Thursday, July 22, 2010

விமான கறுப்பு பெட்டி .

விமான கறுப்பு பெட்டி .
விமான கறுப்பு பெட்டி கண்டுபிடித்த ஆஸ்திரேலய விஞ்ஞானி மரணம் . விருதுகள் பெற்றவர் .
விமான விபத்துக்கான காரணத்தை அறிய உதவும் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்த ஆஸ்திரேலியர் , 85 வயதில் கடந்த திங்கள் கிழமை ( 19 .07. 2010 ) மரணம் அடைந்தார் .
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள குரூட் தீவில் 1925 ம் ஆண்டு பிறந்தவர் டேவிட் வாரன் .பழங்குடியினர் வசித்து வந்த அந்த தீவில் பிறந்த முதல் ஐரோப்பிய வம்சாவளி குழந்தை வாரன் என்பது குறிப்பிடத்தக்கது . வாரன் அந்நாட்டின் ராணுவ அறிவியல் தொழில்நுட்ப அமைப்பில் விஞ்ஞானியாக இருந்தார் .
வாரனுக்கு 9 வயதான போது , ஆஸ்திரேலியாவின் பாஸ் ஜலசந்தியில் ' மிஸ் ஹோபர்ட் ' என்ற தபால் விமானம் விழுந்து நொருங்கியதில் , வாரனின் தந்தை உட்பட 12 பேர் பலியாயினர் . 1953 -- 54 ஆண்டுகளில் ' கமெட் ' விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாயின . இந்த விபத்துக்களில் விமானத்தில் இருந்த யாரும் உயிர்தப்பவில்லை . இந்த ஜெட் விமான விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்திய குழுவில் டெவிட் வாரன் இடம்பெற்றார் .
அப்போது , கட்டுப்பாட்டு அறைக்கும் விமானிக்கும் இடையே நடந்த உரையாடல்கள் மற்றும் விமான கருவிகளின் அளவீடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் , விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்க எளிதாக இருந்திருக்கும் என வாரன் எண்ணினார் . 1956 ல் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்தார் வாரன் .
தீயில் எரியாத , உடைக்க முடியாத கடினமான பெட்டிக்குள் பதிவு கருவியை வாரன் வைத்தார் . அதை விமானத்தின் வால் பகுதியில் பொருத்த அவர் பரிந்துரைத்தார் .மேலும் , விபத்து ஏற்பட்டால் எளிதில் தேடிக் கண்டுபிடிக்கும் விதத்தில் அந்தப் பெட்டிக்கு பிரகாசமான சிவப்பு வண்ணம் பூசப்பட்டது . கறுப்புப் பெட்டி என பெயர் பெற்றாலும் , அது சிவப்பு வண்ணத்தில் இருந்தது .' மாய வித்தை ' காட்டுவதை ஆங்கிலத்தில் ' பிளாக் மேஜிக் ' என்கின்றனர் . அதனால் அதற்கு ' பிளாக் பாக்ஸ் ' என பெயர் வந்தது .
உலகம் முழுவதும் பயணிகள் விமானங்களில் கறுப்பு பெட்டி கட்டாயமானது . இதற்காக 2001 ல் விருது பெற்றார் டேவிட் வாரன் .
-- தினமலர் & தினகரன் , ஜூலை 22 . 2010.

No comments: