Friday, October 15, 2010

ஞாபக சக்தி

ஞாபக சக்தி குறைந்து விடும் .
அதிகம் செல்போன் பேசினால் ஞாபக சக்தி குறைந்து விடும் . ஆய்வில் அதிர்ச்சி தகவல் .
செல்போனில் தினமும் பல மணி நேரம் பேசிக் கொண்டே இருந்தால் ஞாபக சக்தி குறைந்து விடும் என்று இங்கிலாந்து ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது .
தினமும் பல மணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் பாதி பேருக்கு தங்கள் வாழ்க்கை துணையின் நம்பர் கூட மறந்து விடுகிறது . 10 ல் 7 பேருக்கு நெருங்கிய நண்பரின் போன் நம்பரை சட்டென நினைவுக்கு கொண்டுவர முடிவதில்லை .
51 சதவீதம் பேருக்கு பெற்றோரின் போன் நம்பர் ஞாபகத்தில் இருப்பதில்லை . தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவோரில் 10ல் 9 பேருக்கு திடீரென கேட்டால் முக்கிய நம்பர்களை உடனடியாக சொல்ல முடியவில்லை . 5 முதல் 10 விநாடிகள் யோசித்தே சொல்ல முடிகிறது . இது நினைவாற்றல் குறைவதை காட்டுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது . அவசர நேரத்தில் முக்கிய பெயர்கள் , நம்பர்கள் நினைவுக்கு வராது . இதை ' கோல்டு பிஷ் மெமரி ' என்கிறோம் .
இதற்கு முன் நடந்த ஆய்வு ஒன்றில் , ' சராசரியாக ஒவ்வொருவரும் 5 முக்கிய போன் நம்பர்கள் , பாஸ்வேர்டுகள் , 2 வாகன நம்பர் பிளேட்கள் , 3 செக்யூரிடி அடையாள எண்கள் , 3 வங்கி கணக்கு எண்களை தினசரி வாழ்க்கையில் நினைவில் கொள்கின்றனர் . அதற்கு மேல் மறதி ஏற்படுகிறது ' என்று கூறப்பட்டது .
--- தினகரன் , 15 ஜூலை . 2010 .

2 comments:

மதுரை சரவணன் said...

அதிகம் செல்போன் பேசினால் ஞாபக சக்தி குறைந்து விடும் . ஆய்வில் அதிர்ச்சி தகவல் .//

but people never realise it. thanks for sharing.

க. சந்தானம் said...

மதுரை சரவணன் அவர்களே , ' people never realise it ' என்று சொல்லியுள்ளீர்கள் . அதற்காக நன்றி !