Tuesday, April 6, 2010

எடை !உயரம் !தலைச் சுற்றளவு !

குழந்தையின் எடை !
உங்கள் குழந்தை எவ்வளவு எடை இருக்க வேண்டும் ? ஒரு சின்ன ஃபார்முலா ...
குழந்தையின் வயதுடன் மூன்றைக் கூட்டி ஐந்தால் பெருக்குங்கள் . அத்தனை பவுண்டு எடை உங்கள் குழந்தை இருந்தால் டபுள் ஓகே . அதாவது உங்கள் குழந்தைக்கு நான்கு வயது என்றால் அதன் எடை ( 4 + 3 ) x 5 = 35 பவுண்டு இருக்க வேண்டும் . 2 1/2 பவுண்டு என்பது 1 கிலோ .
இந்த ஃபார்முலா இரண்டு வயதிலிருந்து பன்னிரெண்டு வயது வரை மட்டுமே செல்லுபடியாகும் .
குழந்தையின் உயரம் !
குழந்தையின் வயதை இரண்டால் பெருக்கி 32 - ஐக் கூட்டுங்கள் . வருகிற விடை என்னவோ அத்தனை அங்குலம் இருக்க வேண்டும் அதன் உயரம் . நான்கு வயதுக் குழந்தையின் சரியான உயரம் 4 X 2 + 32 = 40 அங்குலம் . இந்த ஃபார்முலாவும் இரண்டு வயது முதல் பன்னிரெண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கே .
குழந்தையின் தலைச் சுற்றளவு !
பிறந்த குழந்தைக்கு 13 . 8 அங்குலம் தலைச் சுற்றளவு இருக்கும் . இது மாதத்துக்கு 1 / 2 அங்குலம் வீதம் முதல் நான்கு மாதமும் , பின்பு மாதத்துக்கு 1 / 4 அங்குலம் வீதம் அடுத்த எட்டு மாதமும் அதிகரிக்கும் . ஒரு வயது குழந்தையின் தலைச் சுற்றளவு 17 . 8 அங்குலம் இருக்க வேண்டும் . இந்த அளவிலிருந்து கூடுதலாகவோ , குறைவாகவோ இருந்தால் மருத்துவரை அணுகுங்கள் .
--- ஆனந்தவிகடன் , 12 . 09 . 1999 .

No comments: