Friday, July 23, 2010

' தண்ணீர் பிளாஸ்டிக் '

இரட்டைபலன் தரும் ' தண்ணீர் பிளாஸ்டிக் '
தண்ணீரை இப்படியும் பயன்படுத்த முடியுமா ? என்று வியக்க வைத்துள்ளனர் ஜப்பான் விஞ்ஞானிகள் .நெகிழா தன்மை கொண்ட பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தண்ணீரையே பிளாஸ்டிக்காக பயன்படுத்த வழி கண்டுள்ளனர் இவர்கள் .
மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியாததால் பிளாஸ்டிக் கழிவுகள் , சமூக வாழ்வுக்கு ஒரு பெரும் சவாலாகவும் , தொல்லையாகவும் இருந்து வருகிறது . இதனால் கணிசமான அளவில் புவி சூடாகி இருப்பது மறுக்க முடியாத உண்மை .
டோக்கியோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ள இந்த ' எலாஸ்டிக் வாட்டர் ' ( Elastic Water ) நெகிழும் தண்ணீர் பிளாஸ்டிக்காக பயன்படுத்தப்பட உள்ளது . 95 சதவிகிதம் தண்ணீரும் , 2 கிராம் களிமண் மற்றும் ஒரு சில ரசாயனங்களும் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது . ஒளி ஊடுருவும் தன்மை , நெகிழும் தன்மை , மீள் தன்மை கொண்டதாக இருப்பதால் மறுசுழற்சி செய்ய முடியும் . சுற்றுச் சூழலுக்கும் தீங்கற்றது .
மருத்துவத்துறையிலும் இந்த ' எலாஸ்டிக் வாட்டர் ' பயன்படுத்தமுடியும் என்பதுதான் இதன் மற்றொரு சிறப்பம்சம் . குறிப்பாக காயம் பட்ட இடங்கள் , அறுவைச் சிகிச்சைப் பகுதியில் வெட்டப்படும் மேற்தோல் , தசைப் பகுதியை உலராமல் பாதுகாப்பதில் இது முக்லிய பங்காற்றுகிறது .
மருத்துவத்திலும் , சுற்றுப்புறச் சூழலிலும் பெரிதும் துணைபுரியும் ' எலாஸ்டிக் வாட்டர் ' சமீபத்திய சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது .
--- , தினத்தந்தி , இணைப்பு . 13. 02. 2010 . இதழ் உதவி : N. G. கலியபெருமாள். திருநள்ளாறு

2 comments:

தேவன் மாயம் said...

மருத்துவத்திலும் , சுற்றுப்புறச் சூழலிலும் பெரிதும் துணைபுரியும் ' எலாஸ்டிக் வாட்டர் ' சமீபத்திய சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது//

நல்ல தகவல்!1

க. சந்தானம் said...

அன்பு , தேவன்மாயம் அவர்களுக்கு ! நல்லது சொன்னீர்கள் . நன்றி !