Saturday, May 15, 2010

ரோபோ மனைவி !

50 ஆண்டில் ரோபோ மனைவி !
' மனைவி தொந்தரவு தாங்க முடியலைப்பா ....' என்ற டயலாக் எல்லாம் இன்னும் 50 ஆண்டுகள் கழித்து கேட்க முடியுமா எனத் தெரியவில்லை . ஏனெனில் அப்போது ரோபோ மனைவிகளையே ஆண்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அதிரடி குண்டு போட்டிருக்கிறார் டேவிட் லெவி என்ற விஞ்ஞானி .
' நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பெண் போன்ற ரோபோ உருவாக்குவது சாத்தியம் இதுபோன்ற பெண் ரோபோவை ஆண்கள் மணந்து கொண்டு நீண்ட காலம் குடும்பம் நடத்தலாம் . இன்னும் 50 ஆண்டுகளில் இது நடக்கத்தான் போகிறது .
கணவர்களின் பாலியல் பிரச்னைகளை தீர்க்கவும் இந்த ரோபோக்கள் உதவும் . இவற்றால் ஆண்களின் பல பிரச்னைகள் தீரப் போகின்றன ' என்றார் விஞ்ஞானி டேவிட் லெவி .
ரோபோக்களுக்கு செயற்கை அறிவூட்டும் தொழில்நுட்பத்தில் நிபுணராக விளங்கும் லெவிக்கு 2009 ம் ஆண்டுக்கான லோப்னர் விருது வழங்கப்பட்டுள்ளது .
ஆனால் , லெவியின் கருத்தை மற்றொரு விஞ்ஞானியான பிரடெரிக் கப்லான் ஏற்றுக்கொள்ளவில்லை .' ஆண்களின் பாலியல் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதத்தில் பெண் ரோபோ இருந்தாலும் , அதை முழுமையான மனைவியாக கருத முடியாது . மனித பெண்ணுக்கு எந்த விதத்திலும் ரோபோ ஈடாகாது . மனிதன் போன்று எந்த ஒரு இயந்திரத்தையும் படைக்க முடியாது ' என்று கப்லான் கூறியிருக்கிறார் .
சோனி நிறுவனத்தின் புகழ் பெற்ற அய்போ என்ற ரோபோ நாய்க்கு ' மூளை ' உருவாக்கியதில் பிரடெரிக் கப்லானுக்கு முக்கிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது .
---தினமலர் , 11 . 12 . 2009 .

No comments: