Tuesday, March 23, 2010

யோசிக்க வைத்த விஷயம் ?

ஜப்பானில் உள்ள எல்லாக் குடும்பங்களிலும் தலைமுறை பற்றிய தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும் . ஏனென்றால் பல நூற்றாண்டுகளாக ஜப்பானில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள புத்த மடாலயங்களில் , அந்த ஊரில் பிறந்தவர்களின் பெயர்களையும் , குறிப்புக்களையும் எழுதி வைத்திருக்கிறார்கள் . அரசாங்க ஆவணங்களிலும் அது இடம் பெறுகிறது . எனவே 100 ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்துவிட்டு வந்த ஜப்பானியர் ஒருவர் தன்னுடைய பெயரைச் சொன்னாலே போதும் அவருடைய குடும்பம் பற்றிய எல்லாத் தகவல்களையும் சுலபமாகச் சொல்லிவிடலாம் .
பேராசிரியர் நோபுரு கரஷிமா கூரிய இந்தத் தகவலை அருணகிரி சங்கொலியில் எழுதியிருந்ததைப் படித்தபோது , நமக்கெல்லாம் நம்முடைய நாலு தலைமுறைக்கு மேல் தெரியுமா என்ற யோஜனையும் , வெட்கமும் எழுந்தது .
--- அரசு பதில்கள் . 04 - 11 - 2009 . குமுதம் இதழில் கேள்வி கேட்டவர் : செல்லூர் கணேசன் , காரைக்கால்

2 comments:

வடுவூர் குமார் said...

4 த‌லைமுறைக்கு மேல் தெரிந்து என்ன‌ செய்ய‌ப்போகிறோம் என்ற‌ கேள்வியும் எழுகிற‌து.

Unknown said...

வடுவூர் குமார் அவர்கட்கு , நியாயமான கேள்விதான் !