற்கைப் பொருள்களால் ஆனது .
--- அவள் விகடன் , ஜனவரி 30 , 2004 .