Thursday, October 15, 2009

சூப்பர் .

* நைஜீரியவில் அந்த நாட்டு தேசியகீததத்தைப் பாடத் தெரியாவிட்டால் பிரம்மச்சாரியாக இருந்துவிட வேண்டியதுதான் . திருமணப் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்ளும் முன்பு மாப்பிள்ளையும் பெண்ணும் தேசியகீதத்தை கட்டாயம் பாடியே ஆகவேண்டுமாம் .
* ' A BROWN FOX JUMPED OVER THE LAZY DOGS QUICKLY ' இந்த ஆங்கில வாக்கியத்தில் ' A ' முதல் ' z ' வரை எல்லா எழுத்துக்களும் உள்ளன .
*தூங்கா நகரம் என்னும் சிறப்பு மதுரைக்கு உள்ளது . 24 மணி நேரமும் பல உணவகங்களும் , கடைகளும் திறந்தேயிருக்கும் . ஒரு கல்யாணத்திற்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் அந்த இரவு நேரத்தில் வாங்க முடியும் .
* அமெரிக்காவில் ஜனாதிபதி உட்ரோ வில்சன் படம் அச்சிடப்பட்ட ஒரு லட்சம் டாலர் கரன்சி உள்ளது . உள்நாட்டு பாதுகாப்புத் துறையும் , மற்றும் நாட்டின் கருவூலத் துறையும் மட்டுமே இந்தப் பெரிய கரன்சியை பயன்படுத்த அனுமதி உள்ளது . பொதுமக்களுக்கு அனுமதியில்லை .
* ஒருவருக்கு பயம் ஏற்படும்போது அவர் முகத்தில் தோலுக்கு அடியில் செல்லும் இரத்தக் குழாய்களில் ரத்தம் செல்வது தடை படுவதால் முகம் வெளுத்து விடுகிறது .
* முதன் முதலில் தபால்களை குதிரைகளில் எடுத்துச் சென்று பட்டுவாடா செய்தனர் . அப்படிச் செல்பவர்கள் , வழியில் ஆங்காங்கே ஓய்வெடுத்துக் கொண்டு சென்றார்கள் . அந்த இடங்களில் கம்பங்கள் ( போஸ்ட் ) நடப்பட்டு இருக்கும் . அதனாலேயே , தபாலுக்கு ' போஸ்ட் ' என்ற ஆங்கிலப்பெயர் ஏற்பட்டதாம் .
* நம் உடலில் ஓய்வில்லாமல் வேலை செய்யும் உறுப்பு இதயம் என்று நாம் நினைக்கிறோம் . ஆனால் , இதயம் சுருங்கும் போது மட்டும்தான் வேலை செய்கிறதாம் . விரியும் போது ஓய்வெடுக்கிறதாம் . அதன்படி பார்த்தால் , ஒருநாளில் 15 மணி நேரம் ஓய்வெடுக்கிறதாம் . 9 மணி நேரம் தான் வேலை செய்கிறதாம் .
* ஜவஹர்லால் நேரு அவர்கள் ' மாடர்ன் ரிவ்யூ ' என்ற ஆங்கிலப் பத்திரிகையில் சாணக்கியா என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதியுள்ளார் .
* 1624 - ல் பிறந்த ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்ததற்கு முன்பே , 1114 - ல் பிறந்த இந்திய விஞ்ஞானி பாஸ்கராச்சாரியார் ' சித்தாந்த சிரோமணி' நூலில் புவியீர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்து குறிப்பிட்டிருக்கிறார் .
* ஆக்டோபஸ் அதன் வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் கருத்தரிக்கும் .
* ஜலதோஷம் பிடித்தவர் தும்மினால் 80,000 வைரஸ்கள் வெளிப்படுகின்றனவாம் .
* மயில் எத்தனை குஞ்சு பொரித்தாலும் , அதன் முதல் குஞ்சுக்கு மட்டுமே தலையில் கொண்டை வளருமாம் .
* ஒரு கிராம் தங்கத்தை 2 மைல் நீளமுள்ள கம்பியாக நீட்ட முடியுமாம் .
--- பாக்யா இதழ்

No comments: