Wednesday, July 1, 2009

யூரிககார்.

சோவியத் ரஷ்யா அனுப்பிய வஸ்கோக் 1 விண்கலத்தில் பயணித்த யூரி ககாரின் என்ற விண்வெளி வீரர் விண்ணில் பறந்த முதல் மனிதர் என்ற பெருமையை 1961 ம் ஆண்டு ஏப்ரல் 12 ம் தேதி பெற்றார் .
மாஸ்கோ நகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ எனும் இடத்தில் 1934 ம் ஆண்டு மார்ச் 9 ம் தேதி யூரி ககாரின் பிறந்தார் . இப்பகுதி பின்னர் ககாரின் எனப் பெயரிடப்பட்டது . இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணை ஒன்றில் பணியாற்றினர் . 1955 ம் ஆண்டில் ஒரென்பூர்க் விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்தார் . இந்த பயிற்சி மையத்தில் மிக் - 15 ரக போர் விமானங்களை ஓட்ட பயிற்சி பெற்றார் . இந்த பயிற்சியின் போது வலென்டினா கொர்யசேவா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
1960 ம் ஆண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை சோவியத் அரசு தொடங்கியது . இந்த விண்வெளித் திட்டத்தின் கீழ் 20 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர் . அவர்களில் யூரியும் ஒருவர் .
யூரி ககாரினுக்கு உடல் ரீதியாகவும் , மன ரீதியிலும் மிகவும் கடுமையான் பயிற்சிகள் தரப்பட்டன . பயிற்சிக்குப் பின்னர் ககாரின் , கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டனர் . இவர்களில் ககாரின் மட்டும் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . 1961 ம் ஆண்டு ஏப்ரல் 12 ம் தேதி வஸ்தோக் 1 விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றார் . விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்த முதல் மனிதரும் இவரே . விண்கலம் 1 மணி நேரம் 48 நிமிடம் பறந்தது .
இத்தாலி , இங்கிலாந்து , ஜெர்மனி , கனடா , ஜப்பான் ஆகிய நாடுகள் அவரின் சாதனையை வாழ்த்தின . ரஷ்யாவில் உள்ள ஸ்டார் சிட்டியில் ராணுவ ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றினார் . பின்னர் சோவியத் விமானப்படையில் லெப்டினண்ட் கர்னலாக பணியாற்றினார் .
அதன் பின்னர் அவரை வேறு எந்த விண்வெளிப் பயணத்துக்கும் ரஷ்யா அனுப்பவில்லை . ரஷ்ய விண்வெளி ஹீரோ ஒருவர் விண்வெளி விபத்தில் இறந்து விடக் கூடாது என்று ரஷ்யா கருதியது இதற்கிடையே போர் விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது 1968 ம் ஆண்டு மார்ச் 27 ம் தேதி விமானம் விபத்துக்குள்ளானது . அதில் அவரும் அவருடன் சென்ற வால்டிமர்செர்யோகின் என்பவரும் இறந்தனர் .
--- தினமலர் . 12 - 04 - 2009 ..

No comments: