Thursday, January 6, 2011

ஒரு கதை , ஒரு கணக்கு !

ஒரு ஊர்ல 3 நண்பர்கள் , ஒன்றாக சேர்ந்து ஹோட்டலுக்கு சாப்பிடப் போகிறார்கள் . ஒரு சாப்பாடு விலை ரூ. 5 . ( கதையில் மட்டும்தான் இந்த ரேட் ) . 3 பேரும் சாப்பிட்டு முடிந்ததும் பில் வருகிறது . மொத்தம் 15 ரூபாய் . ஆளுக்கு 5 ரூபாய் எடுத்து வைக்கிறார்கள் . சர்வர் பணத்தை எடுத்துக் கொண்டு போய் கல்லாவில் தருகிறார் . ' அட , இவங்க நம்ம ஓட்டலுக்கு ரெகுலரா வர்றவங்க ' என்று சொல்லி ஓட்டல் அதிபர் 5 ரூபாய் தள்ளுபடி செய்துவிடுகிறார் .
சர்வர் வந்து 5 ரூபாயை திருப்பி தந்ததும் சந்தோஷப்பட்ட நண்பர்கள் , 2 ரூபாயை சர்வருக்கு டிப்ஸ் தந்து விடுகிறார்கள் . மீதி 3 ரூபாயை ஆளுக்கு ஒரு ரூபாயாக பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள் .
இப்ப , கணக்கு போட்டு பார்க்கிறார்கள் . ஆளுக்கு 5 ரூபாய் தந்தோம் . ஒரு ரூபாய் திருப்பி லிடைத்தது . ஆக , ஒவ்வொருவருக்கும் செலவு ரூ. 4 . மூவருக்கும் சேர்த்து மொத்தம் 12 ரூபாய் . சர்வருக்கு டிப்ஸ் ரூ. 2 . இரண்டையும் கூட்டினால் ( 12 + 2 ) ரூ . 14 வருகிறது . மூவரும் சேர்ந்து போட்ட மொத்தப் பணம் 15 ல் மீதி ஒரு ரூபாய் எங்கே ? என்று குழம்புகிறார்கள் .
உங்களில் யாராவது இந்த குழப்பத்தை தீர்த்துவைத்து , விவரமாக விளக்குங்களேன் .
--- தினமலர் இணைப்பு , ஜூலை 31 , 2010 .
விடை :
* 3 பேரும் சாப்பாட்டுக்கு கொடுத்தது ரூ. 10 , டிப்ஸ் கொடுத்தது ரூ. 2 , மொத்தச் செலவு ரூ, 12 . மீதி கிடைத்தது ரூ. 3 , ஆக மொத்தம் ரூ. 15 .
* முதல் நபர் செலவு ( சாப்பாடு ரூ. 3.30, டிப்ஸ் 70 காசு ) ஆக ரூ. 4 .
இரண்டாவது நபர் செலவு ( சாப்பாடு ரூ. 3.35 , டிப்ஸ் 65 காசு ) ஆக ரூ. 4 .
மூன்றாவது நபர் செலவு ( சாப்பாடு ரூ. 3.35 , டிப்ஸ் 65 காசு ) ஆக ரூ. 4 .
மூன்று பேருக்கும் திரும்பி வந்த தொகை ( 1 + 1 + 1 ) ரூ. 3 .
செலவையும் மீதியையும் கூட்டினால் ரூ. 15 .
இந்த 2 வகையிலும் விடை சொல்லலாம் . ஆனால், செலவையும் வரவையும் குழப்பி கணக்கு தரப்பட்டதால் தவறான
விடை வந்தது .
--- இரண்டு வகையிலும் சரியான விளக்கம் தந்து பரிசு பெறுபவர் எஸ் . திலகவதி , நாகப்பட்டினம் ரிசல்ட் ,
, தினமலர் ஆகஸ்ட் 14 . 2010 .

2 comments:

ப.கந்தசாமி said...

நண்பர் சந்தானம் அவர்களே, கருப்பு பின்னணியில் வெள்ளை எழுத்துகளைப் படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஏதாவது செய்யவும்.

க. சந்தானம் said...

அன்பு Dr P. kandaswamy ,PhD அவர்களே , தங்கள் கூற்று நல்லது தான் . மகிழ்ச்சி ! ஆனால், கம்ப்யூட்டர் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு , அமெரிக்காவுக்கு நான் சென்றிருந்தபோது, அங்கு என் மகன் சிவி . ஐயப்பன் சொல்லிக்கொடுத்ததைக் கொண்டு நான் ஏதோ அடித்துக் கொண்டிருக்கிறேன் . பிற்காலத்தில் , அவர் இங்கு வரும் பொழுது அவரிடம் இதுபற்றி கூறி. மாற்ற முயற்சிக்கிறேன் , நன்றி !