Saturday, October 31, 2009

மம்மி !

பெண் பெயரில் ஆண் . ' மம்மி ' யிலும் குழப்பம் .
நியூயார்க் , ஜூன் 29 - 2009 .
புரூக்ளின் நகர அருங்காட்சியகத்தில் பெண் பெயரில் பராமரிக்கப்பட்ட மம்மியை ஸ்கேன் செய்த போது , அது ஆண் என்று தரியவந்தது .
அமெரிக்காவின் புரூக்ளின் நகர அருங்காட்சியகத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 4 எகிப்திய ' மம்மி ' க்கள் பராமரிக்கப்பட்டு வந்தது . இதில் ' லேடி ஓர் ' என்று பெயரிடப்பட்ட மம்மியின் மீது பெண் என்று எழுதப்பட்டு இருந்தது . கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக அந்த ' மம்மி ' பெண் என்று கருதப்பட்டு வந்தது ..
இந்நிலையில் , நியூயார்க் நகரின் புறநகர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் , அந்த மம்மிகளை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தினர் . அப்போது , ' லேடி ஓர் ' என்ற பெண் பெயரில் பராமரிக்கப்பட்டு வந்தது ஆண் மம்மி என்று தெரிய வந்தது .
எகிப்திய மன்னர்கள் இறந்த போது அவர்கள் உடலை பாடம் செய்து , ' மம்மி ' யாக்கிய முறை பற்றியும் , எகிப்தியர்கள் வாழ்க்கை முறை பற்றியும் ஆய்வு செய்வதற்காக ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது , பெண் பெயரில் இருந்தது ஆண் மம்மி என்று தெரிய வந்தது .
இது குறித்து அமெரிக்காவின் நார்த் ஷேர் பல்கலைக்கழக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் மிச்செல் பின்டோ கூறுகையில் , ' மம்மியின் எலும்புக்கூடு மற்றும் அவற்றைப் பற்றிய கூடுதல் விபரங்களைத் தெரிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட சோதனையில்தான் , பெண் பெயரில் இருந்தது ஆண் மம்மி என்று தெரியவந்தது ' என்றார் .
--- தினமலர் , 29 - 06 - 2009 .

Friday, October 30, 2009

அதிசய மனிதர் !

ஜி.டி. நாயுடு ( 23 - 03 - 1893 --- 04 - 01 - 1974 )
ஒன்றரை ஆண்டுக் காலமாக உள்ளே பூட்டிக் கிடந்த துப்பாக்கி ஒன்று வேலை செய்கிறதா என்று சோதிக்க விரும்பிய ஜி . டி . நாயுடு , ஒரு வாழை மரத்தின் அடிப்பாகத்தில் குறி பார்த்துச் சுட்டார் . குண்டு,வாழை மரத்தைத் துளைத்துக்கொண்டு மறு பக்கம் போய் விழுந்தது .
வாழை மரத்தில் விழுந்த துளை நாயுடுவின் சிந்தனையைத் தூண்டியது . உடனே ரொட்டிகளைக் கொண்டு வரச் சொல்லி , அந்தத் துளையில் அடைத்தார் . மேலும் சில வாழைகளைத் துளைத்து ஒன்றில் சாணம் , இன்னொன்றில் கோமியம் , மற்றொன்றில் மாமிசம் இவற்றைத் திணித்து அந்த வாழை மரங்களின் வளர்ச்சியில் ஏதேனும் மாறுதல் காண்கிறதா என்று கண்காணித்து வந்தார் . மரங்களும் , காய்களும் இரண்டு மடங்கு பெரிதாக வளர்ந்தன . எதேச்சையான ஆராய்ச்சி எதிர்பாராத பலனை அளிக்கவே , நாயுடு தமது ஆராய்ச்சியை மேலும் தொடர்ந்து , ஆரஞ்சு , பப்பாளி , பருத்தி போன்ற செடிகளையும் சோதனைக்கு உள்ளாக்கினார் . அதன் விளைவு : ' உலகிலேயே மிகச் சிறந்த பப்பாளி விளைவிக்கும் செப்பிடு வித்தைக்காரர் நாயுடு என்ற புகழ் அவருக்குக் கிட்டியது . ஜி . டி . நாயுடுவைச் சந்திக்கச் செல்கிறவர்கள் , அவர் தோட்டத்தில் விளையும் பப்பாளியைச் சாப்பிடாமல் தப்ப முடியாது .
பல ஆண்டுகளுக்கு முன் இவரால் கண்டுபிடிக்கப்பட்ட ' எலெக்ட்ரிக் ஸேஃப்டி ரேஸர் ' மேனாட்டு விஞ்ஞானிகள் பலரால் பாராட்டப்பட்டது .
தாவர இயல் , பொறி இயல் , மருத்துவம் , சோதிடம் இவ்வளவையும் அறிந்துள்ள நாயுடுவின் முழுப் பெயர் துரைசாமி . இவரை , ' இலக்கண துரைசாமி ' , ' மருத்துவ துரைசாமி ' , ' சோதிட துரைசாமி ' என்றும் அழைப்பதுண்டு . ஆயினும் சோதிடத்தில் இவருக்குத் துளியும் நம்பிக்கை கிடையாது .
ஜி . டி . நாயுடு ஆங்கிலம் அதிகம் படித்தவரில்லை . ஆனாலும் , பல முறை உலக நாடுகளைச் சுற்றியதன் மூலம் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் , உரையாடவும் அனுபவம் பெற்றுள்ள இவருடைய ஆங்கிலப் புலமையைக் கண்டு வியக்காதவர்களே இல்லை .
1893 - ல் கலங்கல் கிராமத்தில் உழவரின் மகனாகப் பிறந்த இவர் தம்முடைய சலியாத உழைப்பால் உயர்ந்து , தென்னகத்தின் பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார் .
--- ஆனந்தவிகடன் , 10 - 06 - 2009 .

Thursday, October 29, 2009

உறவு முக்கோணம் !

மனோதத்துவ அறிஞர்கள் , மனித உறவுகளில் எழும் சிக்கல்களைப் போக்கும் ஒரு சுலபமான வழியைக் கண்டுபிடித்தார்கள் . அதுதான் உறவு முக்கோணம் .
ஒரு முக்கோண வலையைக் கற்பனை செய்யுங்கள் . இந்த வலையின் ஒவ்வொரு கோணத்தின் நுனியையும் ஒரு மரத்தில் கட்டி இருப்பதாக கற்பனை செய்யுங்கள் . இந்த முக்கோண வலையின் ஒவ்வொரு கோணத்துக்கும் ஒரு பெயர் இடுங்கள் . ஒன்றின் பெயர் அன்பு ; மற்றொன்றின் பெயர் உண்மை ; மூன்றாவதன் பெயர் கருத்துப் பரிமாற்றம் . இதையே ஆங்கிலத்தில் Affinity , Reality , Communication என்று கூறுகிறார்கள் .
இந்த மூன்றும் வலுவாக ஒன்றை ஒன்று பிணைத்து நிற்கும்போது , பிரச்னைகள் எல்லாம் சுமூகமாகத் தீர்க்கப்படுகின்றன . இந்த உறவு முக்கோணம் எப்படிச் செயல்படுகிறது என்று பார்க்கலாம் .
மகன் ஒரு பெண்ணை விரும்புகிறான் . அப்பா எதிர்க்கிறார் . " என்னடா இது ! அவர்கள் சாதி என்ன , நம்ம சாதி என்ன ? அது எப்படி அங்கு போய்ப் பெண் எடுக்க முடியும் ? உனக்குப் புத்தி இருக்கா ? "
என்கிறாள் அம்மா .
இதன் விளைவாக , அப்பாவும் அம்மாவும் பையனுடன் பேசுவது இல்லை . இந்த மூவருக்கும் இடையே இருந்த ஒரே ஒரு தொடர் - கருத்துப் பரிமாற்றம் , எண்ணப்பரிமாற்றம் - பேச்சு - விடுபட்டுப் போக ,
அவரவர்கள் வழியே சரி என்று எண்ணி , அதிலே ஊறிப்போகிறார்கள் .
அதுவே , உறவு முக்கோணத்தை உணர்ந்தவர்கள் என்ன செய்வார்கள் ?
என்ன இருந்தாலும் , " அவன் நம் மகன் , அவனது நன்மைதான் நமது நன்மை " என்று அன்பால் கட்டுப்படுவார்கள் . " கீழ் சாதியாவது , மேல் சாதியாவது ! அவன் யாருடனாவது சந்தோஷமாக இருந்தால் சரிதான் ! இதோ பாருங்க ! அறியாத பிள்ளை அது . அதோடு பேசுங்க . என்ன விஷயம் , யாரு பொண்ணு என்னனு தெரிஞ்சுக்குவோம் . நல்லது கெட்டது எடுத்துச் சொல்லுவோம் ! " என்கிறார் தாய் .
கருத்துப் பரிமாற்றம் சிக்கல்களை அவிழ்க்கிறது . அன்புடன் கூறப்படும் உண்மைக் கருத்துக்கள் , மகனின் எண்ணத்தை மாற்றவும் செய்யலாம் .
--- எம்.எஸ். உதயமூர்த்தி .

Wednesday, October 28, 2009

தண்டனை வேண்டும் .

கடுமையான தண்டனை வேண்டும் .
பரஸ்பரம் சம்மதத்துடன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது டில்லி ஐக்கோர்ட் . இவர்களை இந்திய தண்டனைச் சட்டம் 377 பிரிவின் கீழ் தண்டிப்பது அடிப்படை உரினையை மீறியது ஆகும் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளது . இதில் அடிப்படை உரிமை என்ற பிரச்னைக்கே இடமில்லை .
விரும்பியபடி ஆடை அணிவது ஒருவருடைய அடிப்படை உரிமையாகும் . ஆனால் , ஆடையே அணியாமல் பொது இடங்களில் நடமாடுவது அடிப்படை உரிமை இல்லை . மிருகங்கள்கூட ஓரினச் சேர்க்கையில் ஈடுபடாதபோது இதற்கு உரிமை கோருபவர்கள் மிருகங்களைவிட கேவலமானவர்கள் . இது நாகரிக மக்களின் சமுதாயப் பிரச்னை . இந்த அநாகரிக அனுமதிக்கு சுப்ரீம் கோர்ட் உடனே தடை விதிப்பதுடன் இதற்கான தண்டனையைக் கடுமையாக்க வேண்டும் .
--- கே. கே. வேதபுரி , காவேரிப்பாக்கம் . தினமலர் .17 - 07 - 2009

Tuesday, October 27, 2009

அப்படியா !

* வாத்து ' க்வாக் ' சத்தத்தை வெளியே விடுவது இல்லை . உள்வாங்கி எழுப்பும் ஒலி அது ! எதிரொலி ஏற்பட ஒலியின் அலைகள் வெளிப்பட வேண்டும் . அதனால் , வாத்துகள் எழுப்பும் ' க்வாக் ' சத்தம் எதிரொலிப்பது இல்லை .
*சில ஹீரோக்களின் தொப்புளுக்கும் , மார்புக்கும் இடையே , ' ஸ்பீட் பிரேக்கர்ஸ் ' மாதிரி இருக்கும் தசைகளின் பெயர்தான் ' சிக்ஸ் பேக் '. இடது மார்பில் மூன்று , வலது மார்பில் மூன்று .
* தன் உடம்பை விற்கும் ஆண்களுக்கு ' Gigolo ' என்று பெயர் . பொதுவாக , Call boys என்று அழைக்கப்படுகிறார்கள் . புரியும்படி சொன்னால் ' விலைமகன் '

Monday, October 26, 2009

மரணம் .

" மரணம் என்பது முற்றுப்புள்ளியா ?"
" எழுத்தாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் அது கால்புள்ளிதான் . ஜெயகாந்தன் ஒரு முறை சொன்னார் . ' பிறக்கும் முன்பு நான் இறந்திருந்த்தேன் . இறந்த பின்பு நான் வாழ்ந்திருப்பேன் !'"
--- மா. செ. சரவணகுமார் , சென்னை - 17 .
மனித உறவுகள் .
மனித உறவுகளைப் பற்றி எழுதும் அறிஞர்கள் முக்கியமான மூன்று குறைபாடுகள் உறவுக்குக் குறுக்கே நிற்பதாகக் குறிப்பிடுகிறார்கள் .
பிறர் சொல்வதை நாம் கவனமாகக் கேட்பதில்லை ; பிறர் சொல்வதன் முழு அர்த்தத்தையும் நாம் புரிந்து கொள்வதில்லை ; தவறு ஏற்படும்போது நாம் அதை உடனே ஏற்றுக் கொள்வதில்லை .
--- எம்.எஸ். உதயமூர்த்தி .ஆனந்தவிகடன் , 15 - 07 - 2009.

Sunday, October 25, 2009

ஐ. ஏ. எஸ். தேர்வு .

2002 ஐ. ஏ. எஸ் . தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று . ' நீங்கள் கலெக்டர் ஆகிவிட்டீர்கள் . ஒரு படத்தைச் சுவரில் மாட்ட வேண்டும் . ஆனால் , சுவரில் பூசப்பட்டு இருக்கும் சிமென்டோ ஆணி அடிக்க முடியாதது . நீங்கள் என்ன செய்வீர்கள் ?'
கேள்விக்கான பதில் ....' ஸ்டிக்கர் மூலம் ஒட்டலாம் ; அந்த இடத்தில் மட்டும் சுவரைப் பெயர்த்து எடுத்து மரத்தால் ஆன சட்டத்தைப் பொருத்தலாம் ' என்றெல்லாம் பதிலுக்குச் சுவரில் முட்டிக்கொண்டீர்களா ? அப்படியெல்லாம் யோசித்தால் நீங்கள் எப்படி ஐ. ஏ. எஸ். ஆக முடியும் ? நீங்கள் கலெக்டர் . சுவரில் படம் மாட்டுவது உங்கள் வேலை இல்லை . அலுவலக உதவியாளரிடம் அந்த வேலையை ஒப்படைத்து விடுங்கள் . தனக்கான தகுதி என்னவென்று தெரியாமல் இருப்பதுதான் நம்முடைய பல தோல்விகளுக்குக் காரணம் .
---ரீ. சிவகுமார் , ( நேற்று...இன்று...நாளை ! ) ஆனந்தவிகடன் , 08 - 07 - 2009 .

Saturday, October 24, 2009

வித்தியாசம் !

மருத்துவர் ஒருவர் கடற்கரைக்குக் காற்று வாங்க வந்திருந்தார் . கடற்கரையில் அலைகள் அடித்து மீளும் இடத்தில் சில நட்சத்திர மீன்கள் கரை ஒதுங்கி உயிருக்குத் தத்தளித்துக்கொண்டு இருந்தன . அங்கே ஒரு சிறுவன் அலையோரத்தில் அப்படி ஒதுங்கிய மீன்களைப் பொறுக்கி , மீண்டும் தண்ணீரில் எறிந்துகொண்டு இருந்தான் .
" தம்பி , எதற்காக உன் நேரத்தை வீணடிக்கிறாய் ? நீ 10 மீன்களைத் தண்ணீரில் எடுத்து விடுவதற்குள் இன்னும் 100 மீன்கள் கரை ஒதுங்குகின்றன . உன் செயல் பெரிய வித்தியாசம் எதயும் செய்துவிட முடியாது என்று புரியவில்லையா ?" என்று டாக்டர் கேட்டார் .
" பெரிய வித்தியாசமா இல்லையா என்று தண்ணீருக்குத் திரும்பிய மீன்களிடம் கேட்டுப் பாருங்கள்.... புரியும் " என்றான் சிறுவன் .
டாக்டருக்குப் பொட்டென்று மண்டையில் அடித்தது போல் விளங்கியது .
-- சத்குரு ஜக்கி வாசுதேவ் , ஆனந்தவிகடன் , 01 - 07 - 2009 .

Friday, October 23, 2009

கவிதை .

" கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும் ?"
" வார்த்தை சிக்கனமாக , அர்த்தத்தில் வளமாக இருக்க வேண்டும் . உதாரணத்துக்கு காசி ஆனந்தனின் நறுக்கு ஒன்று .
குப்பைத்தொட்டி !
அலுவலகத்தில்
இருக்கிறவனுக்கு
இது குப்பைத்தொட்டி .
குப்பை பொறுக்கி
வாழ்பவனுக்கு
இது அலுவலகம் ! "
--- த. சீ. பாலு, சென்னை - 73. ஆனந்தவிகடன் , 01 - 07 - 2009 .

Thursday, October 22, 2009

பார்வை வெளிச்சம் .

சென்ற ஆண்டு ஒரு நாளிதழில் நாகர்கோவிலைச் சேர்ந்த 14 வயதான மாஷா நஸிம் என்ற மாணவியின் கண்டுபிடிப்பு பற்றிய செய்தி வந்தது . உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டிய நல்ல திட்டம் என்று தோன்றியது . இன்று வரை அந்தத் திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை .
ரயிலில் உள்ள கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் மலக்கழிவுகள் தண்டவாளம் எங்கும் விழுவதால் நோய்க் கிருமிகள் அதிகம் பரவுகின்றன . இதை மாற்றுவதற்கான புதிய கழிப்பறை ஒன்றினை மாஷா வடிவமைத்திருக்கிறார் . இவரது அப்பா காஜா நஜ்முதீன் ஓர் அரசு ஊழியர் .
மாஷா உருவாக்கிய கழிப்பறை மிக எளிதானது . கழிப்பறையில் சேரும் கழிவுகள் ஒரு தொட்டியில் சேகரிக்கப்படும் . அவை ஒவ்வொரு ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றதும் ஒரு பொத்தானை அழுத்தினால் மொத்தமாக நடமாடும் கழிவு சேகரத் தொட்டி ஒன்றின் வழியே வெளியே எடுத்துச் செல்லப்பட்டு , சுத்தம் செய்யப்பட்டுவிடும் .
இந்தத் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வரவேறு , உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்ரு பரிந்துரை செய்திருக்கிறார் . ரயில்வே உயர் அதிகாரிகள் பரிசீலனை செய்வதாகச் சொல்லி இருந்தார்கள் . ஆனால் , இன்று வரை அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவே இல்லை .
உலகெங்கும் சுகாதாரமான கழிப்ப்றைகள் உருவாக்குவதற்காக முழு நேரமாக இயங்கி வருகிறது . World Toilet Organization . இந்த நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக World Toilet College ஒன்றினை சிங்கப்பூரில் ஆரம்பித்து இருக்கிறது . இந்த நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் கருத்தரங்கில் மாஷாவின் கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டு விருது பெற்று இருக்கிறது . மாஷாவின் ஈடுபாடு மிகுந்த பாராட்டுக்கு உரியது .
--- எஸ் . ராமகிருஷ்ணன் ( சிறிது வெளிச்சம் ! ) , ஆனந்தவிகடன் , 08 - 07 - 2009 .

Wednesday, October 21, 2009

தள்ளுபடி செய்திடலாமே !

இந்தியா சுதந்திரம் பெறும்போது நடந்த பாகப்பிரிவினையின்படி இந்தியாவுக்கு பாகிஸ்தான் 300 கோடி ரூபாய் தரவேண்டும் என ஒப்பந்தம் நிறைவேறியதாக சமீபத்தில் வெளியான செய்தியை பத்திரிகைகளின் வாயிலாக அறிய நேர்ந்தது .
இந்த ஒப்பந்தப்படி பாகிஸ்தான் 62 ஆண்டுகள் கடந்தும் பணம் செலுத்தவில்லை . அதனால் ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் இந்த தொகை பற்றி பார்லி., யில் அறிவிக்கப்பட்டு வருகிறது எனவும் அறிய முடிகிறது .
பாகப்பிரிவினையின்போது இந்தியா கொடுக்க வேண்டிய பங்குத்தொகையை உடனே செலுத்தி தன் உயரிய பண்பாட்டை நிரூபித்துள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும்
ஆனால் , பாகிஸ்தான் தன் கடமையை செய்யவில்லையே என்ற ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை .. அது அவர்கள் பண்பாடு .
ஆக , வராக்கடன்கள் என பல ஆயிரக்கணக்கான கடன் பாக்கிகளை ரத்து செய்து வரும் இந்திய அரசு இனி என்றைக்குமே வராது என தெரிந்துபோன பாகிஸ்தான் பங்குப் பணத்தையும் ரத்து செய்வதில் என்ன இடையூறு இருக்க முடியும் .
--- குப்பிலியான்பாலா , கும்பகோணம் . தினமலர் , 12 - 07 - 2009 .

Tuesday, October 20, 2009

ஒருமைப்பாடு .

ஒரு மகானைச் சந்திக்க இளைஞர்கள் சிலர் சென்றார்கள் . " உங்களை மகான் என்கிறார்களே .... அப்படி எங்களை விட உங்களிடம் என்ன சிறப்புத் தன்மை இருக்கிரது ?" என்று கேட்டார்கள் .
" நான் சாப்பிடுகிறேன் , படிக்கிறேன் , தூங்குகிறேன் , உடற்பயிற்சி செய்கிறேன், பிரார்த்தனை செய்கிறேன் " என்றார் மகான் .
" இவை எல்லாவற்றையும் நாங்களும்தான் செய்கிறோம் . பிறகு எப்படி நீங்கள் உயர்ந்தவராகக் கருதப்படுகிறீர்கள்? " என்று இளைஞர்கள் மீண்டும் கேட்டார்கள் .
அப்போதுதான் மகான் சொன்னார் , " இரண்டு செயல்களும் ஒரே மாதிரியாகத் தெரியலாம் . ஆனால் , வித்தியாசம் இருக்கிரது . நான் சாப்பிடும்போது சாப்பிட மட்டுமே செய்கிறேன் . தூங்கும்போது தூங்க மட்டுமே செய்கிறேன் . படிக்கும்போது படிக்க மட்டுமே செய்கிறேன் , பிராத்தனை செய்யும்போது வேறு சிந்தனைக்கு இடமின்றி பிராத்தனை மட்டுமே செய்கிறேன் . செய்கிற செயலில் மட்டும் மனத்தை ஒருமுகப்படுத்துகிறேன் . நீங்கள் எப்படி ? " என்று கேட்டார் மகான் .
தங்கள் மனம் அடிக்கடி அலைபாய்வதை அப்போதுதான் இளைஞர்கள் உணர்ந்தார்கள் . வெற்றிக்கு வேண்டியது ஒருமைப்பாடு .
ஒரு நேரத்தில் ஒரு பணி . ஒரு நேரத்தில் ஒரு செயலை மட்டுமே செய்வது மனஒருமைப்பாட்டிற்கு மிகவும் அடிப்படையானதாகும் . அதில் ஒன்றிச் செய்வது மிகவும் முக்கியம் . ' நாம் ஒரு நாளைக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணங்களை எண்ணுகிறோம் ' என்று அறிஞர்கள்
கூறுகின்றனர் . மனம் அமைதியாக இருந்தால் எண்ணங்கள் குறையும் . எண்ணங்கள் ஒருமுகப்படுத்திச் செயலாற்றினால் மிகப் பெரும் ஆற்றல் கிடைக்கும் .
மன ஒருமைப்பாடு ' மனத்தை நிலைப்படுத்த தனித்தனியாக எதையும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை . உன் ஆற்றலை செயலில் மனத்தை முழுவதும் குவிக்க முயன்றால் போதும் . குளிப்பது , உண்பது , படிப்பது , பயில்வது , உலவுவது , உரையாடுவது , படக்காட்சியைப் பார்ப்பது ஆகிய எந்தச் செயலாயிருந்தாலும் முழு முனைப்போடு அதில் மனத்தை ஈடுபடுத்து . நீ வெற்றி பெறுவாய் ' என்கிறார் ஜேம்ஸ் ஆலன் .
' மனத்தை அடக்க நினைத்தால் அலையும் . மனத்தை அறிய நினைத்தால் அடங்கும் ' என்றார் வேதாத்ரி மகரிஷி . மேலாகக் கேட்பதற்கு மிகவும் எளிதாகத் தோன்றலாம் . ஆனால் , செயல்படுத்திப் பாருங்கள் . அப்போதுதான் அதன் சிரமம் தெரியும் .
எப்போது நீங்கள் எதுவாக இருக்கிறீர்களோ .... அப்போது நீங்கள் அதுவாகவே இருங்கள் . -- இதுதான் மன ஒருமைப்பாட்டின் தாரக மந்திரம் .
--- இளசை சுந்தரம் , இலக்கியப்பீடம் . ஜூன் 2009 . இதழ் உதவி : க. கண்ணன் , செல்லூர் .

Monday, October 19, 2009

சத்தியச் சுரங்கம் .

நாமதேவர் , கபீர் போன்ற மகான்கள் மனிதர்களைப் போல ஜனிக்கவில்லை . மாறாக , ஆற்றில் கண்டெடுக்கப்பட்டார்கள் . ஷீர்டி சாயிபாபாவும் அப்படித்தான் திடீரெனக் காணப்பட்டார் .
தாயின் வயிற்றில் கர்ப்பம் தரித்துப் பிறக்காமல் உலகில் தாமாகவே தோன்றும் மகான்களின் தோற்றத்தை ' அயோனி ஜன்மம் ' என்பார்கள் .
---எஸ். லெஷ்மி நரசிம்மன் , இலக்கியப்பீடம் . ஜூன் 2009 .

Sunday, October 18, 2009

குழந்தை !

குழந்தைக்கு
தாயின் இடுப்பே இருக்கை
தோள்களே தொட்டில்
கால்களே கழிவறை !
--- வி . மருதவாணன் , ஆனந்தவிகடன் , 24 - 06 - 2998 .
சிறு புதுக்கவிதை !
" பெரிய்ய்ய இதிகாசக் கதையைச் சிறு புதுக்கவிதையில் சொல்லிவிட முடியுமா?"
" ஒன்றல்ல இரண்டு கவிதைகளை எடுத்துக்காட்டலாம் .
' நெருப்பின் நாக்கு
நிரூபித்த கற்பை
வெளுப்பவனின் நாக்கு
அழுக்காக்கிவிட்டது ! "
--- அப்துல்ரகுமான் .
' அப்பனுக்கு
ஆயிரம் மனைவிகள்
எந்தப் பிரச்னையும் இல்லை ;
மகனுக்கு
ஒரே ஒரு மனைவி
ஆயிரம் பிரச்னைகள் ! "
--- கபிலன் .
--- மதிபாரதி , சென்னை - 91 . ஆனந்தவிகடன் 24 - 06 - 2009 .

காசியில் தீபாவளி .

காசியில் விஸ்வநாதரும் , விசாலாட்சியும் பிரசித்தம் . அதுபோலவே அன்னபூரணி ஆலயமும் விசேஷமான ஒன்று . நடுவிலே பார்வதிதேவி அன்னபூரணியாக எழுந்தருளியிருக்கிறாள் . இரண்டு பக்கங்களில் ஒருபுறம் லட்சுமி , இன்னொரு புறம் பூதேவி இருக்கிறார்கள் . அன்னபூரணின் இடது கையில் அமுத கலசம் அலங்கரிக்கிறது வலது கையில் கரண்டி ஏந்தியிருக்கிறாள் .
அன்னபூரணி திருக்கோலத்தை முழுமையாக பார்த்துவிட முடியாது . உடம்பு முழுவதும் வெள்ளிக்கவசமிட்டு மறைத்திருப்பார்கள் . சந்நிதிக்கு எதிர்புறம் இரண்டு ஓட்டைகள் . ஒன்றுக்கு பிட்சத்துவாரம் என்று பெயர் . இன்னொன்று தர்மத்துவாரம் எனப்படும் . இந்த துவாரங்களின் வழியாகத்தான் அன்னபூரணியைத் தரிசிக்க முடியம் . தீபாவளியை ஒட்டி அன்னபூரணியை முழுமையாகத் தரிசிக்கலாம் . தங்கத்தாலான அன்னபூரணிக்கு நரகசதுர்த்தியின் முதல் நாள் அதாவது தனதிரயோதசி அன்று மாலை ரத்னக்கிரீடம் சூட்டி வகை வகையான அணிகலன்களால் அலங்காரம் செய்வார்கள் .
பொன்னும் , மணியும் ஜொலிக்கும் நிலையில் அம்பாள் அலங்கரிக்கப்படுவாள் . அன்று மாலை திரை திறந்து பூஜை செய்து திரும்பவும் திரை போட்டுவிடுவார்கள் . மறு நாள் சதுர்த்தசி . அமாவாசை, பாட்டிமை ஆகிய மூன்று நாட்களும் தங்க அன்னபூரணியை முழுமையாகத் தரிசிக்கலாம் .
தீபாவளி அன்று காசியில் சுவாமி புறப்பாடு உண்டு . தேரில் சுவாமி திருவீதிக்கு வருவார் . அன்று எல்லாருக்கும் லட்டு பிரசாதம் கொடுப்பார்கள் . சுவாமி கோயிலுக்குத் திரும்பும் போது தேரில் ஒரு லட்டும் இருக்காது . தெருவெல்லாம் இனிமை கமழும் நாள் அது .
--- தனமலர் . பக்திமலர் . 15 - 10 - 2009 .

Saturday, October 17, 2009

மகாவீரர் .

ஸ்ரீவர்த்தமான மகாவீரரால் சமணமதம் தோற்றுவிக்கப்பட்டது என்பார்கள் .
அவர் ஒருநாள் இரவு தன்னைச் சுற்றி தீபங்களை ஏற்றிவைத்து சீடர்களை இறைவனை தியானிக்குமாறு சொன்னார் . தானும் தியானத்தில் ஆழ்ந்தார் .
மறுநாள் காலை சீடர்கள் பார்க்கும்போது அவர் இயற்கை எய்தியிருந்தார் . அந்தநாளே தீபாவளி .
--- தினமலர் . பக்திமலர் . 15 - 10 - 2009 .

Friday, October 16, 2009

நெப்போலியத் தூக்கம் .

பகல் தூக்கத்தை நெப்போலியன் தூக்கமென்று சொல்வார்கள் . காரணம் , இவர் பகலில் தவறாமல் சிறிது நேரமாவது தூங்குவார் . சிறு துயில் அவருக்கு விருப்பமானது . அதனால்தான் பகலில் போடும் தூக்கத்தை " நேப் " என்கிறார்கள் . இது நெப்போலியன் பெயரின் சுருக்கும் முதல் மூன்று எழுத்துக்களே . பகலில் சிறிது நேரம் ( முப்பது நிமிடம் ) தூங்குவது அடுத்துச் செய்யப்போகும் தொழிலைத் திறம்படச் செய்ய உதவும் என்பது ஆய்வாளர்களின் முடிவு .

Thursday, October 15, 2009

சூப்பர் .

* நைஜீரியவில் அந்த நாட்டு தேசியகீததத்தைப் பாடத் தெரியாவிட்டால் பிரம்மச்சாரியாக இருந்துவிட வேண்டியதுதான் . திருமணப் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்ளும் முன்பு மாப்பிள்ளையும் பெண்ணும் தேசியகீதத்தை கட்டாயம் பாடியே ஆகவேண்டுமாம் .
* ' A BROWN FOX JUMPED OVER THE LAZY DOGS QUICKLY ' இந்த ஆங்கில வாக்கியத்தில் ' A ' முதல் ' z ' வரை எல்லா எழுத்துக்களும் உள்ளன .
*தூங்கா நகரம் என்னும் சிறப்பு மதுரைக்கு உள்ளது . 24 மணி நேரமும் பல உணவகங்களும் , கடைகளும் திறந்தேயிருக்கும் . ஒரு கல்யாணத்திற்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் அந்த இரவு நேரத்தில் வாங்க முடியும் .
* அமெரிக்காவில் ஜனாதிபதி உட்ரோ வில்சன் படம் அச்சிடப்பட்ட ஒரு லட்சம் டாலர் கரன்சி உள்ளது . உள்நாட்டு பாதுகாப்புத் துறையும் , மற்றும் நாட்டின் கருவூலத் துறையும் மட்டுமே இந்தப் பெரிய கரன்சியை பயன்படுத்த அனுமதி உள்ளது . பொதுமக்களுக்கு அனுமதியில்லை .
* ஒருவருக்கு பயம் ஏற்படும்போது அவர் முகத்தில் தோலுக்கு அடியில் செல்லும் இரத்தக் குழாய்களில் ரத்தம் செல்வது தடை படுவதால் முகம் வெளுத்து விடுகிறது .
* முதன் முதலில் தபால்களை குதிரைகளில் எடுத்துச் சென்று பட்டுவாடா செய்தனர் . அப்படிச் செல்பவர்கள் , வழியில் ஆங்காங்கே ஓய்வெடுத்துக் கொண்டு சென்றார்கள் . அந்த இடங்களில் கம்பங்கள் ( போஸ்ட் ) நடப்பட்டு இருக்கும் . அதனாலேயே , தபாலுக்கு ' போஸ்ட் ' என்ற ஆங்கிலப்பெயர் ஏற்பட்டதாம் .
* நம் உடலில் ஓய்வில்லாமல் வேலை செய்யும் உறுப்பு இதயம் என்று நாம் நினைக்கிறோம் . ஆனால் , இதயம் சுருங்கும் போது மட்டும்தான் வேலை செய்கிறதாம் . விரியும் போது ஓய்வெடுக்கிறதாம் . அதன்படி பார்த்தால் , ஒருநாளில் 15 மணி நேரம் ஓய்வெடுக்கிறதாம் . 9 மணி நேரம் தான் வேலை செய்கிறதாம் .
* ஜவஹர்லால் நேரு அவர்கள் ' மாடர்ன் ரிவ்யூ ' என்ற ஆங்கிலப் பத்திரிகையில் சாணக்கியா என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதியுள்ளார் .
* 1624 - ல் பிறந்த ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்ததற்கு முன்பே , 1114 - ல் பிறந்த இந்திய விஞ்ஞானி பாஸ்கராச்சாரியார் ' சித்தாந்த சிரோமணி' நூலில் புவியீர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்து குறிப்பிட்டிருக்கிறார் .
* ஆக்டோபஸ் அதன் வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் கருத்தரிக்கும் .
* ஜலதோஷம் பிடித்தவர் தும்மினால் 80,000 வைரஸ்கள் வெளிப்படுகின்றனவாம் .
* மயில் எத்தனை குஞ்சு பொரித்தாலும் , அதன் முதல் குஞ்சுக்கு மட்டுமே தலையில் கொண்டை வளருமாம் .
* ஒரு கிராம் தங்கத்தை 2 மைல் நீளமுள்ள கம்பியாக நீட்ட முடியுமாம் .
--- பாக்யா இதழ்

மகாவீரர் .

ஸ்ரீவர்த்தமான மகாவீரரால் சமணமதம் தோற்றுவிக்கப்பட்டது என்பார்கள் .
அவர் ஒருநாள் இரவு தன்னைச் சுற்றி தீபங்களை ஏற்றிவைத்து சீடர்களை இறைவனை தியானிக்குமாறு சொன்னார் . தானும் தியானத்தில் ஆழ்ந்தார் .
மறுநாள் காலை சீடர்கள் பார்க்கும்போது அவர் இயற்கை எய்தியிருந்தார் . அந்தநாளே தீபாவளி .
--- தினமலர் . பக்திமலர் . 15 - 10 - 2009 .

Wednesday, October 14, 2009

பருவம் அடையும் முன் !

'பருவம் அடையும் முன் ஒரு பெண் கருத்தரிப்பாள் ' எப்படி ?.
பருவம் அடைந்த பின்னர்தான் பெண் கருதரிப்பாள் என்றுதான் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் . ஆனால் , உண்மை அதுவன்று ! பெண் பருவம் அடைவதற்கு முன்பே கருதரிக்க முடியும் ! வியப்பாக இருக்கிறதா ? என்றாலும் உண்மை அதுதான் .
பெண் பருவம் அடைகிறாள் என்றால் , அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அவள் கருத்தரிக்க ( கருவுற ) தயாராகி விட்டாள் என்பதுதான் உண்மை . ஆம் . ஒரு பெண் பருவமடைந்ததாகச் சொல்கிறோமே அதற்குப் பதினைந்து நாள்களூக்கு முன் அப்பெண் ஆணோடு உடலுறவு கொண்டால் அவள் கருதரிப்பாள் .
கருவுறத் தயாராகி விட்ட பெண்ணுக்கு மாதம் ஒரு சினை அணு கருவாகி , கருவுறத் தயாராக இருக்கும் . அந்தச் சினை அணுவுடன் ஆணின் விந்தணு சேர்ந்தால் கரு உண்டாகும் . அவ்வாறு சேரவில்லையென்றால் , அந்தச் சினையணு சுமார் 15 நாள்கள் கழித்து சிதைந்து மாதவிலக்காக வெளிவரும் .
அப்படியென்றால் , ஒவ்வொரு மாதவிலக்கிற்கும் 15 நாள்களுக்கு முன் அவள் கருத்தரிக்கத் தயாராக இருக்கிறாள் என்று பொருள் .
அவ்வாறு நோக்கின் , ஒரு பெண் பருவமடைந்ததாக நாம் கூறும் முதல் மாத விலக்கிற்கு 15 நாள்களுக்கு முன்னமே அவள் கருத்தரிக்கத் தயாராய் உள்ளாள் என்பதே உண்மை .
மாதவிலக்கு என்பது , ஒரு பெண்ணின் சினையணுவுடன் சேர ஆண் விந்தணு கிடைக்காமையால் , அது 15 நாள் கழித்து சிதைந்து இரத்தப்பெருக்காக வெளிவருவதைக் குறிக்கும் . பருவமடைவது என்பது முதல் மாதவிலக்கு அவ்வளவே .
முதல் மாதவிலக்கு என்பது அவள் கருவுறவில்லை என்பதன் அடையாளமே தவிர , அதன்பின் தான் அவள் கருவுறுவாள் என்பதன் அடையாளம் அல்ல .
பருவமடைவதற்கு 15 நாள்களுக்கு முன்பே அவள் கருதரிக்க தாயார் . எனவே , ஒரு பெண் பருவம் அடையும் முன்பே கருதரிப்பாள் என்பதே உண்மை !
பருவமடைவதற்கு சரியாக 15 நாள்களுக்கு முன் ஒரு பெண் உடலுறவு கொண்டால் , அவள் கருதரிப்பாள் .
--- மஞ்சை வசந்தன் . பாக்யா , ஜூன் 12 - 18 ; 2009 .

Tuesday, October 13, 2009

குரங்கின் நடை .

சார்லஸ் டார்வின் முதல் நூல் " இயற்கை பிரிநிலைத் தத்துவம் " ( THEORY OF NATURAL SELECTION ) 1842 - ல் வெளிவந்தது . அறிவியல் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்த புத்தகம் அது . அதில் குரங்குகளின் சுபாவத்தை ஆய்வுக்குள்ளாக்கி இருந்தார் . குரங்கு நடக்கும்போது பின்னங்கால்களில் ஒன்றான வலது காலை எடுத்து வைத்தால் , அதே நேரத்தில் முன்னங்கால்களில் இடது கால் அடி எடுத்து என்றும் , முன்னங்கால்களில் வலது கால் அடியெடுக்கும் போது பின்னங்கால்களில் இடதுகால் அடியெடுத்து வைக்கிறது .என்றும் , இவ்விதமே இடது வலதாக நான்கு கால்களும் செயல்படுகின்றன . இதே போல்தான் மனிதனும் நடக்கிறான் . " மனிதன் தனது வலது காலை அடியெடுத்து வைக்கும்போது அவனது இடது கை முன்னே செல்கிறது . வலது கை முன்னே வீசிச் செல்லும்போது இடது கால் அடியெடுக்கிறது . ஏறக்குறைய நடக்கும் முறையில் குரங்கும் மனிதனுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதைக் காண்கிறோம் " என அந்த நூலில் டார்வின் அடிக்கோடு போட்டுக் காட்டியுள்ளாராம் !
--- அ. ப. சங்கர் , அம்பாபுரம் . பாக்யா , ஜூன் 19 - 25 ; 2009 .

Monday, October 12, 2009

அம்மாடியோ...

* காட் என்பது அட்லாண்டிக் சமுத்திரத்தில் காணப்படும் ஒருவகை மீன் . இது ஒரு தடவைக்கு 60 லட்சம் முட்டைகள் வரை இடக்கூடியது . ஆனால் , முட்டை பொறித்து மீன் குஞ்சாகி வெளிவருவது அதிலே நான்கு அல்லது ஐந்துதான் . அத்தனை குஞ்சுகளும் உயிர் வாழ்ந்தால் அட்லாண்டிக் மகா சமுத்திரமே மீன் மயமாகிக் கடல் நீர் நிலத்தில் புகுந்து விடுமாம் .
* ஆமைகள் ஒரு இடத்தில் முட்டையிட்டால் மீண்டும் அடுத்த ஆண்டு அதே இடத்தில் சென்று முட்டையிடுமாம் .
* உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் டவர் கட்டி முடிக்கப்பட்ட 120 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு மிகப்பெரிய விழாக்களை அங்கே கொண்டாடினார்கள் . உலகிலேயே ஒவ்வொரு ஆண்டும் மிக அதிக அளவில் உல்லாசப் பயணிகள் வந்து ஈஃபிள் டவரை காண்கிறார்கள் .
* மனித உடலில் மிகவும் சுறுசுறுப்பான பகுதி இதயமோ , மூளையோ அல்ல . கண்களிலுள்ள தசைப்பகுதிகள்தான் .
* அமெரிக்காவிலுள்ள உடா பல்கலைக் கழக மருத்துவ அறிஞா ஜேம்ஸ் நார்த் , பூண்டு உணவு உண்டு வந்தால் வைரஸ் பாக்டீரியாக்கள் அழிவதுடன் , உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது என்பதை தன் ஆராய்ச்சி மூலம் வெளிப்படுத்தியுள்ளார் .
* ஒரு கப்பலின் மேல் மஞ்சள் வண்ணக் கொடி பறந்தால் அதில் இருக்கும் பயணிகளுக்கு தொற்று நோய் இருக்கிறது என்று பொருள் .
* நீர் யானை ஒரு ரத்தம் சிந்தும் உயிரினம் . பன்றியினத்தைச் சேர்ந்ததான இதன் உடலில் , எண்ணெய் போன்ற சிவப்பு நிற திரவம் கசியும் . அதனால் , இதன் வியர்வையை ' இரத்த வியர்வை ' என்றே கூறுவர் .
* குட்வின் என்பவர் சுவாமி விவேகானந்தரிடம் சுக்கெழுத்தாலராகப் பணியாற்றினார் . விவேகானந்தரின் சொற்பொழிவுகள் அனைததையும் சுருக்கெழுத்தில் பதிவு செய்து , நமக்கு தந்த பெருமை ஜே. கே. குவினையேச் சாரும் .
* விருந்தில் பிரியாணி கூடவே கத்தரிக்காய் கூட்டும் வைக்கிறாங்களே ஏன் தெரியுமா? சாப்பிடுகிற பிரியாணிக் கறியில் உள்ள ' கொலஸ்ட்ரால் ' சாப்பிடுறவர் உடல்ல சேர்ந்துக்காம இருக்கிறதுக்காகத்தான் கத்தரிக்காய் கூட்டாம் .
* அதிக இரைச்சலைக் கேட்பதால் காது மந்தமாகிப் படிப்படியாகச் செவிடாகும் . அதிக ஓசையை ஈர்க்கும் ஆற்றல் நெட்டி லிங்க மரத்திற்கு உண்டு . வீடுகளில் நெட்டிலிங்க மரத்தை வளர்த்தால் காதுகளைக் காக்க முடியும் .
* 21 ல்ட்சம் பேர் இந்தியாவில் லட்சாதிபதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர் .
* இறப்பு நேர்ந்த 6 மணி நேரத்துக்குள் கண் தானம் செய்யலாம் . ஒருவரின் இரு கண்கள் இருவருக்குப் பார்வை கொடுக்கும் . கண் தானம் பெற்றவரின் கண்ணைக் கூட அவர் இறப்புக்குப் பிறகு , மற்றவருக்குத் தானமாகத் தரலாம் .
* பெண்ணின் ஆடையை ஆண் உடுத்திக்கொள்வதற்கு ( அ ) ஆணின் ஆடையைப் பெண் உடுத்திக்கொள்வதற்கு Cross Dressing என்று பெயர்

Sunday, October 11, 2009

உயரத்துக்கேற்ற உடல் எடை !

இந்தியர்களின் சராசரி உயரம் 150 செ.மீ. என்பது பாரம்பரியத்தின் வழியில் அமைவது . உடல் எடையைப் பொறுத்தமட்டில் , பெரும்பாலும் அதுவும் வழித் தோன்றலாக அமைவதுதான் .
20 - 25 வயதில் , ஒரு ஆண் அல்லது பெண் எந்த்ளவு உடல் எடையுடன் இருக்க வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம்தான் . இந்த வயதில் ஒரு பெண் அல்லது ஆண் 150 செ. மீ. உயரம் இருந்தால் , சராசரியாக அவர் 50 கிலோ உடல் எடையுடன் இருக்க வேண்டும் . அத்துடன் , இந்த உடல் எடையுடன் 1 - 2 கிலோ அதிகமாகக் கூட இருக்கலாம் .
அதாவது , மொத்த உயரத்தில் 100 செ. மீ. உயரத்தைக் கழித்த பின்னர் உள்ள 50 செ. மீ. அளவைத்தான் உங்கள் உடல் எடையாக ( 50 கிலோவாக ) கணக்கிட வேண்டும் . 160 செ. மீ. உயரம் இருந்தால் 60 கிலோ எடையாக மாற்றிக் கொள்ளவும் . இந்த அளவீடு சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டதோடு , ஆரோக்கியமான மனிதரின் உடல் எடையும் இதுதான் .
--- தினமலர் , ஜூன் , 13 . 2009 .

அம்பானி !

ஒரு கட்டத்தில் , இந்தியாவின் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாரிசுகளான முகேஷ் அம்பானியும் , அனில் அம்பானியும் . இந்த இருவரில் , முகேஷ் அம்பானி தம் ஊழியர்களிடையே ஒருநாள் மனம் விட்டுப் பேசும்போது , தம் வெற்றியின் இரகசியத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் .
" பகவான் கிருஷ்ணனைப் போல மாறுபட்டும் வித்தியாசமாகவும் ( Innovative ) சிந்தியுங்கள் ."
" அர்ஜுனனைப் போல் எதுஒன்றையும் , திட்டமிட்டுத் திறம்படச் செயல்படுத்துங்கள் . ( Execution )".
" யுதிஷ்டிரனைப் போல உரிமை உணர்வு கொள்ளுங்கள் . தொழிலில் வெற்றி பெற மட்டுமல்ல , தனிப்பட்ட வாழ்வில் வெற்றி பெறவும் , இதே விதிதான் ; வெற்றிக்கு வேறு எதுவும் தேவையில்லை . அதாவது நம் நிறுவனம் என்று நினைத்து செயல்படுங்கள் " என்றாராம் .
--- லேனா தமிழ்வாணன் , குமுதம் . 17 - 06 - 2009 .

Saturday, October 10, 2009

வானவில் !

வானவில்லைப் பார்த்தால் ' பரவசமாக இருக்கிறது '.என்று குறிப்பிடுவோம் .
' பர ' என்றால் ' தெய்வீகம் ' ; ' வசம் ' என்றால் ' மூழ்குதல் ' ; ' பரவசம் ' என்றால் ' தெய்வீக உணர்வில் மூழ்குதல் ' என்று அர்த்தம் .
வானவில் நம்மை பரவசப்படுத்துகிறது ; நெருக்கமானவர்களை சிந்தித்தாலோ , நேரடியாக சந்தித்தாலோ பரவசப்படுகிறோம் .
அப்படியானால் ...
வானவில் நமக்கு நெருக்கமானதா ?
ஆம் ! வானவில்லுக்கும் நமக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்க்கலாம் ...
வானவில்லில் ஊதா , அடர்நீலம் , நீலம் , பச்சை , மஞ்சள் , இளம்சிவப்பு ( ஆரஞ்ச் ) , சிவப்பு என ஏழு நிறங்கள் . நாம் ' வசிக்கும் ' உடலுக்குள்ளும் இதே ஏழு நிறங்கள் இதே வரிசைப்படி அமைந்துள்ளன .
சகஸ்ராஹாரம் , ஆக்ஞா , விசுத்தி , அநாகதம் , மணிபூரகம் , சுவாதிஸ்தானம் , மூலாதாரம் ஆகிய ஏழு சக்திமையங்கள் ( சக்கரங்கள் ) நமது உடலை இயக்குகின்றன .
உச்சந்தலையில் இருக்கும் சகஸ்ராஹார சக்கரத்தின் நிறம் ஊதா , புருவமத்தியில் இருக்கும் ஆக்ஞாவின் நிறம் அடர்நீலம் , தொண்டைப் பகுதியில் இருக்கும் விசுத்தியின் நிறம் நீலம் , இதயப் பகுதியில் இருக்கும் அநாகதத்தின் நிறம் பச்சை , மேல்வயிறு பகுதியில் இருக்கும் தொப்புள் பகுதியான மணிபூரகத்தின் நிறம் மஞ்சள் , தொப்புளின் கீழாக இரு விரற்கடை தூரத்தில் இருக்கும் நீர்வாய்ப் பகுதியான சுவாதிஸ்தானத்தின் நிறம் இளஞ்சிவப்பு , முதுகுத்தண்டின் கீழ்முனையில் இருக்கும் மூலாதாரத்தின் நிறம் சிவப்பு .
சூரியனின் வெண்ணிற ஒளியில் ஊதா முதல் சிவப்பு வரையிலான ஏழு நிறங்கள் உள்ளன என்பதைத்தான் ,' சூரியக்கடவுள் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருகிறார் ' என்று ஆன்மிகம் குறிப்பிடுகிறது !
முதுகுதண்டின் கீழ் 'ஓம் ' என்று நினைத்து , அதற்கு மேலே இருக்கும் குறிக்கு சற்றுமேலே ' ந ' என்று நினைத்து , தொப்புள்கொடி புள்ளியில் ' ம என்று நினைத்தும்,
இருமார்புகாம்புகளுக்கு மத்தியில் உள்ள குழியில் ' சி ' என்று நினைத்தும் , தொண்டைக்குழி மத்தியில் ' வா ' என்று நினைத்தும் , இரு புருவமத்தியில் ' ய ' என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் .
அதிசய சிற்பம் !
ராமாயணத்தில் வரும் வாலி சுக்ரீவன் சண்டையிடும் போது நடந்த சம்பவங்களைக் காண வேண்டுமா ? அப்படியெனில் நாம் செல்லவேண்டிய தலம் தாராசுரம் அ / மி ஐராவதீஸ்வரர் திருக்கோவிலாகும் .
இங்கு வாலியும் , சுக்ரீவனும் சண்டையிடும் காட்சி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பத் தூணில் இருந்து பார்த்தால் ராமனின் சிற்பம் உள்ள தூண் தெரியாது . அதுபோல் ராமன் மறைந்திருந்து அம்பு தொடுக்கும் சிற்பம் இருக்கும் தூணிலிருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் சண்டையிடும் தூண் தெரியும் . ராமாயணத்தில் வரும் வாலி , சுக்ரீவன் சண்டையை நேரில் பார்ப்பதுப் போல் இக்காட்சி அமைந்திருக்கும் . தாராசுரம் சிற்பங்களுக்கு பெயர் பெற்றது என்பது தெரியும் .
--- தினமலர் , பக்திமலர் , ஜூன் 11 , 2009 .

Friday, October 9, 2009

அஷ்டபந்தன மருந்து !

கும்பாபிஷேகத்துக்கு முன்னால் சுவாமிக்கு மருந்து சாத்துவார்கள் . சிலைகள் பீடத்துடன் கெட்டியாக பற்றிக் கொள்வதற்கு மருந்து சாத்துவது வழக்கம் . புளிப்பான பொருள்களை மண்டலாபிஷேகம் முடியும் வரை அபிஷேகத்தில் பயன்படுத்த மாட்டார்கள் .
கும்பாபிஷேக மருந்தை மூன்று பொருள்களாலும் , எட்டு பொருள்களாலும் தயாரிப்பார்கள் . மூன்று பொருள்களால் தயாரிப்பது திரிபந்தனம் என்றும் , எட்டுப் பொருள்களால் தயாரிப்பது அஷ்ட பந்தனம் என்றும் சொல்லப்படும் . பொன்னையே உருக்கி வார்ப்பதும் உண்டு . அதற்கு சுவர்ணபந்தனம் என்று பெயர் .
அஷ்ட பந்தனத்தில் எட்டு வகையான பொருள்களை சேர்ப்பார்கள் . சேர்ப்பதற்கு கணக்கு உண்டு .
கொம்பரக்கு பங்கு 1 .
கருங்குங்கிலியம் பங்கு 3 .
சுக்கான் பங்கு - முக்கால் .
காவிக்கல் - பங்கு 3 .
வெண்மெழுகு பங்கு 3 .
வெண்ணெய் பங்கு 3 .
செம்பஞ்சு பங்கு 3 .
சாதிலிங்கம் பங்கு - கால் .
ஆகியவற்றை ஒன்று சேர்த்து உலக்கையால் தொடர்ந்து இடிப்பார்கள் . இடி படப்பட வெண்ணை உருகும் . நல்ல மெழுகு பதத்தை அடையும் . மெழுகு பதத்தில் சூட்டுடன் இருக்கும் மருந்தினை எடுத்து சாத்துவார்கள் .
இந்த நாட்களில் முன்பு போல தொடர்ந்து பலரும் கூடிநின்று மாறி மாறி உலக்கையால் இடித்து மருந்தை தயாரித்து சாத்துவது குறைந்துபோய் விட்டது . சட்டியிலிட்டு சூடாக்கி மெழுகு பதத்தில் சாத்துகிறார்கள் .
--- தினமலர் , பக்திமலர் . ஜூன் 11 . 2009 .

Thursday, October 8, 2009

ஆட்டிஸம் .5 மரங்கள் !

ஆட்டிஸன் நோயைப் பற்றி முதன்முதலாக ஆராய்ந்த ' ஹான்ஸ் ஆஸ்டர்கர் ' என்ற மருத்துவ விஞ்ஞானியின் நினைவாக ஆட்டிஸம் நோய் ' ஆஸ்டர்கர் சிண்ட்ரோம் ' என்று அழைக்கப்படுகிறது . .
5 மரங்கள் !
பாற்கடலில் ஐந்து கற்பக மரங்கள் தோன்றின . அவை பஞ்ச தருக்கள் . கற்பக மரம் , பாரிஜாதம் , ஹரிசந்தனம் , சந்தனம் , மந்தாரம் என்பவை அவை .
பூலோகத்து கற்பக மரம் பனை மரம் . சிவபெருமான் திருப்பனந்தாளில் பனை மரத்தின் கீழ் இருக்கிறார் .
பூலோக பாரிஜாதம் , பவள மல்லிகை . இதன் கீழ் இருப்பவர் பாரிஜாதவனேஸ்வரர் . பூவுலகில் சந்தனமரம் உண்டு . ஹரிசந்தனம் பெருஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது . மந்தார மரம் சிதலைப்பதியில் உள்ளது .

Wednesday, October 7, 2009

ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் !

லண்டன் மாநகர காவல்துறையின் தலமையகம் தான் ஸ்காட்லாந்து யார்டு என்று அழைக்கப்படுகிறது . 20 மாடி கட்டடமான அதன் வாசலில் உள்ள பிரபலமான சுழல் பெயர்ப் பலகையை , அடிக்கடி திரைப்படங்களிலும் , செய்திகளிலும் நாம் பார்க்கலாம் .
1829 -ம் ஆண்டிலிருந்து ஸ்காட்லாந்து யார்டு செயல்பட்டு வருகிறது . அதனுடைய புகழ்பெற்ற டெலிபோன் எண்ணான 1212 இன்று வரை மக்களிடையே பிரபலம்
பல லண்டன் மாநகர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தலில் ஸ்காட்லாந்து யார்டு புகழ் வேகமாகப் பரவ ஆரம்பித்தது .
ஆயிரக்கணக்கான போலீஸ்காரர்கள் அங்கே பணி புரிகின்றனர் . துப்பறியும் கலையில் பல நவீன முறைகளை அறிமுகப்படுத்தி , தீர்க்க முடியாத பல கேஸ்களைத் தீர்த்து வைத்தது ஸ்காட்லாந்து யார்டு .
உலகெங்கிலும் , பல நாடுகளிலிருந்தும் புலனாய்வுக்காக வரும்படி ஸ்காட்லாந்து யார்டுக்கு ஏராளமான அழைப்புக்கள் வந்திருக்கின்றன . சமீபத்தில் கூட பெனசிர் புட்டோவின் கொலையில் இருந்த மர்மங்களை விடுவிப்பதற்காக யார்டை வரவழைத்தது பாகிஸ்தான் அரசு . இதெல்லாம் ஸ்காட்லாந்து யார்டின் முன்னாள் சிறப்பு அம்சங்கள் . இப்போது பழைய பெருங்காய டப்பாவாக ஆகிவிட்டது . அமெரிக்க போலீஸ் தான் இப்போது நம்பர் ஒன் .
--- தினமலர் , ஜூன் 12 . 2009 .

Tuesday, October 6, 2009

தமிழ் அறிஞர் !

பெரியார் ஈ. வெ.ரா. வின் விடுதலை பத்திரிகையில் ' விடுதலை ' என்றும் , தலைவர் என்றும் வெளிவந்ததைப் பார்த்திருக்கிறோம் . இப்படி எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் , பாகல்பட்டு வே . மாணிக்க நாயகர் என்ற ஒரு தமிழ் அறிஞர் . நான்காவது தமிழ்ச் சங்க உறுப்பினராக இருந்த இவர்தான் , ஆங்கில F உச்சரிப்பைத் தமிழில் எழுதும்போது 'ஃ ' ( காஃபி ) எழுத்தைப் பயன்படுத்தவும் காரணமாக இருந்தவர் .
இவர் பொறியியல் நிபுணராக இருந்தவர் . சிறந்த நூலறிவும் படைத்தவர் . ஜோதிடத்தில் பிறர் வியக்கும் வல்லமை பெற்றிருந்தார் .

Monday, October 5, 2009

குடிக்காதீங்க...

தண்ணீர் குடிக்கலாம் . ஆனால் , பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தாதீர்கள் என்று அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக உடல்நல
ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள் . ஏனெனில் பாட்டிலில் உள்ள பைபீனால் ஏ என்ற வேதிப்பொருளானது , அதில் அடைக்கப்பட்ட தண்ணீரில் கலக்கிறதாம் . இதனால், மனிதர்களிடத்தில் மரபு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துகிறதாம் . இந்த அறிவிப்பை சில சோதனைகளுக்குப் பிற்கே ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட்டுத்தியுள்ளார்கள் .
ஸ்டெயின்லஸ் ஸ்டீலினால் ஆன பாட்டிலில் , குளிர்ந்த நீரையும் , சூடான நீரையும் வைத்திருந்து 77 பேரை பருகச் செய்து பரிசோதித்துப் பார்த்ததில் பைபீனால் ஏவின் அளவில் எந்த மாற்றமும் இல்லை . ஆனால் , இதேபோல் நீரை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து , அதே 77 பேரிடம் சோதித்தபோது , அவர்களின் ரத்தத்தில் ' பபீனால் ஏ 'வின் அளவு அதிகரிச்சிருக்காம் .
இந்த பபீனால் ஏ , மனிதர்களுக்கு இதய நோய் மற்றும் சர்க்கரை நோயை ஏற்படுத்துமாம் . நம்ம ஊர்ல தாய்மார்கள் எல்லாம் குழந்தைகளுக்கு பாலை கொஞ்சம் சூடாக பாட்டிலில் அடைத்து கொடுப்பது வழக்கம் . இப்படி சூடாக கொடுத்தால் , பபீனால் ஏவின் அளவு அபாயகரமான அளவிற்கு குழந்தைகளின் ரத்தத்தில் கலந்து விடுகிறதாம் . இப்படிப்பட்ட அபாயகரமான பாட்டில்களை கடந்த ஆண்டே கனடா தடைசெய்துவிட்டதாம் . தற்போது சிகாகோவும் தண்ணீர் பாட்டிலுக்கு தடை விதித்துள்ளது . நம்ம நாடு எப்போங்க ?
இலையில் மாசு !
லண்டனில் உள்ள லாங்கஸ்டர் பல்கலைக்கழகம் புதுசா ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடிச்சிருக்காங்க . அதாவது காற்றினால் ஏற்படும் சுகாதாரக்கேடு . அதோட , காற்றில் கலந்துள்ள மிக மிக நுண்ணிய வேதிப்பொருள்களையெல்லாம் மிகத் தெளிவாக கண்டுபிடிச்சுச் சொல்லுதாம் மர இலைகள் , கார் புகையில் ஹைட்ரோ
கார்பன் , விஷவாயுக்கள் எந்த அளவு கலந்திருக்கிறது என்று மர இலையை வைத்தே கண்டுபிடித்துவிடலாம் என்று அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பார்பரா மாஹர் கூறியுள்ளார் . இந்த மிதமிஞ்சிய தூசிக் காற்றினால் ஏற்படும் சுகாதாரக்கேடால் , மனிதர்களுக்கு மூளையிலிருந்து ஈரல் வரை அனைத்தும் கெட்டுப் போக வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள் . முதலில் சாலையோரத்தில் இருந்த 30 மரங்களில் உள்ள சில இலைகளை ஆய்வுசெய்தபோது , அந்த இலையில்படிந்திருந்த மாசுக்கள் அனைத்துமே மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் .
--- தினமலர் வாரமலர் . ஜூன் 7 . 2009 .

Sunday, October 4, 2009

தி ' மம்மீ ' ஸ்.

எகிப்து தலைநகர் கெய்ரோவின் தென்பகுதியில் சக்கோரா என்னும் இடத்தில் 2, 600 ஆண்டுகளுகள் பழமையான பிரமீட்டை கண்டுபிடித்துள்ளார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள் .
இந்த சமாதியில் 30 மம்மிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்லார்கள் . இந்த மம்மிகள் தரையிலிருந்து 36 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தன என்று எகிப்தின் தலைசிறந்த அகழ்வாராச்சியாளர் சாஹி ஹவாஸ் கூறியுள்ளார் . இந்த மம்மிகளைப் பார்க்கும்போது , இவை எகிப்தின் 26 வது வம்சம் ஆண்ட காலம் தொடர்பாக இருக்கலாம் . அதுமட்டுமல்லாது ஒரு கல்லினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட மம்மிகள் இருக்கின்றன . இந்த மம்மிகள் அனைத்தும் முழுவதுமாக உருக்குலைந்துள்ளன என்றும் , ஒரே சவப்பெட்டியில் ஒன்றுக்கும்மேற்பட்ட உடல் கூறுகள் இருப்பதற்கான காரணமும் புரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Saturday, October 3, 2009

சமாதி ! லவ்வுக்கும் டிஎன் ஏ .

சமாதி !
சமாதியில் 2 வகைகள் உண்டு . இறந்து போன அந்த உடலை சமாதியில் வைப்பது ஒருவகை . இதுதான் பெரும்பாலும் நடக்கும் . இன்னொரு வகை அபூர்வமானது .ஞானிகள் உயிரோடிருக்கும்போதே தாமே சென்று ஜீவ சமாதியில் அமர்வதாகும் . 8 வகையான யோகங்களில் , இது இறுதி நிலை . சமாதி நிலை என்பார்கள் .
லவ்வுக்கும் டிஎன் ஏ .
அவளை முதல் முறையாக பார்த்ததுமே எனக்கு காதல் வந்திருச்சுன்னு நிறைய பேர் சொல்றதை நாம் கேட்டிருப்போம் . அது எப்படி பார்த்த உடனேயே லவ்ஸ் வந்துச்சு.... அப்படீன்னு நாமளும் யோசிச்சிட்டு இருப்போம் . அதையும் ஆராய்ச்சியாளங்க... நைட்டு பூரா யோசிச்சு கண்டுபிடிச்சுட்டாங்க .
அதாவது சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியைச்சேர்ந்த டிஎன் ஏ ஆராய்ச்சியாளர் தாமரா பிரவுன் சொல்றது இதுதாங்க... நாம ஒரு பொண்ணை கண்கொண்டு பார்த்ததும் அவ மேல நமக்கு ஒரு இது வந்துச்சுன்னா நம்ம உடம்புல உள்ள ஒருவகையான அமிலம் சுரக்குமாம் . இதுதான் காதல் பாக்டீரியாவாம் . இது வந்தவங்க கண்டிப்பா காதல் பண்றாங்கன்னு அர்த்தம் . அதுமட்டுமல்லாம இந்த அமிலம் டிஎன் ஏ பரிசோதனையில் பளிச்சுன்னு தெரிஞ்சுடும் என்கிறார் ஆராய்ச்சியாளர்

Friday, October 2, 2009

கிளியோபாட்ரா !

கிளியோபாட்ராவின் காலக்கட்டம் கி.மு. 69 முதல் கி.மு. 30 வரை . தந்தை 12 -ம் தாலமியுடன் இணைந்து எகிப்தை ஆட்சி செய்தவர் . உடன் பிறந்த சகோதரர்களை மணந்துகொள்ளும் வழக்கம் அப்போது நடைமுறையில் இருந்தது . கிளியோபாட்ரா தன் சகோதரர்களான 13 -ம் தாலமி , 14 -ம் தாலமி இருவரையும் மணந்துகொண்டார் . தந்தைக்குப் பிறகு இவர்கள் இருவருடனும் கிளியோபாட்ரா அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டார் . நாளடைவில் , அதிகாரம் முழுமையாக கிளியோபாட்ராவிடம் சென்று குவிந்தது . எகிப்தின் தனி அரசியாக மாறினார் .
கிளியோபாட்ராவுக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் . ஒரு பிள்ளை ஜூலியஸ் சீஸருடையது . தாலமி சீஸர் என்பது இவன் பெயர் . மார்க் ஆன்டனி மூலம் கிளியோபாட்ராவுக்கு இரட்டையர்கள் பிறந்தனர் . இரண்டாம் கிளியோபாட்ரா செலீன் , அலெக்ஸாண்டர் ஹெலியோஸ் , பிறகு , மேலும் ஒரு மகன் . தாலமி பிலடெல்பஸ் . தன் சகோதரர்கள் மூலமாகக் கிளியோபாட் ராவுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை .
கூர்மையான அறிவும் , செயல் திறனும் , ராணுவ பலமும்கொண்டு இருந்தவர் என்று சரித்திரம் கிளியோபாட்ராவை நினைவுகூர்கிறது . கிளியோபாட்ரா உலக அழகியா ? அப்படி ஒன்றும் இல்லை என்கிறார் பண்டைய சரித்திர ஆசிரியரான ப்ளூடார்க் . கண்டெடுத்திருக்கும் நாண்யங்களைக்கொண்டும் இது நிரூபணமாகிறது .
கிளியோபாட்ரா குறித்த பல வதந்திகள் சீஸரின் மகன் அகஸ்டஸால் கிளப்பிவிடப்பட்டவை என்று ஐலர் கருதுகிறார்கள் .
நவீன முறையில் செய்யப்படும் டி.என். ஏ. பரிசோதனை கிளியோபாட்ராவை மீண்டும் உலகத்துக்கு அறிமுகம் செய்துவைக்கும் .
--- மருதன் , ஆனந்தவிகடன் .03 - 06 - 2009 .