Thursday, May 27, 2010

' க்ரிப்டோகிராஃபி !'

உளவறிவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் .... அதை யாருக்கும் தெரியாமல் கொண்டுபோய்ச் சேர்ப்பது ! தகவல் தருபவர் , தகவல் தெரிந்துகொள்பவர் இருவரும் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் தகவலைப் பகிர்ந்துகொள்ளும் முறைக்குப் பெயர்...க்ரிப்டோகிராஃபி ! '
கி.மு. 1900ல் எகிப்தில் உள்ள பிரமிடுகள் ஒன்றில் செதுக்கப்பட்ட ஒரு வாக்கியம்தான் க்ரிப்டோகிராஃபியில் ஆரம்பம் . ஆரம்ப காலத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் செய்தியை நேரடியாகவே எழுதி அனுப்பினார்கள் . பின்னர் , விடுகதைகள் , கவிதைகள் மூலம் தகவல்களை பரிமாறப்பட்டன . அடுத்ததாக , எழுத்துக்களை மாற்றியமைத்துத் தகவல்களை அனுப்ப ஆரம்பித்தார்கள் . உதாரணமாக , ' Alex ' என்ற பெயரை ' Bmfy ' என்று அனுப்புவார்கள் . முதலில் குழப்பமாக இருக்கும் . எல்லா எழுத்துக்களுக்கும் முந்தைய எழுத்துக்களை எழுதினால் விடை கிடைத்துவிடும் .
--- மதுமிதா . உளவாளி விகடன் . 23 . 12 . 2009 .

No comments: