Sunday, July 12, 2009

எறும்புகள் .

எறும்புல வேலைக்கார எறும்புனு ஒரு வகை இருக்கு . எங்கேயாவது உணவுப் பண்டம் இருக்குதானு அங்கே இங்கே தேடிப் பார்க்கிறதுதான் இந்த எறும்புகளுக்கு வேலையே . அப்படி எதையாவது பார்த்ததும் உடனே தன் குழு இருக்கிற இடத்துக்கு வேகமா திரும்பிவரும் . வர்றப்பவே மத்த எறும்புகளுக்கும் இந்த நியூஸை சொல்லனும் இல்லையா ... அதுக்காக , வயித்தைத் தரையோட அழுத்தி ஒருமாதிரியான வாசனையை உருவாக்கிட்டே வரும் . இந்த வாசனையை மோப்பம் பிடிச்சு மத்த எறும்புகளும் சுறுசுறுப்பா பண்டம் இருக்கிற இடத்துக்கு போய்ச் சேரும் .
அட... இத்தனூண்டு எறும்புக்கு எத்தாம் பெரிய அறிவு !
" துணிகளைக் காயவைக்க வெயில் தேவைப்படுது ஆனா , அதிக நேரம் வெயில்ல இருந்தா துணியோட கலர் வெளுத்துடுதே அது ஏன் ?"
"துணிகள்ல உள்ள சாயங்க்ள்ல கெமிக்கல் கலந்திருக்கு சூரிய ஒளியில் இருக்குற புற ஊதாக் கதிர்களோட சக்தி அந்த கெமிக்கல்களை போக்கிடுது . அதனாலதான் துணி வெளிறிப் போயிடுது ."
" வெயில்ல இருந்தா துணி வெளுத்துடுது... ஆனா , மனுஷங்க நாம மட்டும் ஏன் வெயில்ல இருந்தா கறுத்துப் போறோம் "
" தோலுக்கு சூரிய ஒளியால பாதிப்பு வரக்கூடாதுனுதான் நம்ப தோலோட கீழ்ப் பகுதியில மெலனின்னு ஒரு பொருள் தங்கியிருக்கு . நம்ப உடம்பை சூரிய ஒளி தாக்கினதும் அந்த மெலனின் வெளியே வருது . அதனாலதான் தோல் கறுப்பாயிடுது ."
" ஒட்டகத்தின் முதுகுல இருக்குற மேடான பகுதியில அது தண்ணியை சேமிச்சு வச்சுக்குதுனு சில பேரு தப்பா நினைச்சுக்கிறாங்க . உண்மையில அந்த இடத்துல கொழுப்பைத்தான் ஒட்டகம் சேமிச்சு வைக்குது . பாலைவனத்துல போகும்போது சரியா தீனி கிடைக்கலைன்னா , அந்த கொழுப்பைக் கரைச்சு உடம்புக்குத் தேவையான சத்துக்களை எடுத்துக்குது . கொழுப்பு கரைஞ்சதும் ஒட்டகத்தோட திமில் அடங்கிடும் . அப்புறம் நல்ல தீனியும் ஓய்வும் கிடைச்சுட்டா , பழைய மாதிரி ஆகிடும் ."
--- ஜி.எஸ்.எஸ். தஞ்சம்மா.. மஞ்சம்மா ! அவள் விகடன் , .

No comments: