Friday, July 31, 2009

எவ்வளவு ?

இராமபிரானின் தாயான கௌஸல்யை காலமான சமயம் இராமர் அதிகமான தான தற்மங்களைச் செய்தாராம் . பிறகு குருவான வசிஷ்டரை வணங்கி , " ஸ்வாமி ! நான் நிறையத் தான , தர்மங்களைச் செய்தேன் . கோடிப் பசுக்களை ' கோதானம் ' செய்து விட்டேன் . இதனால் என் பிரியமான தாயின் மனம் மகிழ்ச்சி அடைந்திருக்குமா ? " -- என்று கேட்டாராம் .
அதற்கு வசிஷ்டர் , " அப்பனே ! ஒரு சமயம் உன் தாய் உன்னை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும்போது நான் எதிரில் வந்தேன் என்று உட்கார்ந்திருந்தவள் இடக் கையைத் தரையில் ஊன்றிக் கொண்டு சிரமத்துடன் எழுந்து கொண்டாள் . அந்த ஒரு சிரமத்துக்கு ஈடாகாது உன் கோதானம் " --- என்றாராம் . இராமர் தலை குனிந்தாராம் .
--- ' தாயின் மகிமை ' பற்றி என். டி. ராஜகோபால் சர்மா அவர்கள் கூறியது .

No comments: