Sunday, January 23, 2011

16 மேஜிக் !

உங்களை ' மேத்ஸ் மேஜிஷியன் ' ஆக்கும் ஒரு சூப்பர் கணக்கு டெக்னிக் இது... கவனமாகப் படிச்சுட்டு எல்லோரிடமும் இதைச் சொல்லி அசத்துங்க !
சில காகிதத்துண்டுகளில் ' 16 ' என்று எழுதுங்கள் . இதை உங்கள் நண்பர்கள் பார்க்கக்கூடாது . காகித துண்டுகளை மடித்து நண்பர்களிடம் கொடுங்கள் . " நான் சொல்லும் வகையில் ஒரு கணக்கை நீங்கள் செய்ய வேண்டும் . என்னிடம் எந்த எண்ணையும் சொல்ல வேண்டாம் . கணக்கு முடிந்தபிறகு இந்த காகிதத்தைப் பிரித்துப் பாருங்கள் . சூப்பர் ஆச்சர்யம் காத்திருக்கு ! " என்று ' பில்டப் ' கொடுங்கள் .
பிறகு , கீழ்க்கண்ட முறையில் நண்பர்களிடம் கணக்கு செய்ய சொல்லுங்கள்....
1 . எந்த எண்ணை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் .
2 . அந்த எண்ணுடன் 20 ஐ கூட்டுங்கள் .
3 . வரும் எண்ணை 2- ஆல் பெருக்குங்கள் .
4 . வரும் எண்ணில் இருந்து 8 -ஐ கழியுங்கள் .
5 . வரும் எண்ணை 2 -ஆல் வகுத்துக் கொள்ளுங்கள் .
6 . வரும் எண்ணில் இருந்து , நீங்கள் முதலில் நினைத்த எண்ணைக் கழித்துக் கொள்ளுங்கள் .
இப்படி சொல்லிவிட்டு , " இனி நான் தந்த காகித்தத்தைப் பிரித்துப் பாருங்க . நீங்கள் செய்த கணக்கின் விடை இருக்கும் ! " என்று சொல்லுங்கள் . அவர்கள் பேப்பரைப் பார்த்து , ' அடடே ! நீ சூப்பர் மேஜிஷியன் !' என்று அசந்து பாராட்டுவார்கள் .
ஒரு உதாரணம் : நினைத்த எண் 62 . இதோடு 20 கூட்டினால் 82 . இதை 2 -ஆல் பெருக்கினால் 164 . இதிலிருந்து 8 ஐக் கழித்தால் 156 . இதை 2 ஆல் வகுத்தால் 78 . இதில் 62 ஐ இருந்து ( நீங்கள் நினைத்த எண் ) கழித்தால் 16 !
---- தினமலர் , ஜூலை 16 , 2010.

No comments: