Saturday, November 28, 2009

முன்னோர் வழிபாடு .

வேதவேள்விகளைப் புரிவதை விடவும் , கோயில் , குளங்களுக்குச் சென்று சுவாமி கும்பிடுவதை விடவும் முன்னோர்களை வழிபடுவது முக்கியம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன .
' மாதுர் தேவோ பவ ; பிதுர் தேவோ பவ ; ' -- என்பது சாஸ்திரத் தொடர் .
முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தந்தது தமிழ்நெறி . ஒருவன் தான் சம்பாதித்த பணத்தை ஆறு வகையாகப் பிரித்துக் கொண்டு செலவிட வேண்டும் என திருவள்ளுவர் கூறியிருக்கிறார் .
ஒரு பகுதி அரசனுக்குரிய வரி , தென்புலத்தார் , தெய்வம் , விருந்து , சுற்றம் , தன் சொந்தச் செலவுகள் என்று ஐந்து வகை . ஆக மொத்தம் ஆறு வகை .
இவற்றுள் தென்புலத்தார் என்பது தெற்கில் உள்ள பிதுர்லோகத்தில் வாழும் முன்னோர்களைக் குறிக்கும் . தெய்வ வழிபாட்டை விடத் தென்புலத்தார் வழிபாட்டுக்குத் திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுத்ததைத் " தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை " என்ற இந்தக் குறள் காட்டுகிறது
--- புலவர் . வே . மகாதேவன் . தினமலர் , வாரமலர் . ஜூலை 19 , 2009 .

No comments: