Tuesday, February 2, 2010

விமானம் வந்த கதை .

விமானம் இந்தியாவுக்கு வந்த கதை சுவாரஸ்யமானது . பாட்டியாலா மகாராஜா 1910 ல் இந்தியாவுக்கு விமானத்தை அறிமுகப்படுத்துவதற்காக பெளல்ஸ் என்ற ஆங்கிலப் பொறியாளரை அனுப்பி , பார்மென் என்ற குட்டி விமானத்தை பிரான்ஸில் இருந்து வாங்கி வரச் செய்தார் . 1910 டிசம்பர் 11 - ம் தேதி அலகாபாத்தில் முதல் விமானம் கிளம்பியது . முதல்முறையாக விமானத்தில் ஏறிப் பறந்த இந்தியர் , காசி மகாராஜாவின் மகன் . ஹென்றி பெக்கே என்ற விஞ்ஞானி அந்த விமானத்தை ஓட்டினார் . சென்னையில் 1911 பிப்ரவரி 18 - ம் தேதி விமானம் பறந்தது . அந்தக் காட்சியைப் பார்க்கப் பொதுமக்கள் திருவிழா போலத் திரண்டு இருந்தார்கள் .
மகாத்மா காந்தி விமானத்தில் பயணம் செய்த்து இல்லை . விமானத்தில் செல்லும்படியான சந்தர்ப்பம் கிடைத்தபோதும் ' அது ஏழைகள் பயணம் செய்ய முடியாத வாகனம் . எனக்கும் அதில் பயணம் செய்ய விருப்பம் இல்லை ' என்று தவிர்த்திருக்கிறார் காந்தி . அவரது லண்டன் பயணம் கப்பலில்தான் நடந்தது . இந்தியா முழுவதும் ரயிலிலும் கார்களிலும்தான் பயணம் செய்திருக்கிறார் . இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்யாத முதல் அரசியல்வாதி காந்தியாகத்தான் இருக்கக்கூடும் .
--- எஸ் . ராமகிருஷ்ணன் . ஆனந்தவிகடன் , 30 - 09 - 2009 .

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

தகவலுக்கு நன்றிங்க....


உங்கள் தளத்தில் word verficationஐ எடுத்துவிட்டால் பின்னூட்டமிட எளிதாக இருக்கும்

க. சந்தானம் said...

அன்பு ஞானசேகரன் அவர்களுக்கு , வணக்கம் . தாங்கள் word verification ஐ எடுத்து விட்டால் பின்னூட்டமிட எளிதாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளீரகள் . தகவலுக்கு நன்றி !