Monday, July 6, 2009

3 சூரியனுடன் கிரகம் !

3 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு .
வாஷிங்டன் , ஜூலை 16 . 2005 .
மூன்று சூரியன்களுடன் தெரியும் புதிய கிரகம் விண்வெளியில் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர் .
விண்வெளியில் இருக்கும் அதிசயங்கள் பலப்பல . இதுவரை சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது கிரகங்கள் பற்றித்தான் நமக்கு தெரியும் . ஆனால் , அதற்கு அப்பால் மூன்று சூரியன்களுடன் கிரகம் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துளனர் . இந்த புதிய கிரகத்தின் பெயர் ' டடூன் '.
இது பூமியை விட ஆயிரத்து 500 மடங்கு பெரியது . இதில் இருந்து பார்த்தால் மூன்று சூரியன்கள் அருகருகே இருப்பது தெரியுமாம் . ஒரு சூரியன் மஞ்சள் நிறத்திலும் , மற்ற இரண்டு சூரியன்கள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்திலும் உள்ளதாம் . டடூன் கிரகம் பூமியிலிருந்து 149 ஒளி ஆண்டுகள் தூரம் உள்ளது . ஒரு ஒளி ஆண்டு என்பது 10 டிரில்லயன் கி. மீ . வாயுக்கள் இல்லாமல் உருவானதுதான் கிரகங்கள் என விஞ்ஞானிகள் இதுவரை நம்பி வந்தனர் . ஆனால் இந்த கருத்தை மாற்றியுள்ளது டடூன் . இது முழுவதும் வாயுக்களால் ஆனது . இது பற்றிய ஆராய்ச்சியில் இன்னும் பல புதிய தகவல்கள் தெரியவரும் . இதே போல் இன்னும் பல கிரகங்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
---தினமலர் . 16 - 07 -2005 .

No comments: