Friday, August 14, 2009

விமானம் .

கன்கார்டு விமானம் .
உலக உருண்டையை வலம் வர மனிதன் பல மாதங்கள் எடுத்துக்கொண்ட காலம் ஒன்று இருந்தது .ஆனால் , காலப்போக்கில் நவீன தொழில் நுட்பங்களின் பலனாக சில மணி நேரங்களில் உலகைச் சுற்றி வரும் நிலையும் ஏற்பட்டது . கன்கார்டு விமானத்தின் வருகைக்குப் பின்னர்தான் இது சாத்தியப்பட்டது . ஒலியை விட வேகமாக பயணிக்கும் கன்கார்டு விமானம் முதன்முதலாக பறந்த நாள் மார்ச் 27 .
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகளின் விந்தை தயாரிப்பான இந்த விமானத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 2 ஆயிரத்து 179 கிலோ மீட்டர் .
அதாவது காற்றில் ஒலி பரவும் வேகத்தைவிட இது 2 மடங்கு அதிகம் . லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு இந்த விமானம் அரை மணி நேரத்திற்குள்ளாகவே சென்று விடும் . இதற்கான பயணக்கட்டணம் 5 லட்ச ரூபாய் . வேகமான வான் பயணத்தில் கன்கார்டு பல சாதனைகளைப் படைத்தது .1970 களிலேயே கன்கார்டு உருவாக்கப்பட்டு விட்டாலும் வர்த்தக ரீதியாக இது 1976-ல் தான் சேவையை தொடங்கியது . மொத்தம் இது போன்று 20 கன்கார்டு விமானங்கள் தயாரிக்கப்பட்டன .
பிரிட்டிஷ் ஏர்வேஸ் , ஏர் பிரான்ஸ் , சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற பிரபல விமான நிறுவனங்கள் இதை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி இயக்கின .ஆனால் லண்டன் -- பாரீஸ் , லண்டன் -- நியூயார்க் மார்க்கங்கள் தவிர மற்ற மார்க்கங்களில் இது பெரும் நஷ்டத்தையே தந்தது .
எரிபொருளை பீப்பாய் பீப்பாயாக குடித்ததும் , கட்டணங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருந்ததும்தான் இந்த நஷ்டத்துக்கு காரணம் . இதனால் கன்கார்டு விமானங்கள் மெல்ல மெல்ல சேவையில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன . கடைசியாக 2003-ம் ஆண்டுதான் கன்கார்டு பறந்தது . அதற்குப் பிறகு பறக்கவேயில்லை .அதாவது கன்கார்டு விமானம் கடைசியில் காயலான் கடை சரக்காகிவிட்டது .
வர்த்தக ரீதியில் கன்கார்டு ஜெயிக்காவிட்டாலும் தொழில்நுட்ப ரீதியில் இது உலக அதிசயங்களில் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது .
--- தினமலர் . 27 - 03 - 2009 .

No comments: