Saturday, July 24, 2010

' மான்ஸ்டர் ஸ்டார் '

சூரியனைவிட மிகப்பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு . ' மான்ஸ்டர் ஸ்டார் ' என பெயர் .
சூரியனைவிட 320 மடங்கு பெரிய, 1 கோடி மடங்கு பிரகாசமான, இதுவரை இல்லாத மெகா அளவில் புதிய நட்சத்திரத்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் . அதற்கு ' மான்ஸ்டர் ஸ்டார் ' என்று பெயரிட்டுள்ளனர் .
சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திர கூட்டத்தில் இரண்டு குழுக்கள் இருந்தன . அவற்றை நுணுக்கமாக தொலைநோக்கியில் ஆராய்ந்தபோது, ஒரு நட்சத்திர கூட்டத்தில் பயங்கர பிரகாசத்துடன் மிகப் பெரிய நட்சத்திரத்தை கண்டனர் . அதன் அளவை கணக்கிட்டனர் .
ஆர்எம்சி 136 ஏ என்ற அந்த நட்சத்திரம் , அளவில் சூரியனைவிட 320 மடங்கு பெரியதாகவும் , பிரகாசத்தில் 1 கோடி மடங்கு அதிகமாகவும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் .
அதற்கு ' மான்ஸ்டர் ஸ்டார் ' ( ராட்சத நட்சத்திரம் ) என்று பெயரிட்டனர் . அது தோன்றியபோது இப்போதுள்ள அளவைவிட பெரியதாக இருந்திருக்கும் என்றும் கருதப்படுகிறது . அதைச் சுற்றியுள்ள மேலும் பல நட்சத்திரங்கள் 40,000 டிகிரிக்கு வெப்பமாக இருப்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்தது .
இந்த புதிய கண்டுபிடிப்பு பற்றி : " எடையில் சூரியனைவிட இது 265 மடங்கு அதிகம் . அதிக வெப்பம் காரணமாக இது போன்ற நட்சத்திரங்கள் தன்னைதானே எரித்து அழியக்கூடியவை . அதனால், பூமியைவிட பல மடங்கு அதிக வெப்பம் கொண்டவை . இதுபோன்ற வெப்ப நட்சத்திரங்கள் 30 லட்சம் ஆண்டுகள் வரைகூட இருக்கும் . நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே இவை இருப்பதால் தூரம் காரணமாக இவற்றை அடையாளம் காண்பது சிரமம் "
சூரியனை விட 150 மடங்கு பெரிய நட்சத்திரம் மட்டுமே இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது . அதைவிட 2 மடங்கு பெரிய மான்ஸ்டர் ஸ்டார் இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது . இந்த கண்டுபிடிப்பால் , இதைவிட பெரிய நட்சத்திரங்கள் அதிகளவில் ஏற்கனவே இருந்திருக்ககூடும் .
--- தினகரன் , ஜூலை 23 . 2010.

No comments: