Thursday, November 12, 2009

கோயில் செய்திகள் .

பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் மூலவரை ரத்னவீதி உற்சவத்தில் நாராயணனாகவும் , ஸ்நானவேதி உற்சவத்தில் விநாயகராகவும் , ஒன்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நவகுலேவரா உற்சவத்தில் சிவபெருமானாகவும் , சயனத்திருவிழாவில் சக்தி தேவியாகவும் , ரதோற்சவத்தில் சூரிய பகாவானாகவும் பாவித்து கொண்டாடுவார்கள் . ஒரே தெய்வத்தை இவ்வாறு பல பாவனைகளில் வழிபடுவது பூரி தலத்தில் மட்டும்தான் .
பொதுவாக சிவபெருமான் தன் வலக்கரத்தில் மழுவையும் , இடக்கரத்தில் மானையும் ஏந்தியிருப்பதுதான் வழக்கம் . ஆனால் , ' வலங்கைமான் ' திருத்தலத்தில் , வலக்கரத்தில் மானும் , இடக்கரத்தில் மழுவும் ஏந்திக் காட்சி தருகிறார் ஈசன் .
* ஆந்திர மாநிலத்தில் ராஜ முந்திரியில் உள்ள விஷ்ணு ஆலயத்தில் 5 அடி உயர கம்பீரமான விஷ்ணு சிலையின் பின்புறம் மோகினி வடிவம் செதுக்கப்பட்டுள்ளது . அதுவும் மோகினியின் பின்புறத்த் தோற்றத்தை வடித்துள்ளார் சிற்பி . கொண்டை , அதில் கூந்தல் அணிகலன்கள் , சிற்றிடை நளினம் இப்படியுள்ளது மோகினியின் ஒயிலான தோற்றம் .
கோகர்ணத்தில் உள்ள சிவாலயத்தில் சிவனின் சிலை உள்ளது . இச்சிலையின் பின்புறம் ஒரு பூதத்தின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது . பூதராஜா சன்னதி எங்கின்றனர் இதனை .
--- விஜயலட்சுமி சுப்ரமணியம் ,-- துர்க்கா கண்ணன் , குமுதம் பக்தி ஸ்பெஷல் . நவம்பர் 1 - 15 , 2008 .

No comments: