Friday, December 11, 2009

Whale Done !

அமெரிக்காவின் ஆர்லாண்டா நகரத்தில் , ' ஸீ வேர்ல்ட் ' என்ற உயிரியல் பூங்கா உள்ளது . அங்கே திமிங்கிலங்களைப் பழக்கப்படுத்தி பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை காண்பிக்கிறார்கள் .
நாய் போன்ற சிறுமிருகங்களை அடித்து மிரட்டி பழக்கி விடலாம் . ஆனால் , திமிங்கிலங்கள் பல மடங்கு பெரியவை . எத்தனை பயிற்சியாளர்கள் சேர்ந்து வந்தாலும் அரை நிமிடத்தில் துவம்சம் செய்துவிடக்கூடிய பலம் அவற்றுக்கு உண்டு . ஆக , திமிங்கிலங்களை அடிப்பது , மிரட்டுவதெல்லாம் உதவாது . வேறுவழியில்தான் அவற்றை நம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் .
ஒரு திமிங்கிலம் தண்ணீருக்கு வெளியே குதிக்கவேண்டும் என்று வைத்துக்கொள்வோம் அத்தனை பெரிய மிருகம் தன்னுடைய உடம்பைத் தூக்கிக்கொண்டு தானாகக் குதிக்காது . நாம்தான் அதைப் பழக்கப்படுத்தவேண்டும் .
இதற்கான பயிற்சி தண்ணீருக்கு உள்ளே தொடங்குகிறது . திமிங்கிலம் நீந்துகிற குளத்தின் மத்தியில் ஒரு கயிற்றைக் கட்டுகிறார்கள் . திமிங்கிலம் அந்தக் கயிற்றுக்கு மேலேயும் நீந்தலாம் , கீழேயும் நீந்தலாம் .
இப்போது , ஒவ்வொருமுறை திமிங்கிலம் கயிற்றுக்கு மேலே நீந்தும்போதும் , அதற்கு ஒரு மீன் பரிசாகக் கொடுக்கப்படுகிறது . கயிற்றுக்குக் கீழே நீந்தினால் எந்தப் பரிசும் கிடையாது .
சீக்கிரத்திலேயே , திமிங்கிலத்துக்கு விஷயம் புரிந்துவிடுகிறது . பசி எடுக்கும்போதெல்லாம் கயிற்றுக்கு மேலே நீந்தி மீனைப் பரிசாகப் பெற்றுக் கொள்கிறது .
ஆனால் , அந்தத் திமிங்கிலத்துக்குத் தெரியாத விஷயம் , அதன் பயிற்சியாளர் ஒவ்வொரு நாளும் அந்தத் கயிறை அவிழ்த்துக் கொஞ்சம் உயரத்தில் கட்டுகிறார் . இதன்மூலம் மெல்லமாக அந்தத் திமிங்கிலம் மேலே மேலே சென்று நீந்தப் பழகுகிறது .
கொஞ்ச நாள் கழித்து கயிற்றைத் தண்ணீர்ப் பரப்புக்கு மேலே கட்டுகிறார்கள் . இப்போது , மீன் ஆசை கொண்ட திமிங்கிலம் தானாகக் கயிற்றின்மீது தாண்டிக் குதிக்கிறது . அதேபோல் முரண்டு பிடிக்கும் திமிங்கிலங்களை கட்டாயப்படுத்துவதில்லை . விட்டுப்பிடிக்கிறார்கள் . அதன் விருப்பத்துக்கேற்ப விளையாடவிட்டு , பிறகு தங்கள் பயிற்சியை செய்ய வைக்கிறார்கள் .
--- கென்ப் பிளான்சார்ட் . தமிழில் என் . சொக்கன் , குமுதம் 29 - 07 - 2009 .

No comments: