Friday, November 19, 2010

நடராஜர்.

* தரிசிக்க முக்தி தரும் தலம், சிதம்பரம். நடராஜப் பெருமான் இங்கு தாழ்சடையுடன் விளங்குகிறார்.
* மூலவரே உற்சவராய் வலம் வரும் கோயில் அநேகமாக இது மட்டுமே.
* பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத்தலமாக விளங்குகிறது.
* சமயக்குரவர்கள் நால்வராலும் பாடல்பெற்ற சிறப்புடையது.
* ஆன்மிக உலகில் ' கோயில் ' என்னும் பொதுச் சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படுகிறதென்றால், அது சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்தான்.
* சேக்கிழார் பெருமான் இயற்றிய சிவனடியார்களின் சரிதங்கள் அடங்கிய ' பெரிய புராணம் ' நூல் இங்குதான் அரங்கேற்றப் பட்டது.
* அருவ ( ரகசியம் ) உருவ ( நடராஜர் ) அருவுருவ ( மூலநாதர் லிங்க வடிவம் ) என மூவகை வழிபாடுகளைக் கொண்ட திருத்தலம்.
* தில்லை -- ஊர்ப்பெயர் , பொன்னம்பலம் -- கோயில் பெயர்.
* இத்தலத்தின் நான்கு கோபுர வாயில்கலிலும் சைவ சமயகுரவர்கள் நான்கு பேரும் நுழைந்து தரிசனம் செய்திருக்கிறார்கள்.
* மும்மூர்த்திகளையும் இங்கே ஒரு சேர வணங்கலாம்.
* இங்குள்ள பொற்சபை, சிலப்பதிகாரம் விளக்கும் நாட்டிய மேடை அமைப்பைக் கொண்டது.
* மாணிக்கவாசகரின் திருவாசகத்தை இறைவனே எழுதி, படி எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
* அனைத்து தெய்வங்களின் சக்தியும் தினந்தோறும் நடராஜப்பெருமானிடம் ஒடுங்கி, பின்பு அந்த தெய்வங்களிடமே செல்லும் தன்மை மிக்கது இத்தலம்.
--- தினகரன் , 19. 06. 2010.

No comments: